நடிகர் அமித் பார்கவ் மகளுக்கு ஆட்டிஸம் குறைபாடா? உண்மையில் என்ன பிரச்சினை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: என் மகளுக்கு ஆட்டிசம் குறைபாடு இல்லை. அவளுக்கு வேறு பிரச்சினைதான் இருக்கிறது என சீரியல் நடிகர் அமித் பார்கவ் தெரிவித்துள்ளார். இவரது மனைவி சிவரஞ்சனியும் விஜய் டிவியில் சில ஷோக்களை ஹோஸ்ட் செய்திருந்தார். இருவரும் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டனர்.

கர்நாடகாவை சேர்ந்தவர் அமித் பார்கவ். இவர் 2010ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த சீதே தொடரின் மூலம்தான் இவர் சின்னத்திரையில் அறிமுகமாகியிருந்தார்.

television vijay tv

அதன் பிறகு இவர் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்திருந்தார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.

அத்துடன் இவருக்கு தனி ரசிகர் பட்டாளே உருவானது. இதைத் தொடர்ந்து இவருக்கு நெஞ்சம் மறப்பதில்லை, மாப்பிள்ளை போன்ற சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் கடைசியாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி இருந்த திருமதி ஹிட்லர் என்ற தொடரில் நடித்திருந்தார். அதன் பிறகு இவர் சீரியலில் நடிக்கவில்லை.

இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தன. இவர் மிருதன், சக்ரா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் உள்ளார். இவர் சீரியல் நடிகை சிவரஞ்சனியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

தன்னுடைய குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். இவர் அண்மையில் ஒரு சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் தனது மகள் குறித்து அவர் சொன்ன விஷயம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் எனது மகளுக்கு ஆட்டிசம், மூளை வளர்ச்சி குறைபாடு போன்ற பிரச்சினை இல்லை.

மருத்துவமனைகளில் சோதித்துவிட்டோம். அவளுக்கு Echolalia என்ற பிரச்சினை உண்டு. அப்படியென்றால் நாம் சொல்லும் விஷயத்தை அவரால் சீக்கிரமாக புரிந்து கொள்ள முடியாது. மற்றபடி என் மகள் நன்றாக இருக்கிறார். அவருக்கு எந்த பிரஷரையும் நான் கொடுக்கவில்லை. அவர் என்ன ஆக ஆசைப்படுகிறாரோ அதன்படி ஆகட்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து பார்கவ்வுக்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+