கொத்தனாரே வணக்கம்.. நடிகர் காளி வெங்கட் மேடையில் பேச முடியாமல் நா தழுதழுத்து மகிழ்ச்சி.. சபாஷ் அப்பா
சென்னை: என்மீது அதிக நம்பிக்கை வைத்தவர் என்னுடைய அப்பாதான்.. இன்று சினிமாவில் என்னுடைய வளர்ச்சிக்கு என்னுடைய அப்பா மட்டுமே காரணம்.. நம்மைவிடவும், நம்மீது அதிக நம்பிக்கை வைப்பது நம்முடைய அப்பாக்கள்தான்" என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார் பிரபல நடிகர் காளி நடிகர்.. தன்னுடைய அப்பாவை பற்றி காளி வெங்கட் பேசிய பேச்சுதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள கிராமம் ஒன்றில் கிராமத்தில் பிறந்தவர் வெங்கட். சினிமா ஆசையால் சென்னைக்கு வந்து, வாய்ப்பு கிடைக்காமல், வியாபாரம் செய்து வந்தார்..

பிறகு டைரக்டர் விஜய் பிரபாகரன்மூலம் "தசையினை தீ சுடினும்" என்ற படத்தில், 2010-ல் விஜய் பிரபாகரனுடன் சேர்ந்து, காளி என்ற கேரக்டரில் நடித்தார். அப்போது முதல் காளி வெங்கட் என்றே அழைக்கப்படுகிறார்.
நாளைய இயக்குனர் புகழ்
அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும், அந்த கேரக்டர் பெயரை, தன்னுடனே சேர்த்துக்கொண்டார். கலைஞர் டிவி "நாளைய இயக்குனர்" நிகழ்ச்சியில் பல குறும்படங்களில் நடித்தார். அப்படித்தான் ராம்குமார் இயக்கிய முண்டாசுப்பட்டி என்ற குறும்படத்தில் காளி வெங்கட் நடித்து பெயர் பெற்றார். பிறகு இந்த குறும்படம் படமாக வந்ததும், அதிலும் நடித்தார்.. இதுவே அவரை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது.
கார்கி, இறுதிச்சுற்று, தெகிடி, மௌனகுரு, தடையற தாக்க, கலகலப்பு, உதயம் என்எச்40, மதயானை கூட்டம், வாயை மூடி பேசவும், மிருதன், ராட்சசன் உள்ளிட்ட பல படங்களில் காளி வெங்கட் நடிப்பு பேசப்பட்டது. தற்போது தமிழ் காமெடி மற்றும் கேரக்டர் நடிகர்களில் முக்கியமானவராக கருதப்படும் காளி வெங்கட், தன்னுடைய அப்பாவை பற்றி நிகழ்ச்சி ஒன்றில் உருக்கமாக பேசியிருக்கிறார்.
கொத்தனார் மகன்
Behind woods channel நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய காளி வெங்கட், "என்னுடைய அப்பா கொத்தனராக இருந்தவர்.. அவர் வேலை செய்யும்போது, அவருடன் வேலை பார்ப்பவர்கள், "கொத்தனாரே வணக்கம் கொத்தனாரே வணக்கம்" என்று வணக்கம் வைத்து கொண்டே வருவார்கள்..
பிரபலமாக வேண்டும் என்ற எண்ணமே எனக்கு என்னுடைய அப்பாவை பார்த்துதான் வந்தது.. என்னை எப்படி எப்படியோ செல்லமாக வளர்த்தார்.. சினிமாவில் வரவேண்டும் என்ற தீரா காதல், என்னைவிட, என்னுடைய அப்பாவுக்கு அதிகமாக இருந்தது. .
என்ஜினியர்கள் கெத்து
நான் என்ஜினியராக வரவேண்டும் என்றுதான் என் அப்பா முதலில் ஆசைப்பட்டார்..
இதுக்கு காரணம், என் அப்பா கொத்தனாராக இருக்கும்போது, என்ஜினியர்கள் சாயங்கால நேரத்தில் வருவார்கள்.. கட்டிட பணியில் குறையிருந்தால், அதை இடித்துவிட்டு மறுபடியும் முதலிலிருந்து செங்கல் வைத்து கட்ட சொல்வார்கள்.
அழுக்கு படியாத சட்டையுடன், சைட்டிற்கு வந்து, காலையிலிருந்து நாங்கள் செய்து
கொண்டிருக்கும் வேலையையே இடித்து தரைமட்டமாக்கும் அளவுக்கு திருத்தங்களை
சொல்வதை என் அப்பா கவனித்தார்..
பெட்டி செய்தி விளம்பரம்
எனவே, என்ஜினியர் போல அதிகாரமிக்க வேலையில் தன்னுடைய மகனும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.. அதனால்தான் என்னை என்ஜினியரிங் படிப்பில் சேர்த்து விட்டதாகவும் சொன்னார்.. ஆனாலும் அதில் அவரது ஆசை நிறைவேறவில்லை.
ஒருநாள் நாளிதழில், மாநிறம் கொண்ட 18 வயதுக்குட்பட்ட நடிகர், நடிகைகள் தேவை என்று விளம்பரம் வந்தது. புகைப்படத்துடன் தொடர்பு கொள்ளவும் என்று முகவரி தரப்பட்டிருந்தது.. இந்த பெட்டி செய்தி விளம்பரத்தை என்னுடைய அப்பாவிடம் காட்டி, அனுமதி கேட்டேன்.. அவரும் சரியென்றார்.. என் அப்பாவுக்கு அப்போது சம்பளமே 40 ரூபாய்தான்.. ஆனால், 50 ரூபாய் செலவு செய்து, சினிமாவுக்காக போட்டோக்களை என் அப்பா எடுத்தார்.
பூரித்துபோன அப்பா
என் மீது அபாரமான நம்பிக்கையை வைத்திருந்தார் என்னுடைய அப்பா.. சிறிது சிறிதாக சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.. என்னுடைய முகம் சிறிதாக பேப்பரில் வர ஆரம்பித்தது. உடனே காலையிலேயே வீட்டு பக்கத்தில் இருக்கும் டீக்கடைக்கு சென்றுவிடுவார்.. பேப்பரில் வந்துள்ள என்னுடைய முகத்தை அங்கு வருபவர்களுக்கெல்லாம் 11 மணி வரைக்கும், காட்டி மகிழ்வார்..
இன்று என்னுடைய வளர்ச்சிக்கு அவர் மட்டுமே காரணம்.. நம்மைவிடவும், நம்மீது அதிக நம்பிக்கை வைப்பது நம்முடைய அப்பாக்கள்தான்" என்று நெகிழ்ச்சியாக பேசினார்..












Click it and Unblock the Notifications