உயிரை காப்பாற்றியது தமிழிசை தான்.. கூடவே இருந்து செய்த உதவி.. நீயா நானா கோபிநாத் உருக்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கோபிநாத்துக்கு சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது அதில் கோபிநாத்துக்காக கலந்து கொள்ளப்பட்ட ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் குறித்து கோபிநாத் சில அதிர்ச்சிகரமான உண்மைகளை உடைத்திருக்கிறார்.
அதாவது ஒரு குழந்தை உயிருக்காக போராடிக் கொண்டிருந்தபோது தமிழிசை சௌந்தர்ராஜனிடம் உதவி கேட்ட போது அவர் டெல்லியில் இருந்து உடனே கிளம்பி வந்து அந்த குழந்தையின் உயிரை காப்பாற்றி, அதற்கு உரிய மருத்துவம் பார்த்துவிட்டு சென்றிருந்தார் என்று உருக்கமாக பேசியிருக்கிறார். அது பற்றி மேலும் விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் கோபிநாத்துக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. விஜய் டிவியில் முக்கிய தொகுப்பாளராக இருக்கும் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி பலருடைய ஃபேவரிட். 2கே கிட்ஸ்கள் மட்டுமல்லாமல் 80கிட்ஸ்கள் வரைக்கும் நீயா நானா நிகழ்ச்சிக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். காரணம் இந்த நிகழ்ச்சியில் நடுநிலையான கோபிநாத்தின் தீர்ப்பு பலரையும் கவர்ந்திருக்கும்.
அதோடு பல பிரபலங்களையும் பேட்டி எடுத்து அவர்களின் தனித்துவமான திறமைகளையும் கோபிநாத் வெளி உலகத்திற்கு தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறார். இப்படியாக கோபிநாத்துக்கு பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் கோபிநாத் சின்னத்திரை மற்றும் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமான நபராக இருக்கும் நிலையில் அவருக்கு சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
அதில் பலர் கலந்து கொண்டு கோபிநாத் குறித்து பல்வேறு தகவல்களை பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கோபிநாத்துக்காக ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்துகொண்டு கோபிநாத் என்னுடைய தம்பி அவரிடம் பேசும்போது நான் பலமுறை வியந்து பார்த்திருக்கிறேன். அந்த அளவிற்கு கேள்வி ஞானமும் அதோடு பல விஷயமும் தெரிந்து வைத்திருக்கிறார்.
நடிகர்களுக்கு இணையாக தொகுப்பாளர்களும் வளர்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கோபிநாத்தின் ரசிகையாகவும் நான் இருக்கிறேன் என்று பெருமையாக பேசிக் கொண்டிருந்தார். அதைத் தொடர்ந்து கோபிநாத் தமிழிசை சௌந்தர்ராஜன் குறித்து சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

அதாவது ஒருமுறை கோபிநாத்துக்கு தெரிந்த ஒரு குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி இருக்கிறது. அந்த நேரத்தில் கோபிநாத் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை என்று பேசிக் கொண்டிருந்த கோபிநாத் பெருமூச்சு விட்டபடி தொடர்ந்து பேசுகிறார் அதில், நான் கொஞ்சம் யோசித்தேன் அப்போது டக்கென்று எனக்கு நினைவில் வந்தது தமிழிசை அக்கா தான். உடனே அவங்களுக்கு போன் போட்டேன்.
அவங்க அந்த நேரம் டெல்லியில் மீட்டிங்கில் இருந்தார். அவரிடம் குழந்தை உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறது என்று நான் சொன்னேன். உடனே நான் சொன்ன வார்த்தைகளை கேட்டு பிளைட்டை பிடித்து இங்கே வந்துவிட்டார். அந்த குழந்தைக்கு உரிய மருத்துவத்தை அதற்குரிய டாக்டர்களோடு சேர்ந்து செய்து அந்த குழந்தையை காப்பாற்றி விட்டார்.
அதுவும் அந்த குழந்தையை யாராலும் காப்பாற்ற முடியாது என்று நான் பார்த்த பல டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள் ஆனால் அந்த நேரத்தில் தமிழிசை அக்கா தான் அந்த குழந்தை கூடவே இருந்து ஆப்ரேஷன் செய்து குழந்தையை காப்பாற்றி இருந்தார். பிறகு குழந்தை நல்லபடியாக மாறியதும் உடனே டக்கென்று ஃபிளைட்டை பிடித்து மீண்டும் டெல்லிக்கு போயிருந்தார்.
அவருடைய பிசியான லைஃபில் ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவர் எடுத்த ரிஸ்க் அன்றைக்கு நான் அவர் கூடவே இருந்து பார்த்த எனக்கு தான் தெரியும். அதுபோல தமிழிசை அக்கா சிறந்த பெண்ணாகவும் ஆளுமை மிக்க ஒரு பெண்ணாகவும் இருக்கும் தமிழிசை அக்காவின் தம்பி நான் என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறேன் என்று அந்த பேட்டியில் கோபிநாத் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications