எதிர்நீச்சலில் மாஸ்.. கழுத்து உடைந்த கதிர்.. அடித்து பேசும் சக்தி..குணசேகரன் ரகசியத்தை உடைத்த மாமனார்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அக்டோபர் 30ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் பிரச்சனை செய்து கொண்டிருந்த ஜான்சி ராணியை சக்தி லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி மிரள வைக்கிறார். அதே நேரத்தில் கதிர் கௌதமிடம் சிக்கி பரிதாப நிலையில் இருக்கிறார்.

மறுபக்கம் குணசேகரன் போட்ட பிளானை பற்றி ஈஸ்வரியின் அப்பா குடும்பத்தினரிடம் கூறுகிறார். இந்த நிலையில் என்ன நடக்கப் போகிறது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் மனைவியை கொலை செய்தது கதிர் மற்றும் குணசேகரன் என்பதை தெரிந்து கொண்ட கௌதம் திருவிழாவுக்கு போய்க்கொண்டிருந்த கதிரை பூங்குழலி என்ற பெண்ணை வைத்து பேசி தனியாக வரவைத்து அடியாள்கள் மூலமாக அடித்து துவைத்து எடுத்திருக்கிறார். அதே நேரத்தில் உன்னுடைய அண்ணன் குணசேகரனை ஜீவானந்தம் பாத்துக்குவாரு உனக்கு என் கையால தான் முடிவு என்று கௌதம் கூறியிருந்தார்.

அது போல கோவில் திருவிழா நடக்கும் இடத்திற்கு வீட்டு மருமகள்கள் ஏற்கனவே வந்து சேர்ந்திருந்த நிலையில் கதிர் இன்னும் வரவில்லையே என்று நந்தினி கேள்வி எழுப்பியிருந்தார். நமக்கு முன்பே போக வேண்டும் என்று அவசரமாக கிளப்பினாரு. ஆனா இங்கே கதிர் வரவில்லை அவன் கூட வந்த அல்லகையையும் காணவில்லை என்று பேசிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் குணசேகரன், வீட்டு குழந்தைகளையும் விசாலச்சியையும் கூட்டிக்கொண்டு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறார். வழக்கம் போல ஜான்சி ராணி அங்கே இங்கே விதண்டாவாதம் செய்து கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கதிர் தங்களை ஏமாற்றிவிட்டு போயிருப்பதைப் பற்றி கில்லி வளவனும் கரிகாலனும் பேசிக் கொண்டிருந்தனர்.

இப்படியாக இருந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜான்சி ராணி வீட்டு பெண்களிடம் தகராறு செய்து கொண்டிருக்க ஒரு கட்டத்தில் கோபமான கதிர் டைனிங் டேபிளில் வேகமாக தட்டி மரியாதையா சொல்லுரேன்.. இங்கிருந்து கிளம்பு என்னை பத்தி எல்லாம் உனக்கு தெரியாது. செஞ்சி விட்டுட்டு போயிட்டே இருப்பேன் என்று மிரட்டுகிறார்.
அதே நேரத்தில் கௌதம் கதிரை ஒரு சேரில் கட்டி வைத்து இருக்கிறார். அதைத்தொடர்ந்து கிள்ளி வளவனும் கரிகாலனும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஒரு போன் வந்ததும் பொம்பளை ஆளுகிட்ட பேசினான். அது கூட உங்களால கண்டுபிடிக்க தெரியலையே என்று கரிகாலன் கிள்ளிவளவனிடம் கேள்வி கேட்க அதனால் கோபமான வளவன் நான் குணசேகரன் கிட்ட பேசிக்கிறேன்டா என்று சொன்னதை கேட்டதும் கரிகாலன் பதறிப் போகிறார்.

அதைத் தொடர்ந்து அப்பத்தா வீட்டிற்கு வந்த ஈஸ்வரியின் அப்பா எங்க வீட்டு பொம்பளைங்க ஆச்சரியப்படுற மாதிரி ஒரு விஷயம் இருக்கு என்று சொன்னாங்க ஆனா அது என்னன்னு தான் எனக்கு புரியல என்று குலசேகரனின் பிளானை பற்றி சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் குணசேகரன் ஞானத்தோடு வேகமாக அங்கு வருகிறார்.

இப்படியாக ப்ரோமோ முடிவடைகிறது. இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் மாஸான காட்சிகள் இஇருக்கிறது.பல நாட்களுக்குப் பிறகு சக்தி கோபப்பட்டு பேசியிருப்பது பலருடைய பாராட்டை பெற்று வருகிறது. அதே நேரத்தில் கதிர் பரிதாபமான நிலையில் இருப்பது பலருக்கு சந்தோஷத்தையும் கொடுத்திருக்கிறது. இனி கதிரை யார் காப்பாற்றுவார்கள் அல்லது கதிருக்கு என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு தான் அனைவருக்கும் இருக்கிறது என நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications