ஈசிஆர் ரிசார்ட்டில் நடிகை.. பரிதாபத்தில் பிரபல ஹீரோயின்கள்.. இதைதானே ஹேமா கமிட்டி சொல்லுது: பிரபலம்
சென்னை: பாலியல் வன்புணர்வு இல்லாத நடிகைகளே இருக்க முடியாது. திரைப்பட துறையில் பெண்கள் படுகிற பாடு கொஞ்ச நஞ்சமல்ல.. "அத்தனை பேரும் அந்தப்புரத்துக்கு வந்தால்தான் வாய்ப்பு" என்று கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கையிலேயே வெளியாகியிருக்கிறது.. தமிழகத்தில் என்ன நடக்கிறது.. அப்படியானால் ஸ்ரீரெட்டி சொன்னதெல்லாம் உண்மைதானே? என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சினிமா மற்றும் சீரியல்களில் பெண்களுக்கு நடிப்பதற்கு வாய்ப்பு வேண்டுமா அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்ற பேச்சு அரசல் புரசலாக இருந்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் சீரியலில் நடிக்கும் ஒரு துணை நடிகையின் "ஆன்லைன் ஆடிஷன்" குறித்த ஆபாச வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை தந்துருந்தது. சின்னத்திரையிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா? என்ற விமர்சனங்கள் வெடித்து கிளம்பி வருகிறது.

சின்னத்திரை, பெரியதிரை
இதுகுறித்து, BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பத்திரிகையாளர் பாண்டியன், சின்னத்திரை, பெரியதிரை என எதுவாக இருந்தாலும், பெண்கள் மீதுள்ள பார்வை, "இவர்கள் எதற்கு வேண்டுமானாலும் தயார் என்பது போலத்தான் இருக்கிறது.. இதுபோன்ற பார்வை பெண்கள் மீது பதிந்துவிடும்..
இந்த துறையில், ஆண்கள்தான் நடிகைகளுக்கு மேக்கப் போடுகிறார்கள்.. மேல்கச்சை, கீழ்க்கச்சையுடன் மேக்கப் போட வேண்டிவரும். ஒரு ஆண் தவறாக பார்த்தால், கன்னத்தில் அறையும் சமூகம் இது. இப்படிப்பட்ட சமூக அமைப்பில் ஒரு பெண் கால் நிர்வாணமாக நிற்கிறார் என்றால் அதற்கு என்ன பெயர்? இவர்கள் என்ன மாதிரியான கருத்தை வலிமையாக வைத்திருக்க முடியும்?
அட்ஜெஸ்ட்மென்ட்
டி.ராஜேந்தர் சொல்லுவார், கருப்பாக இருந்தால் நடிகையாகிவிடலாம், கற்போடு நடிகையாக முடியாது" என்பார். சினிமாவில் நடிகைகளுக்கு அட்வான்ஸ் தரும்போதே அட்ஜஸ்ட்மென்ட் பேசப்படுகிறது.. ஒப்புக் கொள்ளாவிட்டால், வேறு நடிகையை ஒப்பந்தம் செய்துவிடுவார்கள்.
ஒரு நடிகையை பற்றி சொல்லியாக வேண்டும்.. அவர் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.. ஏற்கனவே அவர் மந்திரியாக இருந்தவர்.. அந்த நேரத்தில் எதிர்க்கட்சிகள், சினிமாவில் நடிப்பதற்கு ஆபாச படத்தில் நடித்தாய் என்று அந்த நடிகையின் ப்ளூ பிலிமை எடுத்து, சட்டசபையிலேயே காட்டி விமர்சித்தார்கள்.. இதுதான் சினிமா. இதுதான் அரசியல்.
மும்பை நடிகை
இன்னொரு பிரபல நடிகை மும்பையை சேர்ந்தவர்.. ஆனால், அவர் நீலப்படத்தில் நடித்து, அதற்கு பிறகுதான் சினிமாவுக்குள் நுழைந்தார். அவர் முதன்முதலில் அறிமுகமானது கன்னட படத்தில்.. அப்போது ஒரு மிகப்பெரிய கர்நாடகாவில் கோடீஸ்வரரான தமிழர் ஒருவரின் மகனை, திருமணம் செய்ய ஆசைப்பட்டார்..
இந்த விஷயம் தெரிந்து கொந்தளித்துப்போன அந்த கோட்டீஸ்வரர், உடனே அந்த நடிகைக்கு சில லட்சங்களை தூக்கி வீசியெறிந்துவிட்டு, தமிழ்நாட்டுக்கு போ துரத்திவிட்டார்... அதற்கு பிறகு அந்த நடிகை தமிழ்நாட்டுக்கு வந்தார்.. இன்று அரசியலில் உச்சத்தில் இருக்கிறார். இதெல்லாம் 35 வருடங்களுக்கு முன்பு நடந்தது.
காப்பர் - டி
சில வருடங்களுக்கு முன்பு, ஆந்திரா அருகே விபத்தில் சிக்கிய நடிகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது காப்பர்-டி வைத்திருந்ததை கண்டறிந்தனர்.. திருமணமாகிவிட்டதா? என்று நடிகையிடம் கேட்டதற்கு இல்லை என்று பதிலளித்துள்ளார்.. திருமணமாகாமல் எதற்காக காப்பர்-டி அணிந்துள்ளீர்கள் என்று டாக்டர்களும் கேட்டிருக்கிறார்கள்.. இதுதான் நடிகைகளின் நிலைமை.
அந்தப்புரம் - நடிகைகள்
இப்படி பாலியல் வன்புணர்வு இல்லாத நடிகைகளே இருக்க முடியாது. திரைப்பட துறையில் பெண்கள் படுகிற பாடு கொஞ்ச நஞ்சமல்ல.. "அத்தனை பேரும் அந்தப்புரத்துக்கு வந்தால்தான் வாய்ப்பு" என்று கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கையிலேயே வெளியாகியிருக்கிறது.. தமிழகத்தில் என்ன நடக்கிறது.. அப்படியானால் ஸ்ரீரெட்டி சொன்னதெல்லாம் உண்மைதானே?
70 வருடங்களுக்கு முன்பு, திரைப்படங்களில் நடிப்பதற்கு, நல்ல குடும்ப பெண்களே முன்வரவில்லை. அதனால், பாலியல் தொழில் செய்தவர்களைதான் நடிகைகளாக கொண்டு வரும் நிலைமை ஏற்பட்டது. "பம்பாய் இறக்குமதி, பம்பாய் வரவு" என்று விளம்பரப்படுத்தி, அவர்களை நடிக்க அழைத்து வந்தார்கள்... இன்றுவரை பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இருந்து வருகின்றன.. எப்படி பார்த்தாலும், சினிமா துறையில் உள்ள சகோதரிகள் பாவப்பட்டவர்கள்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications