அருணுடன் மாலையும் கழுத்துமாக ஆதிரை.. தாலி கட்டிய கரிகாலன்.. இனி நடக்கப் போவது இதுதானா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் யாருமே எதிர்பார்க்காத ப்ரமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே கரிகாலன் ஆதிரை கழுத்தில் தாலி கட்டி இருக்கிறார்.
ஆனால் ஆதிரை மற்றும் அருண் இருவரும் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்திகிறது.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வது போல, இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலிலும் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியல் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று யாரும் யூகிக்க முடியாத வகையில் கதை நகர்ந்து கொண்டிருந்தது.
ஆனால் ஒரு சில மாதங்களாகவே ஆதிரை திருமண ட்ராக் தொடங்கியதிலிருந்து கதை ஒரே பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதாக ரசிகர்கள் தொடர்ந்து கருத்து கூறி வந்தனர். ரசிகர்களுக்கு அலுப்பு தட்டும் வகையில் கதை பல மாதங்களாகவே ஆதிரை காதல், அதை தொடர்ந்து திருமணம் என அடுத்தடுத்த பிரச்சனைகளை பற்றியதாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில் ஆதிரை யாரை திருமணம் செய்வார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருந்தது. காமெடியாக கோமாளித்தனம் செய்து கொண்டிருக்கும் கரிகாலன் ஆதிரையை கல்யாணம் செய்யப் போகிறாரா? அல்லது நாளுக்கு நாள் காதலித்து விட்டு காதலித்த பெண் மீது எந்த அக்கறையும் இல்லாமல் இருந்த அருண் ஆதிரையை கல்யாணம் செய்யப் போகிறாரா? என்று அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்தனர்.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டின் பிரமோவில் அருணோடு கல்யாணம் செய்யலாம் என்று கோவிலில் காத்திருந்த ஆதிரையை தரதரவன இழுத்துக்கொண்டு வந்த குணசேகரனும், கதிரும் நடுரோட்டில் வைத்து அங்கு கூடியிருந்த கூட்டத்தின் முன்பு கரிகாலனை தாலி கட்ட சொல்லி கல்யாணத்தை முடித்து விட்டனர்.

இது ஒரு சிலருக்கு அதிர்ச்சியாக இருப்பதாகவும் ஒரு சிலர் நாங்கள் இதைத்தான் எதிர்பார்த்தோம். இப்படி இருந்தால்தான் நன்றாக இருக்கும் என்று கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது சில புகைப்படங்கள் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது ஆதிரை கோவிலில் கட்டி இருந்த அதே புடவையோடு கழுத்தில் மாலையோடு அமர்ந்திருக்க, அருகில் அருணும் மாலையோடு அமர்ந்திருக்கிறார். இந்த நிலையில் அருணுக்கும் ஆதிரைக்கும் திருமணம் நடக்குமா?...
அல்லது ப்ரோமோவில் காட்டியப்படி கரிகாலனோடு ஆதிரைக்கு திருமணம் நடக்குமா? என்று பெரும் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஒருவேளை அருணோடு திருமணம் நடக்காமல் கரிகாலன் ஆதிரை கழுத்தில் தாலி கட்டினால் தனக்கு பிடிக்காத திருமணம் என்று ஆதிரை தாலியை கழற்றி தூக்கி வீசி விட்டு, தன்னுடைய வாழ்க்கைக்கு தனியாகவே முடிவெடுத்து எதிர்நீச்சல் அடிக்க வேண்டும் என்பதற்காக தான் இப்படி கதை வைத்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications