எதிர்நீச்சலில் கலகலப்பு.. கையில் கடிதத்தோடு வந்த ஜனனி.. குணசேகரனை அவமானப்படுத்திய கரிகாலன்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஆகஸ்ட் எட்டாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் குணசேகரன் பேசும் வார்த்தை மற்றும் நடந்து கொள்ளும் விதம் குறித்து கரிகாலன் தன்னுடைய சந்தேகத்தை குணசேகரனிடம் கேட்க கதிர் மற்றும் ஞானம் அதிர்ச்சி அடைந்தனர்.

அதுபோல வீட்டிற்கு தெரியாமல் ரேணுகா முதல் நாள் டான்ஸ் கிளாஸ் நடத்தி விட்டு வந்திருக்கும் நிலையில் அவர் இப்போது டான்ஸ் டீச்சராக மாறி இருக்கிறார். அதை தொடர்ந்து இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் அடுத்த அடுத்த பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் கலகலப்புக்கும் குறை இல்லாமல் கரிகாலன் மற்றும் நந்தினி எதிர்பாராத கவுண்டர் கொடுத்து சீரியலுக்கு சுவாரசியம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே எபிசோட்டில் குணசேகரன் சென்னையில் இருந்து வீட்டிற்கு வந்திருந்த நிலையில் அதை கண்டுகொள்ளாமல் ரேணுகா தான் ஸ்கூலுக்கு டான்ஸ் கிளாஸுக்கு போக வேண்டும் என்று ஏமாற்றிவிட்டு வெளியே கிளம்பும்போது ஞானம் பிரச்சனை செய்ய, அப்போது குணசேகரனுக்கு பக்கவாதம் வந்திருக்கிறதா? அல்லது பக்காவான வாதமா நடிக்கிறாரா என்று கேள்வி மேலே கேள்வி கேட்டு ரசிகர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தி இருந்தார்.
இதுவரைக்கும் ரசிகர்களின் மனதில் தோன்றும் கேள்விகளை அப்படியே நந்தினி மற்றும் கரிகாலன் கேட்டு சீரியலுக்கு சுவாரசியத்தை கொடுத்திருந்த நிலையில் நேற்று எபிசோடில் ரேணுகாவின் அதிரடியான கேள்விகளும் பிறகு டான்ஸ் கிளாஸ்சில் அவர் ஒரு டீச்சராக மாறி இருக்கிறார் என்ற மகிழ்ச்சியான செய்தியும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
அதைத்தொடர்ந்து குணசேகரனுக்கு டீ கொடுத்த கரிகாலன் மாமாவுக்கு பக்கவாதம் வந்த பிறகு அது பற்றி youtube இல் சர்ச் பண்ணி பார்த்தேன். அப்போது ஆண்களுக்கு எப்படி பக்கவாதம் வரும் பெண்களுக்கு எப்படி வரும் என்று போட்டு இருந்தாங்க. ஆனா உனக்கு எப்படி வித்தியாசமான அறிகுறி எல்லாம் இருக்கு? என்று கேட்க, குணசேகரன் பதில்பேச முடியாமல் முழித்துக் கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் இன்றைய பிரமோவில், "இந்த வீட்டில என் உலகம் உயிர் எல்லாமே இருக்கியா" என்று கரிகாலன் சொல்ல, அதற்கு குணசேகரன் "அடுத்தவங்க வீட்ல எதுக்கு இவ்வளவு ஐட்டங்கள வெச்ச" என்று அசிங்கப்படுத்த, அதற்கு கரிகாலன் "இவ்வளவு விவரமா பேசுற மாதிரி பேசுறியரு, ஆனா முட்டாப் பய மாதிரி கேள்வி கேட்கிறியரு" என்று முகத்தடி கொடுக்கிறார்.
அதைத் தொடர்ந்து கிச்சனில் ரேணுகா, நந்தினி, ஐஸ்வர்யா மூவரும் நின்று கொண்டிருக்க அப்போது கிச்சன் ஜன்னல் பக்கமாக வந்த ஜனனி அக்கா என்று ஒரு விஷயம் சொல்லனும் என்று கையில் ஒரு கடிதத்தோடு வந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கரிகாலன் அக்கா என்ன பண்ற என்று கிச்சனுக்குள் வருகிறார். இதை பார்த்து ஜனனி ஓடிப் போய் விடுகிறார். இந்த நிலையில் இது நந்தினிக்கு சமையல் ஆர்டர் ஆக இருக்குமோ என்று எதிர்பார்க்க வைக்கிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications