சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் எரியூட்டும் முன்பு மனைவிக்கு தாலி கட்டிய கவுண்டமணி! கதறிய மகள்கள்!
சென்னை: நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தியின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது. அப்போது தனது மனைவிக்கு கடைசியாக கவுண்டமணி தாலி கட்டினார். மகள்கள் செல்வியும் சுமித்ராவும் கதறி அழுதனர்.
நடிகர் கவுண்டமணி, 1970 ஆம் ஆண்டு சிவாஜியின் ராமன் எத்தனை ராமனடி என்ற திரைப்படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் கவுண்டமணி. இவர் தேனும் பாலும் எனும் திரைப்படத்தில் சுப்பிரமணி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையடுத்து 1977 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே திரைப்படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த இவர், கரகாட்டக்காரன் படத்தில் வாழைப்பழ காமெடியில் கலக்கியதை யாராலும் மறக்கவே முடியாது.
காதல் திருமணம்
திரைத்துறையில் புகழ் பெற்றிருந்த போதே சாந்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு செல்வி, சுமித்ரா ஆகிய இரு மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாகவே சாந்தி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாராம்.
இந்த நிலையில் மருத்துவ சிகிச்சை பலனின்றி நேற்று காலை 10.30 மணிக்கு சாந்தி இறந்துவிட்டார். அவருக்கு வயது 67. சாந்தியின் உடல் தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
நண்பர்கள் ஆறுதல்
கவுண்டமணியின் நண்பர்களான சத்யராஜ், செந்தில், நிழல்கள் ரவி, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் அவருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். அது போல் தவெக தலைவரும் நடிகர் விஜய்யும் நேரில் சென்று சாந்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு கவுண்டமணியை இறுக அணைத்து ஆறுதல் தெரிவித்தார்.

இந்த நிலையில் கவுண்டமணியின் மனைவி சாந்தியின் உடலுக்கு இன்று காலை 11 மணிக்கு இறுதி சடங்கு நடந்தது. அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இறுக்கமான கவுண்டமணி
அப்போது கவுண்டமணியின் முகம் மிகவும் இறுக்கமாக காணப்பட்டது. அவரை சீமான் உள்ளிட்டோர் ஆசுவாசப்படுத்தினர். இந்த நிலையில் கவுண்டமணியின் குடும்ப வழக்கப்படி சாந்தியின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடந்தன.
தாலி கட்டிய கவுண்டமணி
அப்போது மஞ்சள் கயிற்றில் தனது மனைவியின் உடலுக்கு கவுண்டமணி தாலி கட்டினார். அந்த நேரம் மனதிற்குள்ளே விம்மி வெடித்தார். அது முகத்தில் அப்படியே பிரதிபலித்தது. ஏற்கெனவே தனது மகள்கள் கதறி கொண்டிருக்கையில், தானும் அழுதால் தனது மகள்களுக்கு யார் ஆறுதல் சொல்வது என நினைத்தாரோ என்னவோ அத்தனை சோகத்தையும் முகத்திலேயே காட்டினார்.
கதறிய மகள்கள்
மனைவிக்கு தாலி கட்டிய போது அவருடைய மகள்கள் இருவரும் கதறி அழுதனர். இது காண்போரை கலங்கச் செய்தது. மனைவியின் இழப்பிலிருந்து அவர் விரைவில் மீண்டு வர வேண்டும். அவரது திரைத்துறை நண்பர்கள் இதற்கு உதவ வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணமாக இருக்கிறது.
அதிர்ஷ்டமான சாந்தி
கவுண்டமணியும் சாந்தியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனராம். கவுண்டமணி வாழ்வில் சாந்தி வந்ததும்தான் அவருக்கு அதிர்ஷ்டம் வந்ததாக கவுண்டமணி அடிக்கடி சொல்வாராம். அது போல் ஷூட்டிங்கிற்கு எப்போது செல்ல வேண்டுமானாலும் தனது மனைவி கையால் கைச்செலவுக்கு காசு வாங்கிக் கொண்டு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தாராம்.
மகள்களுக்கு மனிதம்
கவுண்டமணிக்கு இரு மகள்கள் செல்வி, சுமித்ரா. இவர்கள் இருவருமே நன்கு படித்துள்ளனராம். சென்னையில் உள்ள புற்றுநோய் காப்பகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மாதந்தோறும் தனது கணவருடன் வந்து சுமித்ரா சேவை செய்கிறாராம். தனது மகள்களுக்கு மனிதத்தையும் ஊட்டி வளர்த்திருக்கிறார்கள் சாந்தியும் மணியும்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications