முன்னேறிய முன்னணி சீரியல்.. டிஆர்பியில் சரிவடைந்த எதிர்நீச்சல்.. மாற்றத்திற்கான காரணம் இதுதானா?
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இந்த வாரம் இனிய சீரியலை விட டி ஆர் பி யில் பின்னணியில் இருக்கிறது
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரம் மூன்றாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் டிஆர்பியில் சரிவடைந்து நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.
இதுவரைக்கும் இல்லாத வகையில் டிஆர்பியில் இந்த முறை எதிர்நீச்சல் சீரியல் குறைவடைந்ததற்கு காரணம் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
எதிர்நீச்சல் சீரியல் இந்த வருடத்தின் மூன்றாவது வாரத்தில் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.
புதியதாக ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் இந்த முறை நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.

இரவு நேர சீரியல்கள்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சில சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் குறைவான காலத்தில் அதிக வரவேற்பு பெற்று விடும். அந்த மாதிரி தான் தற்போது இரவு நேர சீரியல்களான கயல், வானத்தைப்போல, சுந்தரி, இனியா, எதிர்நீச்சல் இருந்து வருகிறது. அதிலும் எதிர்நீச்சல் சீரியல் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சீரியலாகவும், பெண்கள் அடிமைப்படுத்துவதை தகர்த்தெறியும் சீரியலாகவும் பலர் இதை புகழ்ந்து வருகின்றனர். இதனாலே இந்த சீரியலுக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

இயக்குனர் திருச்செல்வனின் சீரியல்
எதிர்நீச்சல் சீரியலை பல வருடங்களுக்குப் பிறகு இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். இந்த சீரியலுக்கு வசனங்கள் நடிகை ஸ்ரீவித்யா எழுதி வருகிறார். இந்த நிலையில் இந்த சீரியலில் பல எதிர்பார்க்காத நிகழ்வுகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்பத்தாவை பொங்கலோடு காலி பண்ணி விட வேண்டும் என்று குணசேகரன் பல்வேறு பிளான்களை எடுத்திருந்தார். அது மட்டுமல்லாமல் கிராமத்தில் பொங்கல் நிகழ்வுகள் களைகட்டி இருந்தது.

ஐந்தாவது இடம்தான்
பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டிருந்தாலும் எதிர்நீச்சல் சீரியல் கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் டிஆர்பி யின் அளவில் ஐந்தாவது இடத்தை தான் பிடித்திருக்கிறது. இது இந்த சீரியலில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. தற்போது தான் இந்த சீரியல் 300 நாட்கள் கொண்டாட்டத்தை கொண்டாடி இருந்தனர் .இந்த நிலையில் இந்த வாரத்தில் இந்த சீரியல் டிஆர்பியில் 8.59 அளவை பெற்றிருக்கிறது. கடந்த வாரத்தில் இந்த சீரியல் 9.11 பெற்றிருந்த நிலையில் இந்த வாரத்தில் குறைவதற்கு என்ன காரணம் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.

முன்னேறிய இனியா
இந்த நிலையில் தற்போது புதியதாக தொடங்கப்பட்ட இனியா சீரியல் இந்த முறை 8.69 பெற்று நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த வாரத்தில் எதிர்நீச்சல் சீரியல் நான்காவது இடத்தில் இருந்த நிலையில் தற்போது இனியா சீரியல் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது இனியாவுக்கு திடீரென ஏற்பட்ட ஆக்சிடென்ட் மற்றும் திருமணத்தில் ஏற்பட்ட குளறுபடிகளால் இந்த சீரியல் அதிகமாக ரசிகர்களின் விரும்பப்பட்டு வருகிறதா? அல்லது ஏற்கனவே நடிகை ஆலியா மானசாவிற்கு அதிகமான ரசிகர்கள் இருப்பதால் இந்த சீரியலை அவர்கள் தொடர்ந்து பார்த்து வருகிறார்களா என்று பல்வேறு கேள்விகள் குவிந்து வருகிறது.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications