Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாகூரில் தர்கா வாசல்ல நிஷா நூரை.. காய்ந்து கருவாடாகி போன நடிகை நினைவிருக்கா? கனவுலக சினிமா: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேற்கு வங்கத்தின் பிரபல முன்னாள் நடிகை சுமி ஹர் சவுத்ரி, சாலையோரத்தில் மோசமான நிலைமையில் கிடந்துள்ளார். சற்று மனரீதியான பாதிப்புக்கும் ஆளாகியிருக்கிறார்.. இவ்வளவு வருடங்கள் இவர் எங்கிருந்தார்? என்றே தெரியாத நிலையில், இப்போது சாலையில் சென்ற 3 இளைஞர்கள் அடையாளம் தெரியாமல் உருக்குலைந்த நடிகையை 2 நாட்களுக்கு முன்பு கண்டுபிடித்துள்ளார்கள். உடனே நடிகையை மீட்டு போலீஸார் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு, சிகிச்சையும் தந்து வருகிறார்கள். இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, 1980களில் பிரபலமான நடிகை ஒருவரை பற்றி நினைவுகூர்ந்துள்ளார்.

ஏராளமானோர் சினிமா வாய்ப்பையும் தேடி வருகிறாகள்.. அப்படி வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு படங்கள் அமைந்துவிடுமா? அப்படி வருபவர்கள் எல்லாருமே நடிகையாகிவிட முடியுமா? அப்படியே நடிகையானாலும் பெரிய இடத்துக்கு வந்துவிட முடியுமா? கிடையவே கிடையாது.

Television Nisha Noor actress nisha

ஒருகாலத்தில் அது மூடி மறைக்கப்பட்ட அல்லது சொல்ல வெட்கப்பட்ட விஷயம்தான் அட்ஜெஸ்ட்மென்ட்.. இதை இன்று துணிச்சலாக பெண்கள் பேசுகிறார்கள்..அந்த அளவுக்கு விழிப்புணர்வு வந்துவிட்டது. இதற்கு ஒரு உதாரணம்தான் நிஷா நூர்.

அழகான நாகூர் பெண்

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை சேர்ந்தவர் நிஷா நூர்... ரொம்ப அழகாக இருப்பார்.. பள்ளியில் படிக்கும் தோழிகள் உட்பட பலரும், "நீ ரொம்ப அழகாக இருக்கே? சினிமாவில் நடிக்கலாமே" என்று சொல்லி உள்ளனர்..

இதனை நம்பிய நிஷா நூரின் அம்மாவும், சென்னைக்கு சென்று மகளை பெரிய நடிகையாக்கிவிடலாம் என்று முடிவு செய்தார்.. பேரும் புகழும் கிடைக்கும், பணமும் சம்பாதிக்கலாம், பெரிய கார் பங்களா வாங்கலாம் என்று நினைத்து, மகளுடன் சென்னை கிளம்ப தயாரானார்.

ஆனால், மதநம்பிக்கை கொண்ட நிஷா நூரின் அப்பாவுக்கு இதில் உடன்பாடு இல்லை.. மகளை சென்னைக்கு போக வேண்டாம் என்று தடுத்தார்.. அம்மாவும், மகளும் இதற்கு ஒப்புக் கொள்ளாமல் சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்துவிட்டனர். இதனால், நிஷா நூரின் அப்பா, அவர்களை விட்டு பிரிந்தே சென்றுவிட்டார்..

கோடம்பாக்கம் வீடு

சென்னையில் கோடம்பாக்கத்தில் சின்ன வீடு எடுத்து அம்மாவுடன் தங்கி, நிஷாநூர் வாய்ப்பு தேடினார்... சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.. பொண்ணு ஊருக்கு புதுசு, மங்கள நாயகி என சிறிய கேரக்டரில் நடித்தார்.. ஆனாலும் பெரிய அளவில் வளர முடியவில்லை.. அட்ஜெஸ்ட்மென்ட் என்ற விஷயத்துக்கு உடன்பட்டால்தான், வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நிலைமை வந்தது. வேறு வழியில்லாமல் இதற்கு நடிகையும் உடன்பட்டார்..

அப்போதுதான் பல கசப்பான அனுபவங்கள் நடிகைக்கு ஏற்பட்டன.. சில படங்களில் நடித்தாலும், நிஷாவின் உடல்நிலை பாதிக்கப்பட ஆரம்பித்தது.. அந்த நேரத்தில், அம்மா இறந்துபோனாரா? அல்லது காணாமல் போனாரா? தெரியவில்லை, நிஷா நூரின் உடல்நிலை மோசமாக துவங்கியது.. உருவம் மாறத்துவங்குகிறது... ஆனால், உடலில் என்ன பிரச்சனை என்பதை நிஷாவால் கண்டுபிடிக்க முடியவில்லை..

தர்காவில் தஞ்சம்

சென்னையிலிருந்து அவதிப்படுவதைவிட, சொந்த ஊருக்கு வந்துவிடும்படி, உறவினர்கள் சொன்னார்கள்.. அதன்படியே நாகூருக்கு சென்றபோது, நிஷாவை யாருக்குமே அங்கு அடையாளம் தெரியவில்லை.. இதனால் யாரிடமும் தான் தான் நிஷா என்பதை மறைத்துவிட்டு, அதே ஊரில் ஒதுங்கி வாழ ஆரம்பித்தார்..

அப்போது உடல்நிலை மேலும் மோசமடைந்தது.. யாருமற்ற நிலையில் அங்கிருந்த தர்காவில் அவருக்கு அடைக்கலம் தந்தார்கள்.. அப்போதுதான், அவருக்கு பால்வினை நோய் பாதிக்கப்பட்டது தெரியவந்தது..

அதுவரை அங்கு வாழ்ந்து வந்தது நிஷா நூர் என்பதும் ஊர்மக்களுக்கு தெரியவந்தது. அடுத்த சிறிது நாளில் நிஷா நூர் இறந்துவிட்டார்.. தர்காவை சேர்ந்தவர்களே அவரை நல்லடக்கம் செய்தனர்..

சினிமா என்ற கனவு உலகம்

இந்த சினிமா கனவு உலகத்திற்குள் வரும்போது நீங்கள் எப்படி எல்லாம் இருக்கணும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியெல்லாம் இந்த கனவு உலகம் உங்களை தேர்ந்தெடுக்காது.. கோடம்பாக்கத்தில் நடிக்க வருகிறவர்களுக்கு மிகச்சிறந்த உதாரணமாக இருப்பவர் நிஷா நூர்..

இன்று மேற்கு வங்க நடிகை சுமியை, சாலையோரம் 3 இளைஞர்கள் கண்டுபிடித்ததுபோல, நிஷா நூரையும் யாராவது அன்று கண்டுபிடித்து உதவியிருந்தால், அவரை காப்பாற்றியிருக்கலாம்.. அல்லது சினிமா என்ற சிலந்தி வலையிலிருந்து அவரை யாராவது மீட்டிருக்கலாம்.

சினிமா என்ற கனவு உலகத்தில் சில கயவர்களும், கொடுமையான விஷயங்களும் இருக்கத்தான் செய்யும்.. நடிக்க வருபவர்கள்தான் அவைகளிலிருந்து ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+