சிரிக்கும் சிலை..கையை என்ன அங்க வச்சு இருக்கீங்க.. பவித்ராவை பங்கமாக கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: செஞ்சி வச்ச சிலை போல புடவையில் அசத்தும் பவித்ராவை பார்த்ததும் சமூகவலைதளம் பரிதவித்துப் போய் விட்டதாம்.
இந்தப் புன்னகை முன்னாடி எந்த பொன் நகையும் பெரிதல்ல என்று பார்ப்பவர்கள் எல்லாம் கூற வைத்துவிட்டது பவித்ராவின் அழகு புன்னகை.
தன்னை கௌரவிப்பதற்காக கிடைத்த விருதுக்கு தன்னடக்கத்தோடு நன்றி கூறி இவர் வெளியிட்டிருக்கும் போட்டோஸ் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

பெயரை சொன்னாலே போதும்
பவித்ரா லட்சுமி என்று சொன்னதுமே சின்னத்திரை ரசிகர்கள் மட்டுமல்லாமல் சமூகவலைத்தள ரசிகர்களுக்கும் மனமும் துள்ளிக் குதிக்கிறது. அவருடைய க்யூட்டான அழகுக்கு முன்பு ரசிகர்களின் கண்களுக்கு எதுவுமே பெரியதாக தெரியவில்லையாம். உயரத்தில் சிறியவராக இருந்தாலும் என்னுடைய திறமை பெரியது என்பதை நிருபித்திருக்கிறார். பொதுவாக பெண்கள் என்றாலே குட்டையாக இருந்தால் பேரழகுதான் என்று பலர் கூறி வருகிறார். காரணம் குட்டையாக இருப்பவர்களுக்கு சீக்கிரத்தில் வயது தெரியாது,அவர்கள் இளமையாக தான் எப்போதும் தெரிவார்களாம். அது பவித்ராவின் விஷயத்தில் உண்மை என்பது அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர்.

தமிழ் பேசும் அழகு பதுமை
மாடலிங்கில் காலடி எடுத்து வைத்து பல அழகுப் போட்டிகளிலும் பங்கேற்று உள்ளார். 2016ஆம் ஆண்டு மெட்ராஸ் ராணி எனும் பட்டத்தை பெற்றிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழ்நாட்டில் இருக்கும் கோயம்புத்தூரில் பிறந்து கொங்கு தமிழ் பேசும் அழகு பதுமை தான். தமிழ் பெண்களும் நடிப்பில் சளைத்தவர்கள் அல்ல என்று பவித்ரா லட்சுமி நிரூபித்துக் கொண்டிருக்கிறார். இவர் டைம் என்ன பாஸ் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்திருந்தாலும் பலர் ஷார்ட் பிலிம் களில் நடித்து இளைஞர்களையும் வசப்படுத்தி விட்டார். இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்துகொண்டிருக்கும் பவித்ரா திரைப்படங்களில் நடித்து பிரபலமானதை விடவும் விஜய் டிவியில் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டார்.

என்ன ஒரு க்யூட் சிரிப்பு
இவருடைய சின்ன வயதிலேயே அவருடைய தந்தை இறந்துவிட்டார், ஆனாலும் தாயாரின் அரவணைப்போடு வளர்ந்த இவர் தனது நடிப்பு திறமையை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என்று மாடலிங் மூலமாக திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் தான். இந்த நிகழ்ச்சியின் மூலமாக பெரும் பிரபலமாகிவிட்டார். இவர் ஷார்ட்பிலிம் மூலமாக பல ஹிட்டான பாடல்களில் நடித்து பிரபலமான ஆகியிருந்ததால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருக்கு பெரிய ஆதரவு கிடைத்தது. அதுவும் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருடன் கலந்து கொண்ட அஸ்வினுடன் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே
ஷார்ட் பிலிம் களில் நடித்திருக்கிறார்.

இது செம மேட்டர்
தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்து விட்டாலும் அடுத்த சீசன் எப்போது தொடங்குவார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். அடுத்த சீசனில் இவரே கலந்து கொள்ள வேண்டும் என்று இவருடைய ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். ஆனால் இவர் தற்போது பல புது படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் அடுத்த சீசனில் கலந்து கொள்வாரா என்பது சந்தேகம்தான். இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். அதுதான் தற்போது அவருடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. எனக்கு "ஹேர்த்ராப் ஆஃப் தி இயர்" என்ற பட்டம் வழங்கியிருக்கிறார்கள். இதற்கு நான் சரியா என்று தெரியவில்லை. ஆனால் என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி என்று கூறியிருக்கிறார். இந்த போஸ்ட் பார்த்ததும் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து மழை பொழிகிறார்கள்.
-
விஜய் டிவியில் திடீரென முடிவுக்கு வரும் சீரியல்.. அதுவும் இதுதான் காரணமா? பீல் பண்ணும் ரசிகர்கள் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications