Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாரிமுத்துவின் வீடு விஷயத்தில் வெளியே சொல்லுவதெல்லாம் பொய்.. நடந்தது இதுதான்.. மனைவி எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த நடிகர் மாரிமுத்துவின் வீடு குறித்து சமூக வலைதளத்தில் அவருடைய நண்பர்கள் உறவினர்கள் என பலரும் பல தகவல்கள் கூறி வருகின்றனர்.

நடிகர் மாரிமுத்து பெரிய அளவில் ஆசைப்பட்டு வீடு கட்டினார். ஆனால் அந்த வீட்டிற்குள் அவர் போகவில்லை என்று பலர் கூறி வருகின்றனர்.

Everything that is said about actor Marimuthus house is a lie The wife is emotional

ஆனால் பலரும் சொல்வதெல்லாம் பொய் என்றும் என்ன நடந்தது என்பது பற்றி முதல்முறையாக நடிகர் மாரிமுத்துவின் மனைவி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

நடிகர் மாரிமுத்து எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவர் எதிர்நீச்சல் சீரியலில் நடித்ததன் மூலமாக பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். மீம்ஸ் கிரியேட்டர்களில் ட்ரெண்டிங் ஸ்டார் ஆகவும் வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் பல வருடமாக கஷ்டப்பட்டு போராடி புகழின் உச்சத்தில் இருக்கும் போதே அவரை மரணம் தழுவிக் கொண்டது.

அதே நேரத்தில் மாரிமுத்து உயிரோடு இருக்கும் வரைக்கும் அவருடைய சொந்த வீட்டு கனவு பற்றி அடிக்கடி தன்னுடைய நண்பர்களிடமும் தன்னுடன் வேலை பார்ப்பவர்களிடமும் பேசிக் கொண்டிருப்பார் என்று பலரும் அவரைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து வந்தனர். இந்த நிலையில் மாரிமுத்துவின் மனைவி அது குறித்த விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதில் பலர் பேட்டிகளிலும் சரி, செய்திகளிலும் சரி மாரிமுத்து ஆசையாக கட்டிய வீட்டிற்குள் போகவில்லை அதற்குள் அவர் இறந்து போய்விட்டார் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதுவெல்லாம் உண்மை கிடையாது. என்னுடைய கணவர் ஒவ்வொரு மாதத்திற்கும் இரண்டு மூன்று முறை அந்த வீட்டிற்கு சென்று வருவார். அதில் போகும்போதெல்லாம் ஒவ்வொரு வேலையாக சொல்லி அதை மாற்றனும் இதை மாற்றனும் என்று மாற்றி பார்த்து பார்த்து கட்டிக் கொண்டு இருந்தார்.

Everything that is said about actor Marimuthus house is a lie The wife is emotional

அதுபோல நாங்கள் வீடு வாங்கி இருக்கும் அப்பார்ட்மெண்டில் வேறு யாரும் இவரைப் போன்று வீட்டிற்கு சென்று வந்திருக்க மாட்டார்கள். இவர் மட்டும்தான் அடிக்கடி அந்த வீட்டிற்கு போய்விட்டு வந்தார். அந்த வீட்டிற்கு நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக குடிப்பெயரவில்லை அவ்வளவுதான். அது போல சிலர் மாரிமுத்துவின் ஆவி அந்த வீட்டில் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதுவெல்லாம் கேவலம் இப்படியெல்லாம் யாராவது சொல்லலாமா?

என்னுடைய கணவர் இறந்து போயிருந்தாலும் அவர் எங்க கூட தான் இருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும். அவர் எங்களுக்கு ஒவ்வொரு முறையும் தன்னம்பிக்கையை கொடுத்திருக்கிறார். எந்த நேரத்திலும் உடைந்து போகக்கூடாது என்று எப்போதுமே சொல்லிக் கொண்டிருப்பார். எல்லோருக்கும் மரணம் ஒரு நாள் வரும். அதை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே இருக்கக் கூடாது அடுத்து என்ன செய்யணுமோ அதை நோக்கி பயணத்தை தொடங்க வேண்டும் என்று தான் அவர் சொல்லிக்கொண்டே இருப்பார்.

நாங்கள் இப்போதுதான் மன தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எங்களை நாங்களே ஆறுதல் படுத்தி கொண்டிருக்கிறோம். ஆனால் பலர் இந்த மாதிரி பேசுவது வேதனையாக இருக்கிறது. அதை நேரத்தில் அதிகமானோர் எங்களுக்கு ஆறுதலாக இருப்பதும் ரொம்பவே சந்தோஷமாகவும் இருக்கிறது என்றும் அந்த பேட்டியில் நடிகர் மாரிமுத்துவின் மனைவி பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+