எதிர்நீச்சல் டுவிஸ்ட்.. பர்ஹானா அணியில் ஞானம்.. இனி நடக்கப்போவது இதுதானா? ஜனனிக்கு தெரிய வருமா உண்மை
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத பல டுவிஸ்டுகள் அடுத்தடுத்து நடந்து கொண்டிருக்கிறது.
அந்த வரிசையில் ஜீவானந்தத்தின் பிஏ பர்ஹானாவோடு சேர்ந்து ஞானம் புகைப்படங்களை எடுத்திருக்கிறார்.
அதே நேரத்தில் பர்ஹானா வீட்டிற்குள் வந்து விட்டதால் இனி கதை எப்படி போகப் போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பாராத அடுத்தடுத்த திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஜீவானந்தம் பெயருக்கு பட்டமாளின் சொத்து மாறியது பற்றி குணசேகரன் மற்றும் குடும்பத்திற்கு தெரிய வந்ததும் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அதனால் குணசேகரனுக்கு நெஞ்சுவலியே வந்து மருத்துவமனையில் சேர்ந்து இருக்கிறார்.
அதைத் தொடர்ந்து இனி ஜீவானந்தத்திடம் சண்டையிட்டோ அல்லது கெஞ்சியோ ஜனனி, நந்தினி, ஈஸ்வரி மூவரும் சொத்தை மீட்டு கொண்டு வர வேண்டும். அப்போதுதான் குணசேகரன் உடல்நிலை சரியாகும் என்று அதற்கான முயற்சியில் இறங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த சீரியலில் ஞானம் மற்றும் ஜீவானந்தத்தின் பிஏ பர்ஹானா இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது.
இதனால் இன்னும் ஒரு சில எபிசோடுகளில் ஜீவானந்தம் மற்றும் அவருடைய பி ஏ பர்ஹானா குணசேகரின் வீட்டுக்குள் வந்து நாட்டாமை செய்யப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இப்போது குணசேகரன் குடும்பம் இருக்கும் வீடும் அந்த 40%இல் அடங்கி இருக்கிறது என்று ஆடிட்டர் கூறி இருக்கிறார்.
அதனால் குணசேகரன் ஹாஸ்பிடல் இருந்து வீட்டிற்கு வந்ததும் அல்லது அதற்கு முன்பு கூட ஜீவானந்தம் தன்னுடைய ஆட்களோடு இந்த வீட்டில் வந்து இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் இப்போது ஜனனி ஜீவானந்தமும் பெண்களை இளக்காரமாக பேசிக் கொண்டிருக்கிறார் என்று கோபத்தில் புலம்பி கொண்டிருக்கிறார்.

ஆனால் ஜீவானந்தம் இதே வீட்டிற்குள் வந்த பிறகு தான் பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை மற்றும் முக்கியத்துவத்தை பற்றி ஜனனிக்கு எடுத்து சொல்லி ஜனனி மற்றும் மற்ற மருமகள்கள் அனைவரையும் தன்னுடைய அணியில் சேர்த்துக்கொண்டு குணசேகரனை எதிர்த்து நிற்பதற்காக அவர்களுக்கு வழிவகைகளை செய்து கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பர்ஹானாவை போலவே ஒரு டவலை தன்னுடைய தலையில் போட்டு கொண்டு ஞானம் இதுதான் புதுவகை ஹிஜாப் என்று கூறி இருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு அதிகமான ரசிகர்கள் நீங்க உங்க அண்ணனுக்கு துரோகம் பண்ணிட்டீங்களே..!? இப்படி கட்சி மாறி சேர்ந்துட்டீங்களே பாவம் குணசேகரன்..! என்று பரிதாபமாக கமெண்ட்டுகளும் வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications