பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இவர்தான் ரன்னர்..? நேற்றே கிளம்பிய கமல்... இதுதான் காரணமாம்!?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது ரன்னர் இவர்தான் என்று ஷிவினுடைய பெயர் சமூக வலைத்தளத்தில் அதிகமாக அடிப்படுகிறது.
இதுவரைக்கும் இல்லாத வகையில் இன்றைய எபிசோடு ஒரு நாளைக்கு முன்பே சூட்டிங் எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு தனலட்சுமி எதிர்பாராத விதமாக வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

புது மாற்றங்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்லும் விதமாகவே பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில் கூட யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜனனியின் வெளியேற்றம் நடைபெற்றது. ஆரம்பத்திலிருந்து ரசிகர்களால் அதிகமாக வாக்கு செலுத்தப்பட்டு முன்னணி இடத்தில் இருந்து வந்த ஜனனி திடீரென வெளியேறியது யாரும் எதிர்பார்க்காத வகையில் தான் இருந்தது. அது போல இந்த வாரத்திலும் இதுவரைக்கும் இல்லாத வகையில் வியாழக்கிழமை யோடு ஓட்டு முடிவுக்கு வந்தது. இதுவரைக்கும் திங்கள் முதல் வெள்ளி வரை நடந்து வந்த ஓட்டு செலுத்தும் முறை இந்த வாரம் வியாழக்கிழமை யோடு முடிவுக்கு வந்திருக்கிறது.

மாற்றத்திற்கான காரணம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் நடைபெற்று இருந்தாலும் குறிப்பாக ஓட்டு செலுத்தும் முறையில் மாற்றம் நடைபெற்றதற்கு காரணம் வியாழக்கிழமையே சனிக்கிழமைக்கான எபிசோடு படமாக்கப்பட்டு இருக்கிறது. கமல் ராகுல் காந்தியோடு நடைபயணம் மேற்கொள்ள இருப்பதால் அவர் அங்கு செல்வதற்காக சூட்டின் இரு தினங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் எப்போதும் இல்லாத வகையில் இன்றைய ப்ரோமோ கூட யாரும் எதிர்பார்க்காத வகையில் காலையில் வந்து விட்டது. இதற்கு முன்பு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ப்ரோமோ மதியம் தான் வரும் ஆனால் இந்த வாரம் அதிலும் மாற்றம் நடைபெற்று இருக்கிறது.

இந்த வார வெளியேற்றம்
இந்த நிலையில் இதுவரைக்கும் இல்லாத வகையில் ஒரு சில வாரங்களாகவே தொடர்ந்து பெண் போட்டியாளர்களே வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். இந்த வாரமும் தனலட்சுமி வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தனலட்சுமி பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் ஒரு ஸ்ட்ராங் பிளேயர் ஆக இருந்தாலும் இவர் வெளியேற்றப்பட்டாலும் இவருக்கு அதிகமான திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பது பலருடைய கணிப்பாக இருந்து வருகிறது. இந்த ஒரு மாற்றத்திற்காக தான் தனலட்சுமி பல வருடங்களாகவே போராடி கொண்டிருந்தார். இனி அவருடைய வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என பலர் கூறுகிறார்கள்.

ரன்னர் இவர்தானாம்
இந்த நிலையில் இந்த சீசனில் இரண்டாவது ரன்னராக ஷிவின் தான் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது. அதிகமாக சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் அவரை கமல் ஒவ்வொரு வாரமும் திட்டி தீர்த்தாலும் அவருக்கு ரசிகர்களின் மத்தியில் அதிகமாக வரவேற்பு இருக்கிறது. அதனால் அவர் இரண்டாவது இடத்திற்கு வர இருக்கிறாரா என்பது பல்வேறு தரப்பினரின் கேள்வியாக இருக்கிறது. இவர் அசீம் மற்றும் ஷிவின் இவர்களில் ஒருவர்தான் இரண்டாவது இடத்தில் வருவதாகவும் விக்ரமன் முதல் இடத்திலும் நிதானமாகவும் சரியாகவும் விளையாடு வருவதால் அவர்தான் வெற்றி பெறுவார் என்று பலர் உறுதியாக கருத்து கூறி வருகின்றனர். ஆனாலும் எதிர்பார்த்ததை எதிர்பார்ப்புகள் என்றும் சொல்லும் பிக் பாஸில் கடைசி நேரத்தில் என்ன வேணாலும் மாற்றம் நடைபெற வாய்ப்பு இருக்கிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications