எதிர்நீச்சல்: நீதிபதி முன்பு அப்பத்தா சொன்ன வார்த்தை.. அதிர்ச்சியில் குணசேகரன்.. கட்சி மாறிய ஜனனி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனுக்கு எதிராக அப்பத்தா நீதிபதி முன்பு அனைத்து உண்மைகளையும் கூறியிருக்கிறார்.
அதே நேரத்தில் ஜனனியும் ஜீவானந்தம் அணியில் சேர்ந்து விட்டதால் குணசேகரன் இனி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
நேற்றைய எபிசோடின் ஆரம்பத்தில் அப்பத்தாவை காணாமல் குணசேகரன் வீட்டில் இருக்கும் பெண்களிடம் நீங்கள் எல்லாரும் வீட்டில் இருக்கும்போது அப்பத்தா எங்க போனா என்று கேள்வி கேட்க, அதற்கு ஜனனியும் வீட்டில் இருக்கும் பெண்களும் சேர்ந்து, எங்களை அப்பத்தாவை பார்க்க விடாமல் பண்ணிக்கிட்டு இப்போ நீங்க தான் அப்பத்தாவை ஏதோ பண்ணிட்டீங்க என்று எதிர்த்து பேசுகின்றனர்.
ஒழுங்கா அப்பத்தா எங்க இருக்காங்கன்னு சொல்லுங்க இல்லன்னா பெருசா ஆக்கிடுவேன் என்று ஜனனி மிரட்ட, அதற்கு என்ன பண்ணிடுவ கிழிச்ச என்று குணசேகரன் திட்டி அப்பத்தா கிழவி மட்டும் திரும்பி வரட்டும் உங்க எல்லாத்தையும் கூண்டோட ஜோலி முடிச்சிருவேன் என்று திட்டிவிட்டு ஞானம் வண்டியை எடுப்பா எங்கேயாவது போய் தேடுவோம் என்று கிளம்பி போகிறார்.

பிறகு குணசேகரன் கிளம்பியதும் நந்தினி அப்பத்தா எங்க போயிருக்க போகுது? வீட்டுக்குள்ள தான் எங்கேயாவது மயங்கி விழுந்து கிடக்கும். இவங்க சரியா பாத்திருக்க மாட்டாங்க நான் போய் பாத்துட்டு வரேன் என்று வீட்டிற்குள் போய் தேடுகிறார். அதைத்தொடர்ந்து ஜனனி யோசித்து பிறகு நான் வருகிறேன் என்று சொல்லி, ஜனனி அங்கிருந்து வேகமாக ஓட, வீடு முழுக்க தேடிய நந்தினி அக்கா அப்பத்தா வீட்டுக்குள்ள இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து நீதிபதி வீட்டில் இருக்கும் அப்பத்தா போலீஸ் ஆபீஸர்களை அங்கு வரவைத்து நீதிபதி இடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது போலீஸ் காரர்கள் இவங்க எதுக்கு இங்க வந்திருக்காங்கன்னு தெரியல நாங்க ஸ்டேட்மென்ட் பக்காவா வாங்கி இருக்கோம் என்று சொல்ல, அதற்கு நீதிபதி போலீசர்களை திட்டி அப்பத்தாவிடம் நீங்க எதுக்கு வந்து இருக்கீங்கன்னு சொல்லுங்க என்று கேட்க, அவர் தன்னுடைய பெயர் குணசேகரன் வீட்டில் பெண்களின் நிலமை, ஜனனி வந்த பிறகு தன்னுடைய மனம் மாறியது குறித்து மொத்த விஷயங்களையும் பேசுகிறார்.
அதோடு நான் தான் ஜீவானந்தத்திற்கு என்னுடைய 40% ஷேரை எழுதிக் கொடுத்தேன் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஜனனி அங்கு விட வந்துவிட ஜனனி அப்பத்தாவை பார்த்ததும் கண் கலங்கி அழுது நலம் விசாரிக்கிறார். அதைத்தொடர்ந்து ஜீவானந்தமும் அங்கு வருகிறார். பிறகு நீதிபதி பட்டமாளுக்கு சாதகமாக பேசி அங்கிருக்கும் போலீஸ்காரர்களை மிரட்டி தீட்டி அனுப்புகிறார்.

மேலும் நீங்க விருப்பப்பட்டா உங்க பேரன் மீதும் மத்தவங்க மீதும் கம்ப்ளைன்ட் கொடுத்தால் நான் விசாரிக்கிறேன் என்று சொல்ல, அதற்கு அப்பத்தா ,ஜனனி, ஜீவானந்தமும் நீதிபதிக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகின்றனர். அந்த நேரத்தில் குணசேகரன் ஞானத்துடன் அங்கு வருகிறார். ஜீவானந்தம், அப்பத்தா,ஜனனி மூவரையும் பார்த்த குணசேகரன் திட்டுகிறார். எனக்கு என்னமோ இவ ஆறு மாசமா படுத்து கிடந்தா, அது கூட நடிப்புனு தான் தோணுது. இந்த ஜீவானந்தத்திற்கு சாதகமா எந்திரிச்சிட்டாப்பா என்று அப்பத்தாவை குணசேகரன் திட்டுகிறார்.
அதைத்தொடர்ந்து ஜனனியையும் நீ அப்பத்தாவை அனுப்பி வச்சிட்டு எங்க கூட சேர்ந்து தேடுற மாதிரி நடிக்கிறியா? என்று திட்ட, அதற்கு அப்பத்தா நிறுத்து குணசேகரா நான் இங்க வந்தது ஜனனிக்கு தெரியாது. நான் இங்கு வந்த பிறகுதான் அவளுக்கு மெசேஜ் போட்டு வர சொன்னேன் என்று சொல்லி, ஜட்ஜ் இந்த கேசை இன்வெஸ்டிகேஷன் செய்ய ஆர்டர் போட்டுட்டாரு என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஜனனி, அப்பத்தா, ஜீவானந்தம் மூவரும் கிளம்புகின்றனர்.
அவர்கள் மூவர் போவதையும் பார்த்து குணசேகரன் கூட்டு சேர்ந்து இருக்கிற ஆள்களை பாரு என்று திட்டிக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் அப்பத்தா தோளில் சாய்ந்து ஜனனி கண்கலங்கி அழுகிறார். பிறகு குணசேகரன் போலீஸ் ஆபீஸரிடம் அப்போ இனி என்ன சார் பண்ண என்று கேட்க, அதற்கு போலீஸார் இனி என்னால் எதுவும் பண்ண முடியாது. நீங்க கோர்ட்ல பார்த்துக்கோங்க சார் என்று சொல்ல, எதையாவது சொல்லி குழப்பாத்துங்க சார் சொல்லிவிட்டு எப்ப வாப்பா ஞானம் போவோம் என்று குணசேகரன் காரில் கிளம்புகிறார். இத்துடன் நேற்றைய எபிசோடு முடிவடைந்தது.












Click it and Unblock the Notifications