எதிர்நீச்சல் விசாலாட்சி "காசி”க்கு போகலையா? சொன்னது பொய் தானா? ஜீவானந்தத்திற்கு மாறிய சொத்து.!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் விசாலாட்சி கேரக்டரில் நடிகை சத்யபிரியா நடித்து வருகிறார்.
இவர் சில தினங்களுக்கு முன்பு இந்த சீரியலில் தான் காசிக்கு போய்விட்டு வருவதாக கூறியிருந்தார். ஆதிரை மற்றும் கரிகாலன் திருமணம் முடிவடைந்த நிலையில் விரக்தியில் இருந்த விசாலாட்சி சக்தியிடம் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்து விட்டு போயிருந்தார்.

இந்த நிலையில் விசாலாட்சியாக நடிக்கும் சத்யபிரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
சன்டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அடுத்தடுத்து திருப்பங்களை கொண்டு வருகிறது. அதனாலயே இந்த சீரியல் தற்போது டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த வாரம் முதல் இடத்தில் இருந்த நிலையில் தற்போது இந்த வாரமும் அதே முதல் இடத்தை தொடர்ந்து பிடித்திருக்கிறது.

ஆரம்பத்தில் ஆதிரை மற்றும் அருண் காதலில் பெரிய அளவில் அழுத்தம் இல்லாத நிலையில் அது தொடர்ந்து வந்த பிரச்சனைகள் ரசிகர்களின் மத்தியில் சலிப்பு ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் ஆதிரை மற்றும் கரிகாலன் திருமணம் நடைபெற்றது. அது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்த நிலையில் தற்போது அதை தொடர்ந்து சீரியல் விறுவிறுப்பு அடைந்திருக்கிறது.
ஆதிரை மற்றும் கரிகாலன் திருமணம் நடைபெற்றது கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளாத விசாலாட்சி அதாவது ஆதிரையின் அம்மா, ஆதிரை கல்யாணம் முடிந்து அடுத்த நாளே தான் காசிக்கு போகிறேன் என்று கூறி தான் சேர்த்து வைத்திருந்த தன்னுடைய அம்மாவின் நகைகளை எல்லாம் சக்தி இடம் கொடுத்து நீ தான் இனி உன் தங்கச்சியை நல்லா பாத்துக்கணும் உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.

ஆரம்பத்தில் நீ எடுப்பார் கை பிள்ளையாய் இருக்கியே என்று நான் ரொம்ப வருத்தப்பட்டவருத்தப்பட்டேன். ஆனா இப்ப நீ சுயமா சிந்திச்சு பேச தொடங்கிட்ட, அதனால இனி நீ ஆதிரையை நல்லா பாத்துக்க. எனக்கு மனசு சரியில்ல நான் காசிக்கு போயிட்டு வருகிறேன் என்று சொல்லி இருந்தார். அதுபோல தற்போது ஒரு சில எபிசோடுகள் ஆகவே அவர் இல்லை.
இந்த நிலையில் விசாலாட்சியாக நடிக்கும் சத்யபிரியா தன்னுடைய நிஜ மகனை பார்ப்பதற்காக வெளிநாடு சென்று இருக்கிறார். அங்கு தன்னுடைய மகன் மற்றும் மகன் குடும்பத்தோடு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் அப்போ நீங்க காசிக்கு போகலையா? வெளிநாட்டுக்கு போய் இருக்கீங்களா? என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் ஜீவானந்தத்தின் பெயருக்கு இன்னும் இரண்டு நாளில் பட்டமாளின் சொத்து மாறிவிடும் என்று ஜீவானந்தத்தின் பிஏ கூறியிருந்தார். இதனால் இனி ஜனனியால் அப்பத்தாவின் 40% சொத்தை காப்பாற்ற முடியாமல் போய்விடுமா? அல்லது ஜீவானந்தத்தோடு சேர்ந்த கௌதம் ஜனனிக்கு உதவி செய்வாரா? ஏற்கனவே ஜீவானந்தம் ஜனனி பற்றி பேசிக் கொண்டிருந்ததை கேட்டு கௌதம் அதிர்ச்சி அடைந்திருந்தார். இந்த நிலையில் இனி கௌதம் என்ன முடிவெடுக்கப் போகிறார்? கதை எப்படி போகப்போகிறது என்று எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications