முதல் முதலாக அசத்திய S 400.. அதுவிடுங்க, ஆபரேஷன் சிந்தூர டைட்டிலுக்கு பாலிவுட்டில் செம கிராக்கியாமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் லாகூர், கராச்சி, சியால்கோட் உள்ளிட்ட நகரங்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன்கள் மூலம் விடிய விடிய தாக்குதல் நடத்தியது. ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது. இப்படியொரு பரபரப்புக்கு நடுவில் பாலிவுட்டில், சத்தமேயில்லாமல் வேலை நடந்து கொண்டிருக்கிறது.

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதற்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற ஆபரேஷனை இந்தியா நடத்தி வருகிறது.. பாகிஸ்தான் எல்லைக்குள்ளேயே நுழைந்து 9 பயங்கரவாதி முகாம்களை அழித்தது. உடனே பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தவும், 16 பேர் வரை உயிரிழந்தனர்.

Television Operation Sindoor S 400 sudarshan chakra 400

டிரோன் - தாக்குதல்

நேற்றிரவு இந்திய எல்லையோர நகரங்களில் பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது.. இந்த அனைத்து தாக்குதலையும், இந்தியா ராணுவம் முறியடித்தது.. இந்தியா முதல் முறையாக S 400 வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தியுள்ளது.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா S 400 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்கியது. இதன் ரேடார் மூலம், 600 கிமீ எல்லைக்குள் 300 இலக்குகளை கண்காணிக்க முடியுமாம்.. 400 சுதர்சன் சக்ரா என்பது அதிநவீன ஏவுகணையாகும்.. ஆசிய கண்டத்தில் இந்தியாவிடம் மட்டுமே இந்த S 400 வான் பாதுகாப்பு அமைப்பு உள்ளது..

S 400 சுதர்சன் சக்ரா ஸ்பெஷாலிட்டி

டிரோன் முதல் ஏவுகணைகளை வரை அனைத்தையும் இடைமறித்து தாக்கி அழிக்கக்கூடியது.. 40 கிமீ முதல் 400 கிமீ வரை பாய்ந்து சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது. மேலும் 100 அடி முதல் 40,000 அடி உயரத்தில் பறந்து சென்று எதிரிகளின் தாக்குதலை முறியடிக்கும் திறன் கொண்டது.

இந்த s 400 G பற்றியே எங்கு பார்த்தாலும் பேச்சாக இருக்க, சைலண்ட்டாக ஒரு போட்டி சினிமா வட்டாரத்துக்குள் நடந்து கொண்டிருக்கிறது.. அதாவது, முக்கிய நிகழ்வுகள் அல்லது அசம்பாவிதங்கள் எங்காவது நடந்தால் உடனே அதை மையப்படுத்தி சினிமா எடுப்பது வழக்கமாகும்.

ஆபரேஷன் சிந்தூர்

அந்தவகையில், மும்பையை சேர்ந்த 15ற்கும் மேற்பட்ட பாலிவுட் தயாரிப்பாளர்கள் மற்றும் பாலிவுட் திரைப்பட நிறுவனங்கள் ஆபரேஷன் சிந்தூர் என்ற டைட்டில் மீது குறி வைத்திருக்கிறார்களாம். ஆபரேஷன் சிந்தூர் என்ற இந்திய ராணுவம் பெயருக்குதான் இப்போது படு கிராக்கியாக உள்ளது..

இந்த பெயரை பதிவு செய்ய பலரும் விண்ணப்பித்திருக்கிறார்களாம்.. மும்பையில் உள்ள இந்தியன் மோஷன் பிக்சர்ஸ் பிரடியூசர்ஸ் அசோசியேஷன் சங்கத்தில் இந்த பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மஹாவீர் ஜெயின் என்ற நிறுவனம்தான் முதலில் இப்பெயரை ரிஜிஸ்திரர் செய்துள்ளது... பிறகு தயாரிப்பாளர் அசோக் பண்டிட், மாதுர் பண்டார்கர் மற்றும் டி சீரிஸ், ஜீ ஸ்டுடியோஸ் போன்ற நிறுவனங்களும் அடுத்தடுத்து இதே டைட்டிலை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

டைட்டிலுக்கு பதிவு

இதுகுறித்து தயாரிப்பாளர் அசோக் பண்டிட் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "பகல்ஹாம் தாக்குதலை மையப்படுத்தி எதிர்காலத்தில் சினிமா எடுக்கப்படுமோ? இல்லையோ தெரியாது,.. இப்படி வரலாற்று முக்கியத்துவம் நிகழ்வுகள் நடைபெற்றால் அந்த பெயரை பதிவு செய்வது தயாரிப்பாளர்களின் கடமையாகும்..

அதற்காக பதிவு செய்த அனைவருமே படத்தை எடுப்பார்கள் என்பது கட்டாயமில்லை, அப்படி பெயரை பதிவு செய்தால், படம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும். அதனால்தான் நானும் இந்த டைட்டிலுக்கு பதிவு செய்துள்ளேன்" என்றார்.

வான்வெளி தாக்குதல்கள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க ஆபரேஷன் சிந்தூர் டைட்டிலுக்கு இவ்வளவு டிமாண்டா என்று பலரும் வியப்பை தெரிவித்து வருகின்றனர்.. இனி "S 400 சுதர்சன் சக்ரா" என்ற அடுத்த படத்தை யாராவது துவங்கினாலும் ஆச்சயரிப்படுதற்கில்லை என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+