Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சண்டை போட்டு மல்லுக்கட்டிய தாமரை, பிரியங்கா..அடுத்த நாளே இவ்வளவு மாற்றமா??

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று வரைக்கும் சண்டை போட்டுக் கொண்டிருந்த பிரியங்காவும் தாமரையும் இன்று கூடிக் கொள்வதைப் பார்த்து இதில் எது உண்மை என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

சில நேரங்களில் அடித்துக் கொள்வதும் அடுத்த நிமிடமே சேர்த்துக் கொள்வதும் தானா விளையாட்டு ஸ்டேட்டர்ஷி என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இதில் யாரு பக்கம் சரி என்று ரசிகர்கள் ஒரு பக்கமாக பட்டிமன்றங்கள் வேற தொடங்கியிருந்தார்கள் எல்லாம் பொய்தானா என்று கடைசியில் ஆகிவிட்டதே.

ரெடியாகி தான் வந்து உள்ளார்களா??

ரெடியாகி தான் வந்து உள்ளார்களா??

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது நான்கு சீசன் களை முடிவடைந்து 5 வது சீசனில் ஒளிபரப்பாகி வருவதால் இதற்கு முன்பு ஒளிபரப்பான சீசன் களை நன்றாக பார்த்து அதற்குத் பழகி பல போட்டியாளர்கள் இந்த சீசனில் கலந்து கொண்டு இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் அவ்வப்போது கொண்டிருந்தது போலத் தான் தற்போது போட்டியாளர்களும் நிரூபித்து இருக்கின்றனர் .ஒருசில போட்டியாளர்கள் நாங்கள் பிக்பாஸ் இதற்கு முன்பு பார்த்ததே இல்லை என்று கூறிக் கொண்டிருந்தனர். ஆனால் அது எல்லாம் உண்மைதானா?? என்று ரசிகர்கள் கேட்கும் வண்ணத்தில் தான் அவர்கள் நடந்து வருகிறார்கள்.

ரசிகர்களின் குற்றசாட்டு

ரசிகர்களின் குற்றசாட்டு

ஒவ்வொரு சீசனிலும் ஒருசில போட்டியாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் வேற லெவல் வைரலாகி அந்த சீசன் முடிவடைந்தாலும் பிரச்சனைகளை ரசிகர்கள் மறக்காமல் இருந்து வருகின்றனர். அந்த மாதிரி தான் தற்போது சீசனிலும் கூட ஒரு சில பிரச்சனைகள் அவ்வப்போது வந்து கொண்டிருந்தது. ஆனால் அதையெல்லாம் அடுத்த நாட்களில் மறந்து போகும் விதத்தில் தற்போதைய போட்டியாளர்கள் நடந்து கொள்கிறார்கள் என்று ரசிகர்கள் குறைகூறி வருகின்றனர்.

அதற்குள் சேர்ந்தாச்சா! !??

அதற்குள் சேர்ந்தாச்சா! !??

யார் சரி, யார் தவறு என்று கணிக்க முடியாத வகையில் தான் ஒவ்வொரு போட்டியாளர்களும் இருந்து வருகின்றனர் என்று ரசிகர்கள் பலர் புலம்பி வருகின்றனர். நேற்றைய எபிசோடுகளில் தாமரையும்,பிரியங்காவும் ஒன்றாக சேர்ந்து விளையாடியதை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். அதுவும் நேற்று முன்தினம் வரைக்கும் இவர்கள் பஞ்சாயத்து பெரிய பஞ்சாயத்தாக இருந்த நிலையில் எப்படி திடீரென்று இப்படி மாறிவிட்டார்கள் என்று கேட்டு வருகின்றனர்.

விரக்தியில் ரசிகர்கள்

விரக்தியில் ரசிகர்கள்

தாமரையும், பிரியங்காவும் சண்டை போட்டது உண்மைதானா??அல்லது இது எல்லாம் ரசிகர்களைக் ஏமாற்றுவதற்காக தானா!!?? இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பலர் சந்தேகங்களை எழுப்பி இருக்கின்றனர். தலைவர் போட்டியில் தாமரை ஜெயிக்க கூடாது என்பதற்காக ப்ரயங்கா பேசிய வார்த்தைகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய பஞ்சாயத்தை தொடங்கிய நிலையில் அடுத்த நாளே சமாதானமாக தாமரையும், பிரியங்காவும் கொஞ்சிக் கொள்வதை பார்த்ததும் சிலர் கடுப்பு அடைந்திருக்கின்றனர். இவர்களுக்கு போய் நாம சப்போர்ட் செய்தமே என்று பலர் விரக்தியில் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+