Ethirneechal: ஜவ்வாக இழுக்கும் எதிர்நீச்சல்.. அதிரடியாக சீரியலில் இருந்து விலகிய கதாநாயகி! அவரே வெளியிட்ட பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல், பெண்களின் முன்னேற்றம், சுயமரியாதை, தைரியம் போன்ற விஷயங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக தொடங்கப்பட்ட ஒன்று. ஆனால், சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிகிறது - பெண்கள் முன்னேறவேண்டும் என்றால், முதலில் அவங்களுக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வரணும்!

திருச்செல்வம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த சீரியலில் கனிகா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, பார்வதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவந்த நிலையில், ஆதி குணசேகரன் என்ற ஒரே மனிதர் முழு குடும்பத்துக்கும், குறிப்பாக பெண்களுக்கும் நிரந்தர பஞ்சாயத்து ஆபீசராக செயல்பட்டு வருகிறார். வீட்டுக்குள்ளே பெண்கள் நிம்மதியா சுவாசிக்க ஆரம்பிச்சா போதும்... உடனே குணசேகரன் "இன்னொரு பிரச்சனை ரெடி"ன்னு களத்தில் இறங்கிடுறார்.

Ethirneechal Serial sun tv Kanika

இந்த சூழலில், ஆதி குணசேகரனின் மனைவி ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை கனிகா, கடந்த சில மாதங்களாகவே சீரியலில் காணப்படவில்லை. கதையில், தன் மகன் தர்ஷனுக்கு அவன் காதலித்த பார்கவியையே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று போராடிய ஈஸ்வரி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கணவனால் தாக்கப்பட்டு, தலை சுவரில் மோதியதால் கோமாவுக்கு செல்வதாக காட்டப்பட்டது.

அதன் பிறகு ஈஸ்வரி ஆஸ்பத்திரி படுக்கையிலேயே இருப்பதாக காட்டப்படுகிறது. இதற்கிடையில், ஈஸ்வரியின் கனவான "தமிழ் சோறு" ஃபுட் டிரக் பிசினஸ் மட்டும் வெற்றிகரமாக ஓடுகிறது. ஆனால் அந்த ஐடியா கொடுத்த ஈஸ்வரி மட்டும் இன்னும் கண் விழிக்காமலே கோமாவில் இருப்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் காமெடியாவாகவும், கொஞ்சம் வேதனையாகவும் தான் இருக்கிறது.

"பெண்கள் முன்னேற்றம்"ன்னு சொல்லிக்கிட்டு, முன்னேற்றத்துக்கு ஐடியா கொடுத்த பெண்ணையே படுக்கையில போட்டு விட்டாங்களே என்ற குரல் சமூக வலைதளங்களில் பலமாக ஒலிக்கிறது. இந்நிலையில், ஈஸ்வரியாக நடித்த கனிகாவே இனி எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நடிக்க மாட்டேன் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தாலும், பலர் "இந்த சீரியலில் இருந்து விலகியது நல்ல முடிவு தான்" என்றே கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏனெனில், இந்த சீரியலில் பெண்கள் ஒவ்வொருவரும் ஒரு பிரச்சனையிலிருந்து வெளியே வருவதற்குள், அதைவிட பெரிய பிரச்சனை ரெடி. வீட்டுக்குள்ளே குணசேகரன் பஞ்சாயத்து பண்ணுகிறார் என்றால், வெளியில் சமுதாயமும் பெண்களை அடிக்கடி தோற்கடிப்பது போலவே கதையும் நகர்கிறது.

Ethirneechal Serial sun tv Kanika

இதனால், பெண்கள் முன்னேற்றம் பேசும் சீரியல் என்ற பெயரில், பெண்கள் தொடர்ந்து சோதனைகளை சந்திப்பதைப் பார்க்க ரசிகர்களே மனம் நொந்து போயுள்ளனர். அதனால் தான், "ஈஸ்வரி கதாபாத்திரம் எப்போ எழும்?" என்று காத்திருந்த ரசிகர்களே, இப்போது "இந்த சீரியலில் இருந்து கனிகா விலகியதே நல்லது" என்று கூறும் நிலைக்கு வந்துள்ளனர். மேலும், ஈஸ்வரி கதாபாத்திரத்தை இனி வேறு யாராவது தொடர்வார்களா? இல்லை கதையே முடித்து விடுவார்களா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

மொத்தத்தில், எதிர்நீச்சல் தொடர்கிறது இன்னும் எத்தனை நாளைக்கு பெண்களை முன்னேற்ற பெயரில் சோதித்துக் கொண்டே போகப் போகிறது என்பதே, தற்போது ரசிகர்களின் பெரிய கேள்வியாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+