எதிர்நீச்சல் சீரியலில் மாறாத வன்முறை.. இதெல்லாம் ஓவர்.. கதை என்றாலும் இப்படியா பண்ணனும்?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில் இந்த சீரியலில் இரண்டாவது பாகம் எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற பெயரில் எடுத்து வருகிறார்கள். ஆனால் இந்த சீரியலில் அதிகமான வன்முறை காட்சிகளும், பெண்களை அடக்குமுறைகளும் காட்டப்படுவது குறித்து பலரும் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.
பொதுவாக சினிமாவாக இருந்தாலும் சரி, சீரியலாக இருந்தாலும் சரி ஒரு சில இயக்குனர்கள் இயக்கும் சீரியல் மற்றும் சினிமாவிற்க்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே தனி மதிப்பு உண்டு. அது போல் தான் சின்னத்திரையில் திருச்செல்வம் இயக்கும் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருக்கிறது.

இயக்குனர் திருச்செல்வம் ஆரம்பத்தில் சவுண்ட் இன்ஜினியர் ஆகவும், உதவி இயக்குனராக இருந்து பிறகு இயக்குனராக மாறி இருந்தார். அதுபோல தான் இயக்கும் சீரியல்களில் முக்கிய கேரக்டரிலும் நடித்திருக்கிறார். கோலங்கள் சீரியலில் அவருடைய தொல்காப்பியன் கேரக்டர் பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது.
அதைத்தொடர்ந்து பல வருடம் கழித்து இயக்கிய எதிர்நீச்சல் சீரியலிலும் தோழர் என்ற ஜீவானந்தம் கேரக்டரில் நடித்து வந்தார். ஆரம்பத்தில் இந்த சீரியல் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. ஆனால் இந்த சீரியலில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்துவின் இறப்பிற்கு பிறகு கதையில் ஏற்பட்ட திருப்பம் ரசிகர்களால் பெரிய அளவில் ரசிக்கவில்லை.

ஒரு சில சம்பவங்களே பல மாதங்களாக இழுத்துக் கொண்டு இருந்தனர். அதனால் அதிகமான நெகட்டிவ் வந்தது. அதன் காரணமாக அந்த சீரியல் திடீரென்று முடிவுக்கு வந்துவிட்டது. ஆனாலும் இரண்டாவது சீசன் தொடங்கினால் சீரியல் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. அதன் காரணமாகவே இந்த சீரியல் சில மாதங்கள் கழித்து எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற பெயரில் இரண்டாவது பாகம் தொடங்கப்பட்டது.
ஆனால் முதல் பாகத்தில் எப்படி சொதப்பல்கள் இருந்ததோ அதே தான் இப்போதும் தொடர்கிறது. முதல் பாகத்தில் எதிர்நீச்சல் பெண்கள் வீட்டிற்குள் முடங்கி கிடந்தனர். எப்படி தங்களுடைய திறமையை வெளிக்காட்டுவது என்பதற்காக போராடிக் கொண்டிருந்தனர். ஆனாலும் கடைசி வரை அவர்கள் வெற்றி அடையவில்லை. சீரியலில் முடிவில் குணசேகரன் ஜெயிலில் அடைத்திருந்தனர். அது மட்டும்தான் அவர்கள் செய்த சாதனையாக இருந்தது.

இரண்டாவது சீசனான எதிர்நீச்சல் தொடர்கிறது என்பதில் பெண்கள் எல்லோரும் முன்னேறுவார்கள், அவர்கள் வெளி உலகத்தில் இனி போராடுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் சொன்னது ஒன்று செய்வது ஒன்று என்பது போலத்தான் இப்போது கதை போய்க்கொண்டிருக்கிறது. முதல் சீசனை போலவே இப்போதும் பெண்கள் வீட்டில் அடுப்படியில் நின்று கூட்டமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பெண்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு அவருடைய மாமியாரும், வீட்டில் இருக்கும் சின்ன குணசேகரனான கதிரும், ஞானமும் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஞானம் என்ற பெயர் வைத்த ரேணுகாவின் கணவர் ஞானமே இல்லாமல் நடந்து கொள்கிறார். முதல் சீசனில் தான் ஒரு முறைக்கு மூன்று முறை பிஸ்னஸ் செய்கிறேன் என்று ஏமாந்து போனார்.

