எதிர்நீச்சல்: கோர்ட்டில் தர்ஷினி சொன்னது இதுதானா? அப்போ குணசேகரனுக்கு அதிர்ச்சி தான்! செம டுவிஸ்ட்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பிப்ரவரி 16ஆம் தேதிக்காக ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குழப்ப வைத்திருக்கிறது. அதாவது எதிர்நீச்சல் பெண்களை ஜெயிலுக்குள் அடைத்து விட வேண்டும் என்று குணசேகரன் பிளான் போட்டு இருக்கும் நிலையில் சற்றும் எதிர் பார்க்காத வகையில் கோர்ட்டுக்கு தர்ஷினியின் வீடியோ ஒன்று வந்து இருக்கிறது.
அந்த வீடியோவில் தர்ஷினி என்ன பேசினார் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். அதே நேரத்தில் தர்ஷினி சொன்னது சந்தோஷமான செய்தி எதுவும் கிடையாது என்று வெளிப்படையாகவே தெரிகிறது. காரணம் அந்த ப்ரோமோவில் தர்ஷினி சொன்ன வார்த்தையை கேட்டு எதிர்நீச்சல் பெண்களும் கதிர், சக்தி போன்றோரும் அதிர்ச்சியாகி இருப்பதை பார்க்க முடிகிறது.

அதுபோல மறுபக்கத்தில் குணசேகரனின் முகத்தை பார்க்கும்போது அவரும் அதிர்ச்சியாகி தான் இருக்கிறார். அதனால் தர்ஷினி சொன்ன வார்த்தைகளால் குணசேகரனுக்கும் ஏமாற்றம்தான் கிடைத்திருக்கிறது என்று தெரிகிறது. அந்த வகையில் என்ன நடந்திருக்கலாம் என்பதை பற்றி நாம் பார்க்கலாம்.
ஏற்கனவே எதிர்நீச்சல் சீரியலில் ஒவ்வொரு இடங்களிலும் பெண்கள் சவால் மட்டுமே போட்டுக்கொண்டு கடைசி நேரத்தில் தோற்றுப் போய்க் கொண்டிருக்கும் நிலையில் இப்போது தர்ஷினி விஷயத்தில் இவர்கள் ஜெயிக்க போகிறார்களா இல்லையா என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
ஆனால் நீதிமன்றம் வரைக்கும் வந்திருக்கும் எதிர்நீச்சல் பெண்கள் சரியாக தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து சொல்வதற்கு தவறிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு பக்க பலமாக சாருலதா வந்து நேற்றைய எபிசோடில் எதிர்நீச்சல் பெண்களுக்காக கோர்ட்டில் ஆஜராகி அவர்களுக்காக வாதாடி கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் தான் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஜனனி வழக்கம்போல பில்டப் கொடுக்கிறார். அதாவது எங்கள் எல்லாரையும் ஜெயிலில் அடைத்து விட வேண்டும் என்று குணசேகரன் பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கோர்ட்டில் தர்ஷினி வீடியோவில் பேசுகிறார். ஆனால் தர்ஷினி சொன்ன விஷயத்தை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்து விட்டோம். நீங்களும் உங்களுடைய மனதை தைரியப்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
ஏற்கனவே இவர்கள் ஒவ்வொரு முறையும் தோற்கும் போதும் ரசிகர்கள் இப்படித்தான் தைரியப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் இந்த முறை எதற்காக இவ்வளவு பில்டப் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் நாங்கள் ஜெயிக்காமல் விடமாட்டோம் என்று சபதம் போட்டுக் கொண்டிருக்கும் ஜனனி கடைசி நேரத்தில் குணசேகரன் முன்பு தலையை தொங்க போடுவதை பார்த்து பார்த்து ரசிகர்கள் மனம் அலுத்து போய்விட்டது.
இந்த நிலையில் இப்போது புதியதாக தோற்பது போன்று பில்டப் கொடுத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் காட்டுக்குள் ரவுடிகளிடமிருந்து காணாமல் போன தர்ஷினி இப்போது வேறு உடையில் வீடியோவில் வந்திருப்பதால் ஜீவானந்தம் குரூப்பில் யாரிடமாவது சிக்கி இருக்கிறாரா? என்ற சந்தேகம் வருகிறது.
காரணம் ஜீவானந்தம் ஊரும் தர்ஷினி அடைந்து வைத்திருந்தது போன்ற ஒரு காட்டுப்பகுதி தான் அதனால் ஜீவானந்தத்திற்கு தெரிந்தவர்களிடம் தர்ஷினி கிடைத்திருக்கிறாரா என்றும் யோசிக்க வைக்கிறது. அதே நேரத்தில் தர்ஷினி சொன்ன வார்த்தையை கேட்டு வீட்டு எதிர்நீச்சல் பெண்கள் எல்லோரும் அதிர்ச்சி அடைவதால் ஏற்கனவே தர்ஷினி குணசேகரனை ஏமாற்றுவதற்காக அவரோடு ஸ்கூலில் படிக்கும் ஒரு பையனை கூட்டிட்டு வந்து நான் இவனை காதலிக்கிறேன் என்று சொன்னது போல இப்போது எதுவும் தப்பான ஒரு முடிவை எடுத்து இருக்கிறாரா அதனால் தான் இவர்கள் அதிர்ச்சியாகிறார்களா என்ற குழப்பமும் வருகிறது.
மறுபக்கத்தில் அந்த ப்ரோமோவில் குணசேகரனும் அதிர்ச்சியாகி இருப்பதால் குணசேகரன் தனக்கு திருமணம் செய்ய பிளான் போட்ட விஷயத்தையும் தர்ஷினி உடைத்து இருப்பாரோ என்றும் யோசிக்க வைக்கிறது. அதே நேரத்தில் ஒருவேளை குணசேகரன் ரவுடிகளிடமிருந்து தப்பித்த தர்ஷினியை கண்டுபிடித்து அடைத்து வைத்து மிரட்டி தன்னை கடத்தியது தன்னுடைய அம்மாவும் சித்திமார்களும் தான் என்று சொல்ல வைத்திருக்கிறாரா என்று குழப்பங்களும் வருகிறது.
ஆனால் அப்படி மட்டும் நடந்தால் கண்டிப்பாக இந்த சீரியல் ரசிகர்களின் மத்தியில் இதுவரைக்கும் பெற்று இருந்த பெயரை கெடுத்து விடும். மற்ற சீரியல்கள் போலவே இந்த சீரியலும் டிஆர்பிக்காக கண்ட மேணிக்கு உருட்ட தொடங்கி இருக்கிறார்கள் என்பது நிரூபணம் ஆகிவிடும். என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications