Gandhi Kannadi Box Office: அதிகரித்த காந்தி கண்ணாடி மூன்றாவது நாள் வசூல்.. கோடிகளை தாண்டி மாஸ் காட்டிய பாலா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நகைச்சுவைக்கு மட்டும் அல்ல... எமோஷனுக்கும் நான் தான் என நிரூபித்து, ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளார் கே.பி.ஒய். பாலா. அவர் முதல்முறையாக கதாநாயகனாக நடித்துள்ள படம் 'காந்தி கண்ணாடி'. இயக்குநர் ஷெரிஃப் இயக்கியுள்ள இந்தப் படம், கடந்த வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 5ஆம் தேதி, வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

KPY Bala vijay tv

காமெடியனாக இருந்து ஹீரோவான பாலா

'காந்தி கண்ணாடி' படத்தில் பாலாவுக்கு ஜோடியாக நடிகை நமிதா கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார். படத்தின் இயக்குநர் ஷெரிஃப், இந்த கதாபாத்திரத்திற்காக சுமார் 50 கதாநாயகிகளிடம் கேட்டதாகவும், அவர்கள் அனைவரும் மறுத்துவிட்டதாகவும் கூறினார். இறுதியாக 51வது கதாநாயகிதான் நமிதா கிருஷ்ணமூர்த்தி என்றும் தெரிவித்தார். படத்தில் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா என மூத்த நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜெய் கரண் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர்.

அண்ணன் சிவகார்த்திகேயனுக்காக

'காந்தி கண்ணாடி' படம், சிவகார்த்திகேயனின் 'மதராஸி' படத்துடன் மோதியது. இதனால் பாலாவின் படத்திற்கு கணிசமான அளவிலான திரையரங்குகளே கிடைத்தன. இதுகுறித்து கேட்டபோது, பாலா சொன்ன பதில் ரசிகர்கள் மத்தியில் வேகமாகப் பரவியது.

"எப்போதும் அண்ணன் அண்ணன்தான். முதலில் நான் முடியவே முடியாது என்று சொன்னேன். ஆனால், அண்ணன் படத்திற்கு வருபவர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் என் படத்தைப் பார்க்க வருவார்கள் அல்லவா? அந்த நம்பிக்கையில்தான் படத்தை ரிலீஸ் செய்ய ஒப்புக்கொண்டேன். சிவகார்த்திகேயன் அண்ணன் படம் எப்போதும் ஹிட் அடித்துவிடும்" என்று கூறினார். பாலாவின் இந்த பதில், அவர் மீதுள்ள மரியாதையை இன்னும் அதிகரித்துள்ளது.

கலங்கிய கண்களோடு விமர்சனம்

படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, கலக்கப்போவது யாரு பாலா கதாநாயகனாக நடித்திருப்பதால், படம் செம காமெடியாக இருக்கும் என்று நினைத்து சென்ற ரசிகர்களை, சிரிக்கவும் வைத்து, படத்தின் கடைசி 30 நிமிடங்கள் எமோஷனலாக அழவும் வைத்துள்ளது என்று ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்து வருகிறார்கள். பாலாவின் நடிப்பு, பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

முதல் மூன்று நாட்களில் வசூல் சாதனை

சாக்நிக் வலைதள அறிக்கையின்படி, படத்தின் வசூல் விவரம் இதோ: முதல் நாள்: ₹35 லட்சங்கள், இரண்டாவது நாள்: ₹45 லட்சங்கள், மூன்றாவது நாள்: ₹65 லட்சங்கள். இதன் அடிப்படையில், படம் முதல் மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டும் மொத்தம் ₹1.45 கோடி வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் ₹1.63 கோடிகளை வசூலித்துள்ளது. உலக அளவில் படம் ₹3 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது. இது படக்குழுவுக்குப் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வரும் நாட்களிலும் படம் கூடுதல் வசூல் குவிக்கும் என்று படக்குழு நம்பிக்கொண்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+