ஞானத்தால் தான் ரேணுகா அவர் கடன் வாங்கிய நபரிடமே டான்ஸ் கிளாஸ் எடுக்க தொடங்கினார். ஆனால் இப்போது இரண்டாவது பாகத்திலும் அம்மா கொடுத்த பணத்தை வைத்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். நான் தான் பிசினஸ் செய்யப் போகிறேன் என்று அவர் செய்யும் அக்கப்போருக்கு அளவில்லாமல் இருக்கிறது.
இன்னும் ஒரு சில வாரங்களில் மறுபடியும் ஞானம் ஏமாறப் போகிறார் என்று தெரிகிறது. ஆனால் சில தினங்களாகவே அவர் வன்முறை காட்சிகளில் ஈடுபடுகிறார். மனைவியை போட்டு அடித்தது தகாத வார்த்தைகளால் பேசுவது பார்க்கும் ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கிறது. இந்த காலத்திலும் இதுபோல சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இந்த சீரியலை பார்ப்பவர்கள் பலருடைய வீட்டில் இந்த சம்பவம் பிரதிபலிக்கிறது.

அதுவும் இரவு 9 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகுவதால் வேலைக்கு போனவர்களும் வீட்டில் வந்து சாப்பிட உட்கார்ந்த நேரம், அந்த நேரத்தில் சண்டை சச்சரவுகள் தான் இந்த சீரியலில் காட்டப்படுகிறது. வீட்டில் இருக்கும் வயதானவர்கள் இந்த சீரியலை பார்ப்பதால் குழந்தைகள் கூட இந்த சண்டை சச்சரவுகளை பார்க்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
நாங்கள் எதார்த்தத்தை காட்டுகிறோம் என்று பெண்கள் மீது வன்முறை செய்யும் காட்சிகளை காட்டுவதால் பல வீட்டில் இதை பார்த்து வளரும் குழந்தைகளின் மனநலமும் பாதிக்கப்படும். ஏற்கனவே சில திரைப்படங்களில் அளவுக்கு அதிகமாக ஆபாச காட்சிகள் காட்டப்பட்டும் வருகிறது. அதைப் பார்த்து நாளுக்கு நாள் பாலியல் குற்றம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

அதுபோல எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்களில் ஆண் ஆதிக்கமும், குடும்பத்திற்குள் சண்டை காட்சிகள் மட்டுமே காட்டப்படும் வருவது சீரியல் பார்ப்பவர்கள் மட்டுமல்லாமல் அந்த குடும்பத்தினருக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது. இரண்டாவது பாகம் தொடங்கி இரண்டு மாதங்களுக்கு ஆகப்போகிறது ஆனாலும் கதை ஒரே இடத்தில் தான் நகர்ந்து கொண்டிருக்கிறது.
மொத்தமாக மாறிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி- பாக்கியா.. பக்கத்தில் யாரு பாருங்க! இது செமையா இருக்கு
இதனால் இந்த சீரியலில் பெண்கள் முன்னேறுவது போன்று காட்டினால் புண்ணியமாக போகும் என்பது பல ஆண்களின் கருத்தாக இருக்கிறது. அதே நேரத்தில் மீண்டும் எதிர்நீச்சல் பெண்கள் வீட்டில் அழுகையும், சண்டை சச்சரவுகளும் செய்து கொண்டு இருப்பது போல காட்டி விட்டு... இன்னும் இரண்டு வருடம் கழித்து முன்னேறுவது போல காட்டினால் போதும் என்று இயக்குனர் நினைத்தால் அது அவர் இத்தனை வருடங்களாக எடுத்த சீரியல்களின் மீது மக்களுக்கு வைத்திருந்த மதிப்பையும் கெடுத்துவிடும். இனியாவது சீரியலின் கதையை மாற்றினால் நல்லது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications