Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒல்லிக்குச்சி நடிகை.. கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் அடுத்து சிக்கும் 2 ஹீரோக்கள்? சுச்சி லீக்ஸ் நிஜமாகிடுமோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவை தொடர்ந்து அடுத்தடுத்த நபர்கள் கைதாகி வருகிறார்கள். இது தொடர்பான விசாரணை போலீசார் தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், வாட்ஸ்அப் குழு மூலம் போதைப்பொருள் யாருக்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டது என்ற தகவலையும் தனிப்படை போலீஸார் சேகரித்து வருகின்றனர். திரையுலகிலும் மேலும் சில பிரபலங்கள் சிக்க உள்ளதாக கூறப்படுவதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீகாந்த் கைதானபோது, நடிகர் கிருஷ்ணாவும் போதைப் பொருளை பயன்படுத்தியதாகவும், அவர் மேலும் சிலருக்கு போதைப் பொருளை கைமாற்றியதாகவும் ஸ்ரீகாந்த் கூறியிருந்தார். இதற்கு பிறகுதான், கிருஷ்ணா தலைமறைவானார்.

Famous Slim actress including 3 letter hero and actor srikanth ask about Krishna in chennai puzhal jail

கிருஷ்ணா சிக்கியது எப்படி

போலீஸார் தன்னை தேடுவதை தெரிந்துகொண்ட கிருஷ்ணா, நண்பரின் வீட்டில் பதுங்கியிருக்கிறார். சமீப நாட்களாக போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்றாலும், இதனை மருத்துவ பரிசோதனையில் உறுதிசெய்து கொண்டுள்ளார். பிறகு, தன்னுடைய வீடு மற்றும் செல்போனிலிருந்த அனைத்து தடயங்களையும் அழித்துவிட்டு, அதற்கு பிறகுதான், போலீஸார் முன்னிலையில் தைரியமாக ஆஜரானாராம்.

உட னே கிருஷ்ணா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டார்.. அவரது வீட்டிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஆனால், எந்தவிதமான தடயமும் கிடைக்கவில்லை. இதனால், ஸ்ரீகாந்த் தவறான தகவல் கொடுத்து விட்டாரா? என்றுகூட போலீஸார் சந்தேகித்தார்களாம். ஆனால், அனைத்தையும் கிருஷ்ணாவின் செல்போனே காட்டித்தந்துவிட்டது.

ஹோல்சேல் வியாபாரி கெவின்

அவரது செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்த பின்னரே அவர் போதைப்பொருள் பயன்படுத்தி வருவது தெரியவந்தது.. கெவின் என்பவரிடமிருந்துதான், கிருஷ்ணா போதைப்பொருளை வாங்கினார் என்று ஜிபே பணப்பரிமாற்றம், வாட்ஸ்அப் சாட்கள் மூலம் உறுதியாகியிருக்கிறது.

தற்போது கைதாகியிருக்கும் கெவின், பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களை அமைத்து அதன்மூலம் போதைப்பொருளை விநியோகம் செய்பவராம். பலவகையான போதைப்பொருளை வீட்டிலேயே வைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.

இசையமைப்பாளர்

பிரசாந்த்தை போலவே, இவருடனும் பல்வேறு நடிகர், நடிகைகள், திரைத்துறையை சார்ந்த பிரபலங்கள் தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. குறிப்பாக, மிகவும் பிரபலமான 3 எழுத்து நடிகர்கள் 2 பேர், பிரபல நடிகைகள், 4 எழுத்து இசை அமைப்பாளர் என பலர் மீதும் சந்தேகம் கிளம்பியிருக்கிறதாம்.

அதுகுறித்த விபரங்களையெல்லாம் தனிப்படை போலீஸார் தொடர்ந்து சேகரித்து வருகின்றனர். சில ரகசிய குறியீடுகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதால், அவைகள் குறித்தும் விவரங்களை போலீஸார் திரட்டி வருகின்றனர்.

இதுபோக, பிரசாத், பிரதீப்குமார், நடிகர் கிருஷ்ணா, கெவின் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்திருக்கிறார்களாம்.. அவர்களது தகவலை வைத்தே அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என்கிறார்கள்.

3 எழுத்து, 4 எழுத்து நடிகர், நடிகைகள்

யாரந்த 3 எழுத்து 2 நடிகர்கள்? 4 எழுத்து இசையமைப்பாளர் என்று தெரியவில்லை. ஆனால், Jeeva Today என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருந்த மூத்த பத்திரிகையாளர் தாமோதர பிரகாஷ், "தமிழ் சினிமாவில் கொக்கைன் இருக்கிறது, ஸ்ரீகாந்த் பலிகடா, அப்பாவி" என்று சீமான் ஒப்புக் கொண்டிருக்கிறார்.. ஒல்லி நடிகை உட்பட சிலர் மீது சந்தேகம் கிளம்பியிருக்கிறது.. போகிற போக்கை பார்த்தால், சுச்சி லீக்ஸ் எல்லாமே உண்மையாகிவிடுமோ என்ற பயமும் வந்துள்ளது..

ஸ்ரீகாந்த் அப்பாவி என்று சீமான் சொன்னாலும், அவரது கைது என்பது சினிமாவில் நடக்கக்கூடிய போதைப்பொருள் கலாச்சாரத்தை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.. கேரவன் கலாச்சாரம் தற்போது பெருகிவிட்டதால், பல நடிகர்கள், நடிகைகள் என்ன செய்கிறார்கள் என்பதே வெளியில் யாருக்கும் தெரிவதில்லை. தங்கத்தைவிட இந்த போதைப்பொருளின் விலை உயர்ந்துவிட்டது. தடை செய்யப்பட்ட பொருள் என்பதால்தான், இதற்கு விலையும் அதிகம்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணாவை பார்க்க முடியுமா

இதனிடையே, புழலில் அடைக்கப்பட்டுள்ள ஸ்ரீகாந்த்திற்கு தினமும், செய்தித்தாள் வழங்கப்படுகிறதாம்.. அந்த பத்திரிகைகளில் வரும் செய்திகளையெல்லாம் ஸ்ரீகாந்த் உன்னிப்பாக படிக்கிறாராம். நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்ட தகவலை கூட பத்திரிகைகள் மூலம்தான் ஸ்ரீகாந்த் தெரிந்து கொண்டுள்ளார்.

பிறகு சிறை அதிகாரிகளிடம், "கிருஷ்ணா எங்கே அடைக்கப்பட்டுள்ளார்? அவரை பார்க்க முடியுமா? என்று கேட்டிருக்கிறார்.. அப்படியெல்லாம் பார்க்க முடியாது என்று சிறை அதிகாரிகள் பதிலளித்துள்ளார்.. ஸ்ரீகாந்த் அடைக்கப்பட்டுள்ள அதே புழலிலுள்ள முதல் வகுப்பு அறையில்தான் கிருஷ்ணாவும் அடைக்கப்பட்டுள்ளார்.. ஆனால், தனித்தனியாக அடைத்திருக்கிறார்களாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+