Flashback: எதிர்நீச்சல் குணசேகரனால் எனக்கு வந்த பிரச்சனைகள்.. மாரிமுத்து பகிர்ந்த சம்பவங்கள்
சென்னை: நடிகர் மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடித்து வந்தார்.
எதிர்நீச்சல் சீரியலில் தான் நடித்து பேசிய சில வார்த்தைகளால் நிஜ வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் குறித்து அவர் பேசியிருக்கிறார்.

காட்சிக்காக தான் பேசியதை எல்லாம் நிஜம் என்று நம்பி தன்னுடைய குடும்பத்தினரும் தன்னிடம் கேள்வி கேட்டது குறித்து நடிகர் மாரிமுத்து பல தகவல்களை பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டர் தான் பலராலும் பாராட்டப்பட்டும், திட்டப்பட்டும் வருகிறது. இந்த சீரியலில் இந்த கேரக்டருக்கு மட்டும் தான் அதிகமான முக்கியத்துவமும் இருந்து வருகிறது. வில்லனாக இருந்தாலும் இவரை பலர் ரசிக்கின்றனர். குணசேகரனின் கேரக்டரில் இன்றும் பலர் இருக்கிறார்கள் என்று சொல்லும் வகையில் தான் இருக்கிறது. ஆனாலும் குணசேகரன் தன்னுடைய தனி பாடி லாங்குவேஜ் மற்றும் பேச்சு திறமையின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் தனி இடத்தை பிடித்து விட்டார்.
இந்த நிலையில் குணசேகரன் ஆக நடித்த மாரிமுத்துவிற்க்கு அடுத்தடுத்து பல பிரச்சனைகள் சமீபகாலமாகவே வந்த வண்ணமாக இருந்தது. அதிலும் குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு இவர் ஒரு பெண்ணுக்கு தன்னுடைய மொபைல் நம்பரை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிறகு அதற்கான விளக்கத்தையும் தைரியமாக மாரிமுத்து கொடுத்து இருந்தார். அதற்கு பிறகு தற்போது அந்த செய்தி கொஞ்சம் அடங்கி இருக்கும் நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் மாரிமுத்து இந்த எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதால் தன்னுடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது என்று கூறி இருந்தார்.
அதற்கு காரணம் எதிர்நீச்சல் சீரியலில் சக்தி மற்றும் ஜனனியின் திருமணத்தின்போது ஜனனி திருமண மேடைக்கு டான்ஸ் ஆடிய படியே வசுவோடு வரும்போது, இது எல்லாம் நம்ம பாரம்பரியம் கிடையாது. எப்படி கல்யாண மேடைக்கு ஒரு கல்யாண பொண்ணு டான்ஸ் ஆடிட்டு வரலாம் என்று அதிகமாக திட்டி இருப்பார்.
அப்போது பறக்கும் ட்ரோன் கேமராக்களையும் அவர் திட்டி இருப்பார். இந்த நிலையில் அந்த நேரத்தில் மாரிமுத்துவின் மீது பல்வேறு புகார்கள் எழுந்து வந்தது. ஒரு இயக்குனராக இருந்து கொண்டு இப்படி எல்லாம் பேசலாமா என்று பலர் அவரைப் பற்றி கேள்வி எழுப்பிக் கொண்டிருந்த நிலையில் அதற்கு விளக்கமும் கொடுத்து இருந்தார்.
ட்ரோன் கேமரா வைத்து படம் எடுக்கும் நபர்கள் எல்லாம் ஒரு சங்கம் வைத்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் எனக்கு போன் செய்து என்னிடம் கேட்டார்கள். அப்போது நான் அதற்கு விளக்கம் கொடுத்தேன். நாங்கள் அதை தவறு என்று சொல்லவில்லை. அந்த சீரியலில் கதை எப்படி இருக்கிறது அதற்கு தகுந்தால நான் நடித்தேன் அது என்னுடைய கருத்து அல்ல என்று விளக்கம் கொடுத்தேன்.
அது மட்டுமல்லாமல் இந்த ட்ரோன் கேமராவுக்கு நான் எதிரி எல்லாம் கிடையாது. அந்த சூட் எடுத்தது கூட ட்ரோன் கேமரா வைத்து தான் எடுத்தோம் என்று விளக்கம் கொடுத்து அந்த பிரச்சினையை முடித்து வைத்தேன். ஆனாலும் எதிர்நீச்சல் சீரியலில் நான் நடித்திருந்ததை பார்த்து என்னுடைய அக்கா மற்றும் சில உறவினர்கள் எனக்கு போன் செய்து எதற்காக இப்படி கல்யாண வீட்டுல பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்டாங்க.
நான் அதற்குப் பிறகு இது நான் நடிக்கும் சீரியல் அந்த கதைப்படி நான் அப்படி நடித்தேன். அங்கு ஒரு சண்டையும் கிடையாது பிரச்சனையும் கிடையாது என்று விளக்கம் கொடுத்தேன். அதற்கு பிறகு தான் அவர்களுக்கே புரிந்தது. நான் யார் கூடவோ சண்டை போட்டுக் கொண்டிருக்கிறேன் என்று தான் அவர்களும் பயந்துவிட்டார்கள் என்று அந்த வீடியோவில் மாரிமுத்து பேசியிருந்தார். அந்த வீடியோவை இணையத்தில் ரசிகர்கள் பகிர்ந்து அவருடைய மறைவிற்கு தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications