கோபி-சுதாகரை விஜய் டிவி நிகழ்ச்சியில் ரிஜெக்ட் செய்ய இதுதான் காரணம்.. மனம் திறந்த ஈரோடு மகேஷ்
சென்னை: youtube தளத்தில் பிரபலமான நட்சத்திரங்களாக பரிதாபங்கள் கோபி- சுதாகர் இருந்து வருகிறார்கள்.
இவர்கள் இருவரும் ட்ரெண்டிங்கில் இருக்கும் பிரச்சனைகளை பற்றி தங்களுடைய youtube சேனல்களில் வீடியோக்களாக வெளியிட்டு அதிகமான ரசிகர்களை கவர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் இவர்கள் இருவரையும் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்காத காரணம் என்ன என்று ஈரோடு மகேஷ் தெரிவித்திருக்கிறார்.
மீம்ஸ் கிரியேட்டர்களால் அதிகமாக தேடப்படும் பிரபலங்களாக தான் இப்போ youtuber கோபி மற்றும் சுதாகர் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நையாண்டித்தனமாக ஒருவரை ஒருவர் கலாய்த்தபடி பேசிக் கொண்டிருப்பது அதிகமான ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது. அதனாலே தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் பிரச்சனைகளை பற்றி பேசி பிரபலமாகி கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் நடிகர் வடிவேலுக்கு அடுத்ததாக இவருடைய மீம்ஸ்களும் வீடியோக்களும் வைரலாகி வருகிறது. அந்த அளவிற்கு பிரபலமாக வளர்ந்து கொண்டிருக்கும் இவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்கள். ஆனால் அப்போது அவர்களை அந்த நிகழ்ச்சியில் நிராகரித்ததால் அவர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்திருக்கிறது.
ஆமாங்க இவர்கள் இருவரையும் ஆடிஷனில் இருந்து வெளியேற்றி இருக்கிறார்கள் அதற்கு பிறகு தான் youtube பக்கத்தில் கோபியும் சுதாகரும் தஞ்சம் அடைந்து இருக்கின்றனர். அந்த வகையில் இவ்வளவு நகைச்சுவையாக இருக்கும் இவர்களை எப்படி விஜய் டிவி நடுவர்கள் ரிஜெக்ட் செய்தார்கள் என்று ஈரோடு மகேஷ் மற்றும் தாடி பாலாஜி மீது சர்ச்சை எழுந்தது.
அது குறித்து சமீபத்தில் பேட்டியில் ஈரோடு மகேஷ் பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், நான் என்ன கோபி, சுதாகர் வாய்ப்பை தட்டி பிரித்தேனா? இல்லை, அந்த நேரத்தில் அவர்கள் நன்றாக நகைச்சுவை செய்திருந்தால் கண்டிப்பாக அவர்கள் அடுத்த கட்டத்துக்கு சென்றிருப்பார்கள். நல்ல பெர்பார்மன்ஸ் தான் முக்கியம். மற்றபடி அவர்கள் மீது எனக்கு எந்த தனிப்பட்ட கோபமும் இல்லை.
சில நாட்களுக்கு முன்பு கூட நிகழ்ச்சி ஒன்றில் கோபி, சுதாகரை சந்தித்தேன் அவர்கள் இருவரும் என்னிடம் நன்றாக தான் பேசினார்கள் என்று கூறியிருக்கிறார். அதோடு விஜய் டிவியில் பலரையும் நான் பாராட்டி மோட்டிவேஷன் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கும் அவர்களுக்கும் எந்த சொந்தமும் பந்தமும் கிடையாது.

ஆனாலும் நான் அவர்கள் மேலும் வளர வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். அப்படி இருக்கையில் நான் எப்படி கோபி, சுதாகரை மட்டும் வெளியேற்ற வேண்டும் என்று நினைப்பேன் என்று கூறி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications