Eeramana Rojave Serial: இன்னுமா இப்படி கொடுமைகள் நடக்குது?
சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் சீர், செனத்தி, வரதட்சணை கொடுமை என்று, வீட்டுக்கு வந்த மருமகள்களை பிறந்த வீட்டுக்கே அனுப்பி வைத்துவிடுகிறார்கள்.
நாட்டரசன் வீட்டுக்கு தனது இரு மகளையும், அவரின் இரண்டு மகள்களுக்கும் கல்யாணம் செய்து கொடுத்த அவரும் நல்ல வசதிதான்.
பணத்துக்கு ஒன்றும் குறை இல்லாமல், வீடு வாசல், தோட்டம் என்று நல்ல விவசாய குடும்பம்தான். ஆனால், ஏலத்தில் போட்டி வர.அதிக ஏலத்தில் குத்தகைக்கு எடுத்துவிட்டு பணம் இல்லாமல் அவஸ்தைப் படுகிறார் பெண்ணைக் கொடுத்தவர்.

சம்பந்தி உதவி
சம்பந்தி வீட்டாரான நாட்டரசன், இருபது லட்சம் ரூபாய் பணம் நான் குடுக்கறேன்னு சொன்னாலும், தோட்டத்து பத்திரத்தை அடமானம் வச்சுக்கிட்டு, வட்டிக்கு பணம் தாங்கன்னுதான் சம்பநிதி கேட்கறார். ஆனால், இவர்தான் உங்களுக்கு போயி வட்டிக்கு பணம் தர்றதான்னு வீட்டு பொம்பளைங்களுக்கு தெரியாம இருபது லட்சம் ரூபாய் பணமும், அவர்கள் சார்பாக வரதட்சணை கொடுக்க தாங்களே பணமும் கொடுத்து அனுப்புகிறார்கள்.

அஞ்சலி வெற்றி
வெற்றியை விரும்பிய அஞ்சலி, வெற்றி அம்மாவிடம் இப்படி உங்க பிள்ளைங்களுக்கு குடுக்க வேண்டிய வரதட்சணை பணத்தை, நீங்களே குடுத்து ,உங்க மருமகள்களை அழைச்சுக்கிட்டு வந்து இருக்கீங்க...நீங்க கிரேட் அத்தைன்னு நைசா போட்டுக் கொடுத்துடறா. அப்போதுதான் விஷயம் தெரிந்த அத்தையும், நாத்தனார்களும் நேராக சம்பந்தி வீட்டுக்கு நடந்து போயி, வெளியில் நின்நு அசிங்கம் அசிங்கமா திட்டிட்டு, அவங்க மானம் போற மாதிரி ஊரே வேடிக்கை பார்க்கும்படி செய்துட்டு வர்றாங்க.

சோகத்தில் குடும்பமே
மலர், அகிலா குடுமபமே பட்ட அவமானத்தால் கூனிக் குறுகி அழுதுகிட்டு இருக்காங்க. வீடே துக்க வீடு போல கிடக்கிறது. பேசாமல் விஷத்தை சாப்பிட்டு செத்து போயிடலாம்னு பாட்டி சொல்றாங்க. மலரின் அப்பா நான் கடனாதான் கேட்டேன்... இப்படி வீட்டுக்கு தெரியாம குடுத்து, அவங்க நம்மை அவமானப் படுத்திட்டாங்களேன்னு அழறார்.

பெண்கள் இப்படியும்
பெண்கள் இப்படியும் இருப்பார்களா என்று நினைப்பது போல வெற்றியை காதலிச்ச அஞ்சலி, இன்னும் வெற்றியை கல்யாணம் செய்துக்க நினைக்கிறாளாம். அவனுக்குத்தான் மலரை கல்யாணம் செய்து, இப்போது வீட்டுக்கு அனுப்பி வச்சுட்டாங்க. இதற்கு அந்த நாத்தனார் அஞ்சலிக்கு போன் செய்து, அஞ்சலி உன் ஆசை சீக்கிரம் நிறைவேறும். மலரை அவ வீட்டுக்கு அனுப்பியாச்சு. இனி அவ்ளோ பணத்தை அவங்க அப்பனால புரட்ட முடியாது.
நீதான் இனி இந்த வீட்டு மருமகள்னு போனில் சொல்றா.. இன்னுமா பெண்கள் இப்படி இருக்காங்க?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications