ரவி,சம்யுக்தா மீது இப்படி ஒரு கோபமா?ஆடியோ லீக் செய்த "இயக்குனர்”..வெளிவந்த பகீர் காரணம்
சென்னை: சீரியல் நடிகை சம்யுக்தா பற்றி அவருடைய கணவர் விஷ்ணுகாந்த் சமீபத்தில் சில ஆடியோக்களை வெளியிட்டு இருந்தார்.
அது குறித்து சம்யுக்தா சமீபத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதில் நான் அண்ணா என்று நம்பி பேசிய சீரியல் இயக்குனர் தான் இந்த ஆடியோவை வெளியிட்டு இருக்கிறார் என்று சம்யுக்தா கூறி இருக்கிறார்.
சின்னத்திரை ரசிகர்கள் பலருக்கும் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா குடும்பப் பிரச்சனை தெரிந்து இருக்கும். அந்த அளவிற்கு இந்த சின்னத்திரை தம்பதிகள் இணையதளத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றச்சாட்டுகளை வைத்து கொண்டிருக்கின்றனர்.
8 மாதங்களாக காதலித்து திருமண பந்தத்தில் நுழைந்த விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா திருமணமான இரண்டே மாதத்தில் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து இருக்கின்றனர். இவர்களில் யார் சரி யார் தவறு என்று யூகிக்க முடியாத வகையில் இருப்பதாக ரசிகர்களே குழம்பிப் போயிருக்கின்றனர்.
இந்த நேரத்தில் தான் விஷ்ணுகாந்த் தன் மீது தவறு ஒன்றும் இல்லை என்றும் சம்யுக்தா என்னை காதலித்துக் கொண்டிருக்கும் போது கூட ஏற்கனவே காதலித்த நிறைமாத நிலவே சீரியல் நடிகர் ரவியோடு பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அதை பற்றி இன்னொரு நபரோடு பேசி இருக்கிறார். அதை ரெக்கார்டு செய்த அந்த நபர் அந்த ஆடியோவை எனக்கு அனுப்பி வைத்திருக்கிறார் என்று கூறி இருந்தார்.
அந்த ஆடியோவை கேட்டு ரசிகர்கள் அதிகமானோர் சம்யுக்தாவை சமூக வலைத்தளத்தில் தீட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் அதுக்கெல்லாம் மனம் தளராத சம்யுக்தா அதை ஸ்கிரீன்ஷாட் ஆக எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து தன்னைப் பற்றி நெகட்டிவ் ஆக கருத்து வெளியிடுபவர்களுக்கும் பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சம்யுக்தா, தான் அண்ணா என்று நம்பி நிறைமாத நிலவு சீரியலின் இயக்குனரிடம் தான் பேசி இருந்தேன். அந்த நபர் தான் என்னுடைய ஆடியோவை விஷ்ணுகாந்த்க்கு அனுப்பி இருக்கிறார். அதுதான் இப்போது சமூக வலைத்தளத்தில் என்னை ஒரு குற்றவாளியாக மாற்றி இருக்கிறது.
அந்த இயக்குனர் இப்படி எல்லாம் செய்வதற்கு காரணம் என்ன தெரியுமா? அவருக்கு ஏற்கனவே என் மீதும் ரவி மீது ஏகப்பட்ட கோபம் இருக்கிறது. ஒருமுறை தனியார் youtube சேனல் ஒன்றில் நிறைமாத சீரியல் டீம்க்கு விருது வழங்கப்பட்டது. அப்போது சிறந்த நடிகைக்காகவும், அதிகமாக தேடப்பட்ட நடிகைக்காகவும் என எனக்கு இரண்டு விருதுகளும் சிறந்த நடிகர் என்று ரவிக்கும் விருது வழங்கப்பட்டது.
ஆனால் சிறந்த இயக்குனருக்கான விருது அந்த இயக்குனர் ஹரிஷுக்கு கொடுக்கவில்லை. அதனால் தான் கோபத்தில் அந்த மேடையிலே எங்களிடம் சண்டை போட்டு விட்டார். அந்த கோபத்தில் தான் இந்த ஆடியோவை வெளியிட்டு என்னையும் ரவியையும் கேவலப்படுத்தி விட்டார். இப்போது அவருக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அந்த மாதிரி தான் சந்தோஷத்தில் இருக்கிறார் என்று சம்யுக்தா கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications