மகளிர் தினத்தில் எதிர்நீச்சல் 2 டீம் எடுத்த உருப்படியான முடிவு.. ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்தது
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ரசிகர்கள் ரொம்ப நாள் எதிர்பார்த்து இருந்த காட்சிகள் வரத் தொடங்கி இருக்கிறது. அதுவும் மகளிர் தினத்தில் எதிர்நீச்சல் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது போன்ற காட்சிகள் வைத்திருக்கிறார்கள். இது பலருடைய பாராட்டை பெற்று வருகிறது. அது பற்றி பார்க்கலாம்.
சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே பல ஹிட் சீரியல்களை இயக்கியிருந்தாலும் எதிர்நீச்சல் சீரியல் இவருக்கு பெரிய அளவில் 2k கிட்ஸ்கள் மத்தியிலும் பிரபலத்தை கொடுத்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த சீரியல் திடீரென முடிவுக்கு வந்தது. இந்த சீரியலில் ஆதி குணசேகரன் ஆக நடித்து வந்த மாரிமுத்துவின் இறப்பிற்கு பிறகு கதை வேறு விதமாக பயணிக்க தொடங்கியது. அது ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை.

முதல் பாகம் திடீர் முடிவு
சீரியலையே பார்க்காத இளைஞர்களையும் கூட இந்த சீரியல் விரும்பி பார்க்க வைத்தது ஆனால் கதையில் ஏற்பட்ட மாற்றத்தால் சீக்கிரமாக இழுத்து மூடி விட்டார்கள். ஆனால் இந்த சீரியலில் இரண்டாவது பாகம் வரவேண்டும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. அதனாலேயே சில மாதங்கள் கழித்து இரண்டாவது பாகமும் தொடங்கப்பட்டது. எதிர்நீச்சல் தொடர்கிறது என்று இரண்டாவது பாகத்தை முதல் பாகத்தின் முடிவிலிருந்து தொடர்ந்து இருந்தார்கள்.
ரசிகர்களின் அதிருப்தி
ஆனாலும் இந்த சீரியல் தொடங்கி இரண்டு மாதங்களாக முதல் சீசன் போலவே இழுத்துக் கொண்டிருப்பது பலருக்கும் வருத்தத்தையும், அதிருப்தியையும் கொடுத்து இருந்தது. எதிர்நீச்சல் பெண்கள் எப்போதுதான் வெற்றியை நோக்கி போவார்கள்? வீட்டிற்குள்ளேயே இவர்கள் மீண்டும் மீண்டும் பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டிருப்பது பார்க்கும் ரசிகர்களை கவரவில்லை என்பது பலருடைய கருத்து.

சக்தியின் மாற்றம்
இதுவரைக்கும் பெண்களுக்கு சப்போர்ட்டாக இருந்த சக்தியும் இப்போது அண்ணன் பக்கம் சாய்ந்து விட்டார். இதனால் இனி எதிர்நீச்சல் பெண்கள் அந்த வீட்டை விட்டு வெளியேறி சுயமாக முன்னேற வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த சீரியலில் திடீர் திருப்பம் வந்திருக்கிறது.

வீட்டை விட்டு வெளியேற்றம்
அதாவது இதுவரைக்கும் குணசேகரன் அவருடைய வீட்டிற்குள் வரக்கூடாது என்று கோர்ட்டில் எதிர்நீச்சல் பெண்கள் ஸ்டே ஆர்டர் வாங்கி இருந்தனர். ஆனால் இப்போது குணசேகரன் வக்கீல் மூலமாக மீண்டும் வீட்டுக்குள் வருவதற்கு ஏற்பாடுகள் செய்துவிட்டனர். இதனால் விசாலாட்சி எதிர்நீச்சல் பெண்களை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார்.
மகளிர் தினத்தில் நல்ல முடிவு
அப்போது பெண்கள் எல்லோரும் தைரியமாக வீட்டை விட்டு கிளம்பி இருக்கிறார்கள். இதை பார்க்கும் போது இதை தானே இத்தனை நாட்களாக எதிர்பார்த்து இருந்தோம், இப்பவாவது இதை செஞ்சீங்களே என்று பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். வீட்டில் உள்ளேயே அவமானப்பட்டு கொண்டும், அடி வாங்கிக் கொண்டு இருக்காமல் இனி அவர்களுடைய திறமையில் முன்னேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்களின் ஆட்டம் ஆரம்பம்
சீரியலில் வேகம் அதிகரித்தால் ரசிகர்கள் மத்தியிலும் இது முன் உதாரணமாக இருக்கும். ஏற்கனவே இந்த சீரியலில் கதிர், ஞானம், குணசேகரன் என எல்லோரும் ஹை பிச்சில் கத்திக்கொண்டே இருக்கிறார்கள். இனி அவர்களுடைய கத்தலை அடக்குவதற்கு பெண்கள் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications