எதிர்நீச்சல்: உயிருக்கு போராடும் அருண்.. ஆதிரை செய்த செயல்.. அவமானபடும் ஜனனி.. வெளிவரும் உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் அருண் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அதே நேரத்தில் ஆதிரை அருணிடம் பேச வேண்டும் என்று கேட்க எஸ்.கே.ஆர் அவமானப்படுத்தி விடுகிறார். அதனால் ரிஜிஸ்டர் மேரேஜ்க்கு ஆதிரை கையெழுத்து போட்டு கொடுத்து விடுகிறார்.

இந்த நிலையில் ரிஜிஸ்டர் ஆபீசுக்கு வந்த ஜனனியை ஆதிரை அவமானப்படுத்தி அனுப்புகிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் இந்த வார எபிசோடில் நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஆதிரைக்கும் கரிகாலனுக்கும் நடந்த திருமணத்தை பார்த்து பலர் அதிர்ச்சி அடைந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த திருப்பங்களும் அந்த வகையில் தான் இருக்கிறது.

Ethirneechal serial 2023 June 27th promo update Arun has been admitted to the hospital

திருமணத்திற்காக ஆதிரை கோவிலில் காத்திருக்கும் போது அருண் வராமல் இருந்ததால் தான் இத்தனை பிரச்சனைகள் நடந்திருக்கும் நிலையில் அருண் எங்கே போனார்? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. இந்த நிலையில் அருண் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அங்கே எஸ்.கே.ஆர் அவருடைய மனைவி சாருலதா என மொத்த குடும்பமும் அருணை சுற்றி நிற்கின்றனர்.

இந்த நிலையில் ரிஜிஸ்டர் ஆபீஸில் இருந்த மாதிரி ஞானத்திடம் கெஞ்சி கூத்தாடி நான் எஸ்கேஆரிடம் பேச வேண்டும் என்று கேட்க, அதற்கு குணசேகரனும் சரி என்று சொல்லி எஸ்.கே.ஆர்க்கு போன் போட்டு வணக்கம் முதலாளி என் தங்கச்சி உங்க கிட்ட பேசணுமாம் என்று சொல்ல, நான் உன்னை தங்கச்சி கிட்ட பேச விரும்பல என்று எஸ் கே ஆர் சொல்ல அதை அவகிட்டயே சொல்லிருங்க என்று எஸ்.கே.ஆர் ஆதிரையிடம் போன் கொடுக்க ஆதிரை எஸ்கேஆரிடம் எவ்வளவோ கெஞ்சி பார்க்கிறார். தான் அருணிடம் பேச வேண்டும் என்று கெஞ்ச ஆனால் அவர் அதற்கு மறுத்து விடுகிறார்.

அதே நேரத்தில் அருண் மருத்துவமனையில் இருப்பது ஆதிரைக்கு தெரியாமல் இருக்கிறது. இந்த நிலையில் எஸ்.கே.ஆர் திட்டியதால் ஆதிரை தன்னுடைய வாழ்க்கையே முடிந்து விட்டது என்று கூறி ரெஜிஸ்டர் ஆபீஸில் கையெழுத்து போட்டு கொடுத்து விடுகிறார். அதே நேரத்தில் ஆதிரை ரெஜிஸ்டர் ஆபீஸில் இருப்பதை தெரிந்த ஜனனி சக்தியை கூப்பிட்டுக்கொண்டு அங்கே வேகமாக வர அதற்குள் ஆதிரை கையெழுத்து போட்டு கொண்டு வெளியே வந்து விடுகிறார்.

அப்போது ஜனனி ஆதிரையிடம் கையெழுத்து போட்டுட்டியா என்று கேட்க, என் வாழ்க்கையே முடிஞ்சு உங்களை நம்புனதுக்கு நீங்க என்ன தெருவுல விட்டுட்டீங்க என்று திட்டி அனுப்பி விட்டு நடை பிணமாக கரிகாலன் கூடவே நடக்கிறார். கரிகாலன் வீட்டிற்கு குணசேகரன் கூட்டிக் கொண்டு வந்து விட அங்கே ஜான்சி ராணி தெருவில் அனைவரிடமும் என்னுடைய மருமகளை பாருங்கள் என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்.

Ethirneechal serial 2023 June 27th promo update Arun has been admitted to the hospital

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மருத்துவமனையில் இருக்கும் அருணை பார்ப்பதற்காக ஜனனி அங்கே போக சாருலதா ஜனனியை திட்டுகிறார். நீங்க ஆரம்பித்து வச்சதை நான் நல்லபடியா முடிக்கலாம் என்று நினைத்தேன். ஆனா இது இப்படி ஆகிட்டு என்று சொல்ல, ஆனால் அது எங்க கொண்டு வந்து இருக்குன்னு பார்த்தியா? என்று எஸ்.கே.ஆர் ஜனனியை திட்டுகிறார்.

அதே நேரத்தில் வீட்டிற்கு வந்த குணசேகரனிடம் விசாலாட்சி என் மகளை எங்கே? என்று கேட்க, அவ எங்க இருக்கனுமோ அங்க போயிட்டா என்று குணசேகரன் கூறி, இன்று சிலருக்கு முடிவு கட்டணம் என்று சொல்ல, விசாலாட்சி அழுது கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்று குணசேகரன் என்ன பிரச்சனை செய்யப் போகிறாரோ? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+