நடிகர் மாரிமுத்து 2 நாள் முன்னாடி தானே அந்த வார்த்தை சொன்னாரு..கதறி அழுது ஆதிரை வெளியிட்ட பதிவு
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென்று மாரடைப்பு காரணமாக இன்று மரணம் அடைந்திருக்கிறார்
இந்த நிலையில் அவருடைய மரணம் குறித்து ரசிகர்களும், பிரபலங்களும் தங்களுடைய வருத்தங்களை தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் அவரோடு சீரியலில் நடித்த பிரபலங்கள் பலரும் அவருடைய உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் தங்கச்சியாக நடித்து வரும் ஆதிரை நடிகர் மாரிமுத்துவின் உடலை பார்த்து கதறி அழுதிருந்தார். அத்தோடு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் குணசேகரன் தனக்கு இருக்கும் சொத்து பிரச்சனையிலும் ஆதிரை மற்றும் கரிகாலனுக்கு ஹனிமூன் ஏற்பாடுகளை செய்திருப்பார். அதற்காக நேற்றைய எபிசோடில் ஆதிரை குணசேகரனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால் இன்றைய எபிசோடுகான ப்ரமோ வெளியாகவில்லை. அதற்குள் இந்த சீரியலில் குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து திடீரென்று மாரடைப்பால் இறந்து விட்டார். இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் பலரும் தங்களுடைய வருத்தங்களை உருக்கமாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த சீரியலில் மாரி குணசேகரனின் தங்கச்சியாக நடித்து வரும் ஆதிரை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு வெளியிட்டிருக்கிறார்.
அந்த வகையில் "யாராவது என்னை எழுப்பி இது கனவு என்று சொல்வார்களா? என்று நான் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறேன். ஐயோ அண்ணே ஏன் இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டு சென்றாய். ஆதிரை தங்கம் தங்கச்சின்னு முந்தா நேத்து தானே போன்ல பேசின? அது இன்னமும் என் காதுல கேட்டுகிட்டே இருக்கு. இந்த மாசம் ஃபுல்லா உங்க ஷெடுலா என்று சொன்னீங்களேண்னே.
ஆனால் இப்படி விட்டுட்டு போவீங்கன்னு ஏன் சொல்லல? என்ன அவசரம்? அப்படி ஆசையா கட்டண வீட்டில ஒரு நாள் கூட தங்களையே? வாழ்க்கை முற்றிலும் நியாயமற்றது. உங்கள் பணியின் மீதான உங்கள் பரிபூரணமும் அர்ப்பணிப்பும் என்னை எப்போதும் ஊக்கப்படுத்துகிறது. உங்கள் கடைசி மூச்சுவரை நீங்கள் உழைத்ததில் ஆச்சரியம் இல்லை.
கடைசியாக ஒரு முறை நான் எங்களை எப்பவும் கூப்டுற மாதிரி யம்மா ஏய் என்ற வார்த்தை நான் ரொம்பவே மிஸ் பண்ணுவேன். உங்களை ஒருபோதும் எங்கள் இதயத்தில் இருந்து மாற்ற முடியாது.." என்ற ஆதிரையாக நடிக்கும் நடிகை சத்யா தேவராஜன் பதிவு வெளியிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications