எதிர்நீச்சல் 2 ப்ரோமோவில் நடந்த அதிசயம்.. இது வேற லெவலில் இருக்கே! இயக்குனர் கொடுத்த அப்டேட்
சென்னை: சன் டிவியில் எதிர்நீச்சல் 2 சீரியல் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது என்று அதற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே எதிர்நீச்சல் சீரியலை இயக்கிய திருச்செல்வம் தான் இந்த சீரியலையும் இயக்குகிறார்.
சமீபத்தில் சின்னத்திரையில் பெரிய புரட்சி செய்த சீரியல் என்றால் எதிர்நீச்சல் சீரியலை சொல்லலாம். இந்த சீரியல் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி 2022 ஆம் வருடம் தொடங்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த ஜூன் 8, 2024இல் 744 எபிசோடு உடன் முடிவுக்கு வந்துவிட்டது.

இந்த சீரியல் குறைந்த பட்சம் 2000 எபிசோடுகளுக்கு ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த சீரியலில் வில்லனாக நடித்து வந்த மாரிமுத்துவின் இறப்பிற்கு பிறகு சீரியலில் கதையில் மாற்றம் செய்ததால் கதை மக்கள் மத்தியில் பெரியதாக கவரவில்லை. அதோடு அதிகமான நெகட்டிவ் கமெண்ட்களும் வர தொடங்கிவிட்டது.
இதுவரைக்கும் சீரியலே பார்க்காத ஆண்கள் கூட இந்த சீரியலை பார்த்ததாக ஆரம்பத்தில் பெருமையாக பதிவுகள் வெளியாவதை பார்க்கலாம். ஆனால் மாரிமுத்துவின் இறப்பிற்கு பிறகு அதிகமான ட்ரோல்களும் நெகட்டிவ் கமாண்டுகளும் வர தொடங்கி விட்டது. இதனால் திடீரென்று இந்த சீரியலில் கதையை முடித்து விட்டார்கள்.
இதன் இரண்டாவது பாகம் எப்போது வரும் என்று எதிர்பார்ப்போடு ரசிகர்கள் இருந்தனர். அது குறித்து இயக்குனர் திருச்செல்வத்திடம் அதிகமான ரசிகர்கள் கேள்விகளும் எழுப்பி வந்தனர். இப்போது ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இந்த சீரியலில் இரண்டாவது பாகம் தொடங்கி இருக்கிறார்கள்.

அதுவும் விட்ட இடத்தில் இருந்து பயணம் தொடர்கிறது. எப்படி கதையை மாற்றினால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்களோ அதுபோலவே இந்த சீரியலின் கதை மாறப்போகிறது என்று இயக்குனர் கூறியிருக்கிறார். நேற்று இந்த சீரியலுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
விரைவில் இரண்டாவது பாகம் வரப்போகிறது என்று ப்ரோமோ வெளியானதும் அதை அதிகமான ரசிகர்கள் பார்க்க தொடங்கி விட்டார்கள். இதனால் இந்த சீரியல் youtube இல் ட்ரெண்டிங்கில்12வது இடத்தை பிடித்திருக்கிறது. முழுமையாக 24 மணி நேரம் ஆவதற்குள் எப்படியும் இந்த சீரியல் டாப் 10 இடத்திற்குள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எது எப்படியோ மீண்டும் இந்த சீரியல் 9:30 மணிக்கு ஒளிபரப்பானால் சன் டிவியின் டிஆர்பி மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் முதல் பாகத்தில் நடித்த கனிகா ஈஸ்வரியாகவும், பிரியதர்ஷினி ரேணுகாவாகவும், ஹரி பிரியா நந்தினி ஆகவும் நடிக்கிறார்கள்.
ஆனால் ஜனனி கேரக்டரில் நடித்து வந்த மதுமிதா மட்டும் இந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக பார்வதி தான் ஜனனியாக நடிக்கிறார். ஏற்கனவே இதுகுறித்து அப்டேட் நாம் ஏற்க கொடுத்திருந்தோம். அது இப்போது ப்ரோமோவில் உறுதியாகி இருக்கிறது.

பார்வதி ஜீ தமிழில் ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதுபோல ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த நிலையில் இந்த புது கூட்டணியில் எதிர்நீச்சல் சீரியல் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கலாம்.
அதிலும் இந்த இரண்டாவது பாகத்தில் வில்லனாக ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிகர் வேலராம மூர்த்தி தொடர்வாரா? அல்லது அவருக்கு பதிலாக யார் வரப் போகிறார்கள்? என்று விரைவில் தெரியவரும். அது குறித்த அப்டேட் அடுத்த செய்தியில் பார்க்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications