For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊர்ல எனக்கு கோமாளினு பேரு.. கண்டபடி வையறாங்க.. பிக்பாஸுக்கு கூட நான் போகலை தெரியுமா?.. ஜி.பி. முத்து

Google Oneindia Tamil News

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் அழைத்தும் நான் போகவில்லை, ஏன் தெரியுமா என டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்து தெரிவித்துள்ளார்.

டிக்டாக் பிரபலமடைந்த போது தனது நெல்லை தமிழால் "ஏலேய் செத்த பயலே, நார பயலே, கிழிச்சிபுடுவேன்" என திட்டி தீர்த்தே பிரபலமானவர் ஜி.பி.முத்து. மரத்தொழில் நடத்தி வந்த இவர் பார்ட்டைமாக டான்ஸ் ஆடியும், பாட்டு பாடியும் வீடியோ போட்டார்.

நாளடைவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். இதையடுத்து முழு நேரமும் டிக்டாக்கில் தனது நேரத்தை செலவிட்டார் ஜி.பி. முத்து. அவரை பெரும்பாலானோர் கிண்டல் செய்தே கமென்ட் போட்டனர். அதற்கு இவர் பதிலடி கொடுக்கும் போது மேற்கண்ட வார்த்தைகளை பயன்படுத்துவார். அது மேலும் இவரை பிரபலமாக்கியது.

அக்மார்க் சுயநலவாதி.. பதவி ஆசை இருக்கலாம்; பதவி வெறி இருக்கக்கூடாது.. இபிஎஸ் பற்றி டிடிவி தினகரன்! அக்மார்க் சுயநலவாதி.. பதவி ஆசை இருக்கலாம்; பதவி வெறி இருக்கக்கூடாது.. இபிஎஸ் பற்றி டிடிவி தினகரன்!

டிக்டாக்

டிக்டாக்

ஆவணப்படம், குறும்படங்களில் நடித்து வருகிறார் ஜிபி முத்து. டிக்டாக்கிற்கு இந்தியாவில் தடை விதித்தவுடன் அவர் யூடியூப் சேனலை தொடங்கி நடத்தி வருகிறார். சில நேரங்களில் இவரது மனைவியுடனும் நிறைய வீடியோக்களை செய்துள்ளார். இந்த நிலையில் ஜி.பி.முத்துவும் அவரது மனைவியும் அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்கள்.

வயசு 40தான்

வயசு 40தான்

அந்த பேட்டியில் ஜி.பி.முத்து கூறுகையில் என் மனைவியை உருவகேலி செய்தும் அழகாக இருக்கிறார் என்றும் கூறி கமென்ட் போடுகிறார்கள். என் மகளை எனக்கு கொள்ளுபேத்தி என்கிறார்கள். எனக்கு வயது 40தான் ஆகிறது. என் மனைவி, "தலைவரே நம்ம பொண்டாட்டி" ... அப்படி இப்படினு எல்லாம் கமென்ட் போட்டால் எனக்கு கோபம் வருமா வராதா?

ஆபாச கமென்ட்

ஆபாச கமென்ட்

ஆபாச சைகைகள், ஆபாச வீடியோக்களை எல்லாம் கமென்ட்டில் போடுவார்கள். இதனால்தான் நான் அவர்களை கண்டபடி திட்டுகிறேன். ஆரம்பத்தில் என் சொந்தக்காரர்கள் யாருமே என்னுடன் பேசவில்லை, எதற்கு டிக்டாக்கில் வீடியோ போட்டு தேவையற்ற கமென்ட்டுகளை வாங்கிக் கொள்ள வேண்டும் என என் மீது கோபப்பட்டனர்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

ஆனால் நான் யார் பேச்சையும் கேட்கவில்லை. என்னை கடுமையாக விமர்சித்து, இல்லாததையெல்லாம் கிளப்பி விடும்போது டிக்டாக்கே வேண்டாம் என நினைக்க தோன்றும், அதனால் ஒரு ஒருவாரத்திற்கு அமைதியாக இருப்பேன். பின்னர் என்னால் வீடியோ போடாமல் இருக்க முடியாது. என்னை ஊர்ல கோமாளி, லூசு பயலுனு திட்டுவாங்க.

செல்போன் இல்லாம இருக்க முடியாது

செல்போன் இல்லாம இருக்க முடியாது

அதையெல்லாம் பார்த்தா இன்னைக்கு என்னை சேனல்காரங்க பேட்டி எடுக்க வருவாங்களா, ஏன் நீங்க வந்திருப்பீங்களா? செல்போன் இல்லாமல் என்னால இருக்க முடியாது. அதனால்தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கூட நான் வரலைனு சொல்லிட்டேன். என்னை திட்டுவது மட்டுமல்லாமல் என் குழந்தைகளையும் திட்டுவார்கள். எனக்கு கோபம் வந்து நான் திட்டினால் அதை காமெடியாக மாற்றி விடுகிறார்கள் என்றார் ஜிபி முத்து. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஜி.பி முத்து கலந்து கொள்வார் என அவரது பெயர் அடிப்பட்டது. ஆனால் நிகழ்ச்சியின் தொடக்கத்தின் போது அவர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி பி முத்து

ஜி பி முத்து

அது போல் ஜிபி முத்துவின் மனைவி கூறுகையில், முதலில் நகைக் கடையில் இருந்தார், பிறகு மரக்கடை வைத்தார், அதன் பிறகு அதையும் விட்டுவிட்டு டிக்டாக் வீடியோ எடுத்து வந்தார். இதற்காக நான் அவரோடு சண்டை போடுவேன். என் அண்ணன், தம்பிகளும் எனக்காக வந்து பேசுவார்கள், அப்போதும் இவர் கேட்கவே மாட்டார். இன்று இவர் பிரபலமானதை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

English summary
Tiktok fame G.P.Muthu reveals why he didnt contested in Biggboss programme?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X