ராம்குமாருக்கு சிக்கல்.. அதுவிடுங்க, அன்னை இல்லம் வீட்டிலிருந்து மகிழ்ச்சி.. யாருப்பா ஹீரோ: பிரபலம்
சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த உத்தரவை தனி நீதிபதி ரத்து செய்ததற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.. அத்துடன், மேல் முறையீட்டு வழக்கில் நடிகர் பிரபு, ராம்குமார் உள்ளிட்டோர் பதில் அளிக்கவும் ஹைகோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், சிவாஜி குடும்பம் குறித்து புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், "சென்னை போக்ரோடில் அன்னை இல்லம் என்று சிவாஜியும், போரூரில் தாய் இல்லம் என்று எம்ஜிஆரும் கட்டினார்கள்.. எம்ஜிஆர் இல்லத்திலும் பெரிய குழப்பம் வந்தது.. கொலை, வழக்கு என்று நிலவியது.. சிவாஜி பங்களாவிலும் வழக்கு விவகாரம் ஓடுகிறது

தடையை நீக்க மறுப்பு
ஜெகஜால கில்லாடி படத்துக்காக , தனபாக்கியம் என்டர்பிரைசஸிடம் 3 கோடி ரூபாய் கடன் வாங்கி, ராம்குமார் தரப்பு வட்டியும் தரவில்லை. இதனால் கோர்ட்டுக்கு போனார்கள் என்டர்பிரைசஸ்.. அப்போதுதான், பிரபு பெயரில் அன்னை இல்லம் வீட்டினை சிவாஜி கணேசன் எழுதி வைத்திருப்பது தெரியவந்தது. அன்னை இல்லம் வீட்டின் ஜப்தி உத்தரவு தடையை நீக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தனி நீதிபதி பிறப்பித்த அன்னை இல்லம் ஜப்தி அந்த ரத்து உத்தரவை தடை செய்ய முடியாது என்றும், மேல்முறையீட்டு மனுவுக்கு பிரபு மற்றும் அவரது சகோதரர் ராம் குமார் ஜூன் 3ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் 2 நாட்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தனர்.
சிவாஜி கணேசன் சிலை
இதனிடையே, திருச்சியில் நீண்ட நாட்களாக திறக்கப்படாத சிலையை மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளது, சிவாஜி கணேசனுக்கு கூடுதல் பெருமை தந்துள்ளது.. இப்போது புதிய தகவல் என்னவென்றால், சிவாஜி குடும்பத்திலிருந்து இன்னொருவர் சினிமாவில் நடிக்க வருகிறார்..
ஏற்கனவே பிரபு, ராம்குமார், விக்ரம் பிரபு, துஷ்யந்த், இப்படி பலரும் சினிமாவுக்குள் வந்துவிட்டனர். தற்போது ராம்குமாரின் இளைய மகன் தர்ஷன் சினிமா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.. இவரை அறிமுகப்படுத்துபவர் புகழ்பெற்ற சத்ய ஜோதி நிறுவனம்.. அருளாளர் ஆர்.எம்.வீரப்பனின் மருமகனின் நிறுவனம் இதுவாகும்..
புதிய ஹீரோ
தனக்காக சத்யஜோதி பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார் சத்யஜோதி தியாகராஜன். ஏற்கனவே ஆர்எம் வீரப்பனுக்கு சத்யா மூவிஸ் என்ற பட நிறுவனம் உள்ளது.. தற்போது ராம்குமாரின் மகனை அறிமுகப்படுத்துகிறது சத்யஜோதி நிறுவனம். இந்த சத்யஜோதி நிறுவனம்தான், மணிரத்னத்தை இயக்குனராக அறிமுகப்படுத்தியது.
தர்ஷன் நடக்கும் இந்த படத்தில் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குபவர் பாலா.. இவர் புதிய இயக்குனர் பாலா ஆவார்.. தர்ஷனுக்கு ஷ்ரத்தா ஜோடியாக இருக்கிறார்.. இந்த படத்தில் கங்கை அமரன், ரோஜா உள்ளிட்டோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க போகிறார்கள்.. விவசாயிகள் பற்றின கதையை கொண்டது இந்த படம்.
பிரம்மாண்ட அறிமுகம்
விஜய் சேதுபதி தலைவன், தலைவி, மற்றும் விஷ்ணு விஷாலின் இரண்டு மனம் வேண்டும் என்ற 2 படங்களையும் தறபோது தயாரித்து கொண்டிருப்பதை சத்யஜோதி பிலிம்ஸ் இதுவரை வெளியில் சொல்லவில்லை. ஆனால், ராம்குமார் மகனை பிரமாதமாக அறிமுகப்படுத்த, சத்யஜோதி பிலிம்ஸ் தயாராகி கொண்டிருக்கிறது.. அன்னை இல்லம் பங்களா விவகாரத்தினால் பெயரை இழந்த ராம்குமாருக்கு அவரது 2வது மகன் பெயரை காப்பாற்றி தருவார் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications