எதிர்நீச்சல் சாருபாலா யார் தெரியுமா?இவருக்குள் இத்தனை திறமைகளா?ஒரே படத்தால் கிடைத்த சீரியல் வாய்ப்பு
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் சாருலதா கேரக்டரில் நடிகை ராதிகா வைரவேலவன் நடித்து வருகிறார்.
சாருலதா தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லையே என்ற கோபம் இப்ப வரைக்கும் குணசேகரனுக்கு இந்த சீரியலில் இருந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் ரீல் சாருலதாவின் நிஜ கேரக்டர் மற்றும் அவருடைய திறமைகள் பலருக்கும் வியப்பை கொடுத்து இருக்கிறது.

பரதநாட்டிய கலைஞர்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பிரபலமாகி வருகின்றனர். பல நடிகர்கள் இந்த சீரியலின் மூலமாகத்தான் முதல் முறையாக சின்னத்திரையில் அடி எடுத்து வைத்திருக்கின்றனர். அந்த வகையில் ஒருவராக தான் சாருலதா கேரக்டரில் நடிக்கும் நடிகை ராதிகா வைரவேலவன் இருந்து வருகிறார்.. இவர் ஒரு நடிகையாக தன்னுடைய பயணத்தை தொடங்குவதற்கு முன்பு ஒரு பரதநாட்டிய கலைஞராக தன்னுடைய திறமையை வெளியே கொண்டு வந்திருக்கிறார்.
கலா மாஸ்டரின் பாராட்டு
சதுர் லக்ஷண அகாடமி ஆஃப் ஃபைவ் ஆர்ட்ஸ் அப்படிங்கற ஒரு கலைக்கூடம் மூலமாக கிட்டத்தட்ட 15 வருஷங்களாக பல பேருக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுத்து வருகிறார். இதற்காகவே இவர் டாக்டரேட் பட்டத்தையும் வாங்கி இருக்கிறாராம். அத்துடன் நாட்டிய செம்மல் விருதையும் பெற்றிருக்கிறாராம். இவரை ஒரு மேடையில் பார்த்த கலா மாஸ்டர் இவரிடம் சென்று உங்கள் பராதனாட்டியம் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். வியந்து போய்விட்டேன் என்றெல்லாம் பெருமையாக பாராட்டினாராம்.
முதல் திரைப்படம்
பிறகு கலா மாஸ்டர் சினிமாவில் நுழைந்ததற்கு அப்புறம் என்னுடைய பரதநாட்டியத்தை நான் மறந்துவிட்டேன் என்று சொல்லலாம். உங்களுடைய பரதநாட்டியத்தை பார்க்கும் போது எனக்கு மீண்டும் பரதநாட்டியம் ஆட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஆனால் எனக்கு இப்போது மறந்து போனதால் மீண்டும் நீங்கள் எனக்கு சொல்லித் தர வேண்டும் என்று கேட்டு இவரிடம் இருந்து சில ஸ்டெப்புகளையும் கற்று இருக்கிறார். பிறகு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வந்த தக்கத்திமிதா டான்ஸ் ஷோவில் ஜட்ஜ் ஆகவும் பங்கேற்று இருக்கிறார். அப்போதுதான் இவர் ஒரு திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். வேழம் என்கிற திரைப்படத்தில் அசோக் செல்வனுக்கு அக்காவாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் மூலமாகத்தான் இவருக்கு எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம்.

வலம் வரும் மீம்ஸ்
எஸ்கேஆர் மனைவியாக நடித்துக் கொண்டிருக்கும் சாருலதா இந்த சீரியலில் புரட்சி செய்து கொண்டிருக்கிறார். குணசேகரன் சாருலதாவை ஆரம்ப காலத்தில் திருமணம் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்தார். ஆனால் கடைசியில் எஸ் கே ஆர் திருமணம் செய்துவிட்டார் என்று ஏமாற்றமும் கோபமும் இப்ப வரைக்கும் குணசேகரனுக்கு இருந்தாலும் ஆனால் அதையெல்லாம் காட்டிக்கொள்ளாமல் வீராப்போடு இருந்து வருகிறார். இந்த நிலையில் ஆதிரை மற்றும் அருண் திருமண விஷயமாக இவர்கள் இருவரும் மீண்டும் சந்தித்து பேசும் கிளிப்சுகளை நெட்டிசன்கள் மீம்ஸ்களாக வெளியிட்டு கலாய்த்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications