தர்ஷினியை கண்டுபிடித்த ஜீவானந்தம்.. ஆனால் இனிதான் சம்பவமே! இதை கவனிச்சீங்களா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மார்ச் எட்டாம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் தர்ஷினியை ஜீவானந்தம் கண்டுபிடித்து காரில் கூட்டிக்கொண்டு வரும்போது கொற்றவை ஐபிஎஸ் தன்னுடைய போலீஸ் படையோடு ஜீவானந்தத்தை விரட்டிக் கொண்டு போகிறார்.
ஏற்கனவே ஜீவானந்தம் தான் தர்ஷினியை கடத்திக்கொண்டு வைத்திருக்கிறார் என்று குணசேகரன் ஜீவானந்தத்திற்கு எதிராக போலீஸ் மட்டுமல்லாமல் குடும்பத்தினரையும் நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இப்போது கூட ஜீவானந்தம் செய்த சொதப்பலால் ஜனனிக்கும் பிரச்சினை வந்திருக்கிறது.

அந்த வகையில் காணாமல் போன தர்ஷினியை கண்டுபிடிக்க ஒரு மாதம் ஆகி இருக்கும் நிலையில் இப்போது தர்ஷினியை ஜீவானந்தம் காப்பாற்றி கொண்டு வந்து விட்டார். அது போல இப்போது ஜீவானந்தம் தர்ஷினியை காப்பாற்றி விட்டார். ஆனால் கண்டுபிடித்த தர்ஷினியை போலீஸிடம் ஒப்படைக்காமல் உன்னை உங்க அம்மாவிடம் சேர்க்க போகிறேன் என்று ஜீவானந்தம் காரில் தர்ஷினியை வேகமாக கூட்டிக்கொண்டு போகிறார்.
போதை மருந்து மயக்கத்தில் இருக்கும் தர்ஷினியை இப்போது போலீஸிடம் ஒப்படைத்தால் தர்ஷினி தான் ஜீவானந்தத்தை கடத்தினார் என்று குணசேகரன் நம்ப வைத்து விடுவதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே குணசேகரன் சொன்னது போலவே ரௌடிகள் எங்களின் தலைவன் ஜீவானந்தம் தான் ஜீவானந்தம் சொல்லித்தான் நாங்கள் தர்ஷனியை கடத்தினோம். இப்போது எங்களிடம் இருந்து ஜீவானந்தம் தர்ஷினியை தூக்கிக்கொண்டு போய்விட்டார் என்று வாக்குமூலம் கொடுத்து இருக்கின்றனர்.

இதனால் ஜீவானந்தத்திற்கு மேலும் சிக்கல்தான். அதுபோல இத்தனை நாட்களும் ஜனனியை ஒவ்வொரு இடங்களுக்கும் கூட்டிக் கொண்டு போயிருந்த கொற்றவை போலீஸ் கூட இப்போது ஜனனியை போலீஸ் ஸ்டேஷனில் காக்க வைத்திருக்கிறார். இதனால் எல்லா பக்கமும் பிரச்சனைகள் வருகிறது. அதே நேரத்தில் இன்று வெளியான ப்ரோமோவில் தர்ஷினியை இரண்டாவது முறையாக கடத்திய ரவுடி முதலில் கடத்திய ரவுடி குதிரைக்கு போன் போட்டு அந்த தர்ஷினி பிள்ளையை கடத்த சொன்னது அவங்க அப்பா குணசேகரன் தான்.
இதை நாங்க சொல்லிட்டு தப்பிச்சு போகப் போறோம் என்று பேசிக் கொண்டிருக்கிறார். இதற்கு காரணம் என்னவென்பதுதான் இப்போது குழப்பமாக இருக்கிறது... ஏற்கனவே குணசேகரன் பணம் கொடுக்கவில்லை என்ற கோபம் ரவுடிகளுக்கு இருக்கும் நிலையில் குணசேகரனை மாட்டி விடுவதற்காக இவர்கள் பிளான் போடுகிறார்களா? அல்லது ஒரு ரவுடி கூட்டம் ஜீவானந்தம் பெயரை சொல்லி இருக்கும் நிலையில், குதிரை போலீசிடம் மாட்டினால் அவர் குணசேகரன் பெயரை சொன்னால் இது பிரச்சனை மேலும் சிக்கலாகும் என்று இப்படி பிளான் பண்ணுகிறாரா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.

அதே நேரத்தில் ஜனனிக்காக சக்தி ஜெயிலுக்கு வந்திருக்கும் நிலையில் குணசேகரன் இது வேறு யாரும் இல்லை என்னுடைய தம்பி பொண்டாட்டி தான் நான் மன்னிச்சு விடுறேன் இவங்கள விட்டுருங்க என்று சொல்லி இருக்கிறார். இதுவும் சந்தேகத்தை ஏற்படுத்து இருக்கிறது. ஏற்கனவே நேற்றைய எபிசோட்டில் தர்ஷினியை கடத்திய ரவுடிகளை அடித்து விசாரிங்க என்று ஜனனி சொல்லிக் கொண்டிருந்தார்.

இதனால் ஜனனி இங்கே இருந்தால் இந்த ரவுடிகளிடமிருந்து உண்மை தெரிய வந்து விடும் என்று குணசேகரன் இப்படி பிளான் போடுகிறாரா? என்ற கேள்விகளும் வருகிறது. அதை நேரத்தில் இன்று தர்ஷினியை ஜீவானந்தம் காரில் கூட்டிட்டு போவதை கொற்றவை ஐபிஎஸ் பார்த்து இருக்கும் நிலையில் தர்ஷினி போலீஸிடம் உண்மையை சொல்வாரா? அல்லது ஜீவானந்தம் நீதிபதி வீட்டுக்கு நேராக தர்ஷினியை கூட்டிட்டு போகப் போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications