எதிர்நீச்சல்: சொத்து விஷயத்தில் கௌதம் சொன்ன வார்த்தை.. எதிர்த்து நிற்கும் ஜனனி.. பரபரப்பின் உச்சம்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் பற்றியும் பட்டம்மாள் சொத்து பற்றியும் கௌதமிடம் விசாரித்த ஜனனிக்கு கௌதம் அதிர்ச்சியான பதிலை கூறுகிறார்.
கௌதம் சொன்ன வார்த்தையை கேட்டு நான் நீ சொல்ற மாதிரி நடக்க முடியாது என்று என்று ஜனனி கூறுகிறார்.
அதே நேரத்தில் கரிகாலனுக்கு வீட்டில் தடபுடலாக விருந்து வைத்து அசத்துகின்றனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரைக்கு சமீபத்தில் தான் கரிகாலன் உடன் பிடிக்காத திருமணம் நடந்தது. அதைத் தொடர்ந்து ஆதிரைக்கும் கரிகாலனுக்கும் ஃபர்ஸ்ட் நைட் நடத்த குணசேகரன் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் பஸ்ட் நைட்டில் ஆதிரை எனக்கு அருணை தான் பிடிக்கும் என்று சொன்னதால் கரிகாலன் அழுது கொண்டிருந்தார்.

அதே நேரத்தில் நமக்குள் ஒன்றும் நடக்கவில்லை என்பது பற்றி வெளியே சொன்னால் உன்னை பற்றிய ரகசியத்தை எல்லாம் நான் எல்லாரிடமும் சொல்லி விடுவேன் என்றும் ஆதிரை மிரட்ட, என்னைப் பற்றி என்ன ரகசியம் என்று தெரியாமலே கரிகாலன் குழப்பத்தில் அழுது கொண்டே எல்லோரிடமும் நல்லபடியாக எல்லாம் முடிந்தது என்று நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஆதிரைக்கும் கரிகாலனுக்கும் ஃபர்ஸ்ட் நைட் முடிந்துவிட்டது என்று நினைத்து ஜான்சி ராணி கரிகாலனுக்கு பெரிய விருந்து வைக்கிறார். தலைவாழை இழையில் விதவிதமான சாப்பாடு வைத்து இன்னைக்கு நீதான் ரொம்ப டயர்டா இருப்ப கரிகாலா இந்த சூப் குடி என்று சொல்ல, இதை கேட்டு நந்தினி ஜனனி எல்லோரும் சிரிக்கின்றனர்.
அப்போது கரிகாலனுக்கு வைக்கப்படும் முட்டை உருண்டு ஓடிவிட கரிகாலனன் அதை மிரட்டி பிடிடா என்று குணசேகரன் மிரட்ட டைனிங் ஹாலில் ஒரு கல்யாண வீடு விருந்தே நடக்கிறது. அதைத் தொடர்ந்து கௌதமிடம் சொத்து பிரச்சனை பற்றி ஜனனி கேட்க, அதற்கு அவர் இந்த சொத்து பிரச்சனை எல்லாம் உனக்கு வேண்டாம் என்று கௌதம் சொல்கிறார். அதற்கு ஜனனி முடியாது கௌதம் என்று மிரட்டுகிறார்.

இதனால் இன்றைய எபிசோடுக்கான ஆர்வம் அதிகரித்து இருக்கிறது. கரிகாலன் அழுததை பார்த்து அதிகமான ரசிகர்கள் பீல் பண்ணி வரும் நிலையில், கரிகாலனும் ஜான்சி ராணியும் இன்று செய்யும் லூட்டிகள் கலகலப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதே நேரத்தில் கவுதம், ஜீவானந்தம் பற்றிய ஜனனியிடம் பேசுவாரா? என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications