எதிர்நீச்சலில் எல்லாமே சரிதான்.. ஆனால் இந்த லாஜிக் தான் இடிக்குது..? இதை மறந்துட்டாங்களோ!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் இந்த சீரியலில் சில விஷயங்கள் புரியாத புதிராக இருக்கிறது. அது குறித்து ரசிகர்களுக்கு பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பட்டம்மாள் தனக்கு 40% ஷேர் இருப்பது பற்றி சொன்ன பிறகு குணசேகரனிடம் நடந்து கொண்டதற்கும் இப்போது நடந்து கொள்வதற்க்கும் வித்தியாசம் இருக்கிறது அதை நீங்கள் கவனித்தீர்களா? அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எதிர்நீச்சல் சீரியலில் வெற்றிக்கு காரணம் சீரியலில் விறுவிறுப்பான கதைகளும், ட்விஸ்டுகள் உடனுக்குடனே உடைபடுவதும் அதிகமான ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. ஒரு உண்மையை தெரிவதற்கு பல நாட்கள் ஆக கதை இழுத்துக் கொண்டு போகாமல் அடுத்தடுத்து வேகமாக கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் சீரியலில் நடிகர்களும் தங்களுடைய நடிப்பை இயல்பாக காட்டி வருகின்றனர்.
சீரியலில் இயக்குனர் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை ரசிகர்களால் யூகிக்க முடியாத அளவிற்கு கதையை சஸ்பென்சாகவே கொண்டு போய்க் கொண்டிருக்கிறார். அதனாலே இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரிக்கின்றனர். ஒரு சில நாட்கள் சீரியல் பார்த்துவிட்டால் பிறகு பார்க்காமல் இருக்க முடியவில்லை என்றும் பலர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சீரியலிலும் சில விடை தெரியாத கேள்விகள் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அது குறித்து பார்க்கலாம்.
அதாவது ஆரம்பத்தில் இருந்த ஒரு சில கேரக்டருக்கு சமீப காலமாக பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்காமல் கதை நகர்ந்து வருகிறது. அதாவது எஸ்கேஆர் குடும்பத்திற்கும் குணசேகரனுக்கும்தான் ஆரம்பத்தில் பெரிய அளவில் பிரச்சனை வந்து கொண்டே இருந்தது. ஆனால் இப்போது எஸ் கே ஆர் குடும்பம் என்ன ஆனது என்று தெரியவில்லை. அதே நேரத்தில் பட்டம்மாள் அப்பத்தா ஆரம்பத்தில் அமைதியாக இருந்த நிலையில் பிறகு தன்னுடைய பெயர் பட்டம்மாள் பிஏ என்று சொல்லி பெரிய அளவில் எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து குணசேகரின் சொத்துக்களில் தனக்கு 40% ஷேர் இருக்கிறது என்பதை சொல்லி எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தார். இந்த நிலையில் அதற்கு பிறகு வந்த பிரச்சனைகள் எல்லோருக்குமே தெரியும் சொத்தை தன் வசப்படுத்த வேண்டும் என்று குணசேகரன் அப்பத்தாவை போட்டு தள்ளுவதற்காக கூட முயற்சி எடுத்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அப்பத்தா கோமாவில் இருந்தார். பிறகு அவராகவே கோமாவில் இருந்து கண் முழித்து விட்டு விட்டார்.

இந்த நிலையில் கண் முழித்த பிறகு கூட அப்பத்தா குணசேகர்களிடம் இந்த வீட்டிலும் என்னுடைய பங்கு இருக்கிறது. எனக்கு சேர வேண்டிய 40% ஷேருக்கு கீழ் போஷன் என்ன என்னை சார்ந்தது. நீ ஏதாவது பிரச்சனை செய்தால் கீழே யாரும் வர முடியாமல் நான் எல்லாவற்றையும் அடைத்து விடுவேன் என்று மிரட்டி இருந்தார். ஆனால் குணசேகரன் இப்போது வீட்டை விட்டு கடிதம் எழுதிவிட்டு போன பிறகு ஜான்சி ராணி வீட்டிற்குள் வந்து ராஜாங்கம் செய்து கொண்டிருக்கிறார்.
ஆனால் அது பற்றி அப்பத்தா எதுவுமே வாய் திறக்காமல் இருக்கிறார். நேற்றைய எபிசோடில் கூட கிச்சனுக்குள் நுழைந்த ஜான்சி ராணி நான் தான் சமையல் செய்வேன் என்று பிரச்சனை செய்திருந்தார். அதுபோல இன்று வெளியான பிரமோவிலும் நந்தினி மற்றும் ரேணுகாவிடம் நீங்கள் உங்களுடைய அடுத்தடுத்த வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டே இருங்கள் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அப்போதும் ஜான்சிராணி இடம் பெரிய அளவில் எந்த பிரச்சனையும் செய்யவில்லை. இது குணசேகரன் வருவது வரைக்கும் ஜான்சி ராணி இந்த வீட்டில் ஆட்டம் போட வேண்டும் என்பதற்காக இப்படி கதை மாற்றப்பட்டிருக்கிறதா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதுபோலவே நந்தினி முதியோர் இல்லத்திற்கு சமையல் செய்து கொடுப்பதாக காண்ட்ராக்டில் கையெழுத்து போட்டு இருந்தார். ஆனால் ஒரு நாள் மட்டும் தான் சமையல் செய்து கொண்டு பொவது போன்று காட்சிகள் வந்திருக்கிறது. பிறகு அதற்கான எந்த ஒரு காட்சிகளும் இல்லை. சில நேரங்களில் காட்சிகளை தகர்த்து இருந்தால் கூட நான் சமையல் செய்து அனுப்பிவிட்டேன், என்னுடைய வேலை போய்க் கொண்டிருக்கிறது என்பது போன்று ஏதாவது வசனங்கள் கூட இல்லையே.
அது போல ரேணுகாவும் ஆன்லைனில் டான்ஸ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அதுவும் எப்போதும் காட்டப்படவில்லை என்பது பல்லாருடைய கேள்வியாக இருக்கிறது. 24 மணி நேரமும் சீரியலில் அவர்கள் செய்வதை எல்லாவற்றையும் காட்ட முடியாது. ஆனால் அதற்கான வேலைகள் செய்து கொண்டிருக்கிறோம் என்பது பற்றிய டயலாக்குகள் கூட சில நாட்களாக காணவில்லை. ஜான்சிராணியோடு நந்தினி மல்லு கட்டிக்கொண்டு தான் இருக்கிறாரே தவிர வேறு எந்த வேலையும் கிச்சனில் செய்த மாதிரி இல்லை என்பது பலர் கண்டுபிடித்த ரகசியம். ஆனால் இனி என்ன மாதிரி கதை நகரப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications