எலும்பு முறிந்து நடக்க கஷ்டப்படும்எதிர்நீச்சல் கதாநாயகி..நலம் விசாரித்த ராதிகா..எதிர்பார்க்காத பதில்
எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிஹா தன்னுடைய காலில் பெரிய கட்டோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட, நடிகை ராதிகா அவரிடம் நலம் விசாரித்திருக்கிறார்.
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கேரக்டரில் நடிகை கனிஹா நடித்து வருகிறார்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கனிஹா சமீபத்தில் தன்னுடைய காலில் பெரிய கட்டோடு நடக்கவே கஷ்டப்படும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.
இந்த நிலையில் நடிகை கனிஹா உடல் நலம் குறித்து நடிகை ராதிகா விசாரித்திருக்கிறார். இதை குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஈஸ்வரியின் அறிமுகம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் தனி இடத்தை பிடித்து விட்டது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டனர். அதிலும் குறிப்பாக ஒரு சில நடிகர்கள் வெள்ளி திரையில் இதுவரைக்கும் பிரபலமாக இருந்துவிட்டு முதல் முறையாக சின்னத்திரையில் அறிமுகம் ஆகி இருக்கின்றனர். அதில் ஒருவர் தான் நடிகை கனிஹா. இவருடைய இயற்பெயர் திவ்யா வெங்கடசுப்பிரமணியன் என்பது தானாம். இவர் திரைப்படங்களில் நடிக்கும் போது தான் இவருடைய பெயர் கனிஹா என்று மாற்றி இருக்கிறார். இவர் மதுரையில் 1982 ஆம் ஆண்டு தான் பிறந்திருக்கிறாராம்.

அசத்தலான திறமைகள்
கன்னடம், மலையாளம், தெலுங்கு என பழமொழி திரைப்படங்களிலும் கனிஹா நடித்திருக்கிறார். கல்லூரி படிக்கும் போது பாட்டு பாடுதல், நாடகம் போன்றவற்றில் ஆர்வமாக கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை என்ற போட்டியில் பங்கு பெற்று வெற்றியும் பெற்றிருக்கிறார். அதன் மூலமாகத்தான் இவர் திரைத்துறைக்கு அடி எடுத்து வைத்திருக்கிறார். திரைத்துறையில் நடிகையாக மட்டுமல்லாமல் பலருக்கு பின்னணி குரல் கொடுத்தும் வந்திருக்கிறார். இவர் நடித்த முதல் திரைப்படம் ஆன 5 ஸ்டார் திரைப்படத்தில் ஒரு பாடலும் பாடி இருக்கிறார். சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியாவுக்கு கனிஹா குரல் கொடுத்திருக்கிறார்.

விளம்பர மாடல்
நடிகை கனிஹா நடிகையாக மட்டுமல்லாமல் சென்னை சில்க்ஸ் விளம்பரம், கல்யாண் சேலை, தங்க ரத்தின மாளிகை, டாடா கோல்ட், ஆச்சி மசாலா போன்ற பொருள்களுக்கு விளம்பர மாடலாகவும் நடித்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கர்ப்ப காலத்தில் பல பிரச்சனைகளை தாண்டி மகனை பெற்றெடுத்து சினிமாவை விட்டு சில காலம் விலகி இருந்த இவர் மீண்டும் முதல் முறையாக எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கேரக்டரில் நடித்து வருகிறார்.

வெளியிட்ட புகைப்படம்
சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருக்கும் கனிஹா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போது வெளியிட்ட புகைப்படம் பலருக்கும் அதிர்ச்சி கொடுத்து இரக்கிறது. காரணம் தன்னுடைய தன்னுடைய காலில் அடிபட்டிருக்கும் நிலையில் ஊன்றுகோல் உதவியோடு நின்று கொண்டு புகைப்படம் எடுத்து அதில் பதிவிட்டு இருக்கிறார். அதில், "ஒரு வாரம் முடிந்தது. இன்னமும் ஐந்து வாரங்கள் செல்ல வேண்டியது உள்ளது. நான் தற்போது புதிய ஸ்பூட்ஸ் உடன் நடக்க கற்றுக் கொண்டு வருகிறேன்" என்று பதிவிட்டு இருக்கிறார்.

காலில் எலும்பு முறிவு
நடிகை கனிஹாவின் இந்த புகைப்படத்தை கண்டு நலம் விசாரித்துள்ள நடிகை ராதிகா என்ன ஆனது என்று கேட்டிருக்கிறார். இதற்கு கனிஹா," கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது. மேலும் தசையிலும் அடிபட்டு இருக்கிறது" என்று கூறியிருக்கிறார். நடிகை கனிஹா வெளியிட்ட பதிவிற்கு தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்கள் அதிகமாக ஃபீல் பண்ணி கால் விரைவில் குணமடைய வேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள். எதிர்நீச்சல் சீரியலில் தற்போது தான் கனிஹா, காலேஜில் வேலை கிடைத்திருக்கிறது. இனி அவர் அங்கே வேலை செய்வாரா? இல்லையா? என்று எதிர்பார்ப்போடு இருக்கும் நிலையில், தற்போது இவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்று சிலர் பீல் பண்ணி வருகின்றனர். இன்னும் ஒரு சில ரசிகர்கள் ஏற்கனவே எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரிக்கு மட்டும் தனி பிரேம் வைக்கிறார்கள். எங்கேயோ சூட் செய்து, இங்கே சூட் பண்ணின மாதிரி செய்கிறார்கள். என்று கருத்து கூறி வந்த நிலையில் ஓ இது தான் காரணமா என்று இப்போது புரிந்து கொண்டிருக்கின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications