டப்பிங் பேச மறுத்த ரகுவரன்! அடியாட்களை வைத்து மிரட்டிய தயாரிப்பாளர்! 80 களில் பிளாஷ்பேக்!
சென்னை: நடிகர் ரகுவரன் மறைந்தாலும் அவரது நடிப்பாலும், தனித்துவ குரலாலும் அவர் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இதற்கு அவர் நடித்த படங்களே சாட்சி!
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: ரகுவரனின் தம்பி ரமேஷ் ரகுவரனைப் போல நடிக்கும் வீடியோ ஒன்றை காண நேர்ந்தது. கானமயிலாடக் கண்டிருந்த.... ரஜினிகாந்த் படங்களில் கொடும் வில்லனாக ரகுவரன் வளைய வந்தாலும் அவர் நாயகக் கதாபாத்திரங்களும் நடித்துக் கொண்டே தான் இருந்தார்.

தொடக்கத்தில் நாயகக் கதாபாத்திரத்தில் நடித்தாலும் தோல்விகளால் அவருக்கு வாய்ப்பே வரவில்லை. 'ஏழாவது மனிதன்' படத்திற்கு பிறகு மூன்று வருடங்கள் படமின்றி இருந்திருக்கிறார். அப்படி அவர் நெருங்கிய நண்பர் அருண்மொழியோடு வாய்ப்பு தேடி அலைவார். அருண்மொழியும், ரகுவரனும் ருத்ரய்யா வீட்டில் கூடி பேசிக் கொண்டிருப்பது தான் தின வழக்கம்.
ஒரு நாள் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் எஸ்.பி.முத்துராமனிடம் ரகுவரனை அருண்மொழி அறிமுகப்படுத்த 'மிஸ்டர் பாரத்' படத்தில் வில்லனாக வாய்ப்பு தருகிறார். அவரின் நாயக தோற்றத்தை மறைக்க தாடி, கூன் விழுந்தது போல் நடப்பது என 'கஷ்டப்பட்டு' வில்லனாக்கி இருக்கிறார் எஸ்.பி.எம்.
அனந்து-அருண்மொழி 'அவள் அப்படித்தான்' படத்தில் இணைந்து பணியாற்றிய பழக்கத்தில் அனந்துவிடம் ரகுவரனை அறிமுகப்படுத்த அவர் விசுவிடம் சொல்லி 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தில் சிதம்பரமாக நடிக்க வைக்கிறார். பூவிழி வாசலிலேவில் வில்லனானதும், மக்கள் என் பக்கத்தில் இரண்டாம் நாயகப் பாத்திரம்.
'ஊர்க்காவலன்' படத்தில் கொடூர வில்லன். கூட்டுப் புழுக்கள் படத்தில் கதை நாயகன்.
'மனிதன்' படத்தில் வில்லன். அதே நேரம் 'மைக்கேல் ராஜ்' படத்தில் நாயகன். 'கவிதை பாட நேரமில்லை' கேரக்டர் ரோல். குற்றவாளியில் ஹீரோ. இரண்டில் ஒன்று படத்தில் வில்லன்.
இப்படி ஒரே சமயத்தில் ரசிகர்களை குழப்பாமல் இரு வேறு எதிரெதிர் பாத்திரங்களை ஏற்று நடித்து பெயர் பெற்றவர் ரகுவரன். நாயகனானதும் இவரை வைத்து 88ல் பூஜை போட்டார் இவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஹரிஹரன். படம் 'தூள் பறக்குது. ஹரிஹரன் ரகுவரனை தனது ஏழாவது மனிதன் படத்தில் அறிமுகப்படுத்தியவர்.
முதன்முதலில் படம் இயக்க இறங்கியபோது பிலிம் இன்ஸ்ட்டிடியூட் மாணவர்களை பார்க்கச் சென்று அதில் ரகுவரனை செலக்ட் செய்தார் ஹரிஹரன். 'ஏழாவது மனிதன்' படத்தில் நடித்தாலும் தன் குரல் சரியில்லை என டப்பிங் பேச மறுத்திருக்கிறார் ரகுவரன். அவரையே அடம் பிடித்து பேச வைத்திருக்கிறார் ஹரிஹரன்.
அப்படி டப்பிங் பேச பயந்த ரகுவரன் தான் பின்னாளில் தன் குரலாலேயே பாத்திரத்தின் தன்மையை உணர வைத்தார். 88ல் படப்பிடிப்பு தொடங்கிய உடனே தயாரிப்பாளர் நிறுத்தி விட்டார். திரும்ப 90ல் ஆரம்பித்து கதையை தயாரிப்பாளர் மாற்றியதால் சண்டை வந்து திரும்பவும் படம் நின்று போனது.
திரும்ப இயக்க வேண்டும் என தயாரிப்பாளர் 93ல்அழைத்த போது மறுத்திருக்கிறார் ஹரிஹரன். உடனே அடியாட்களோடு வந்து மிரட்டி படத்தை இயக்க கொண்டு போயிருக்கிறார் தயாரிப்பாளர். ஹரிஹரனும் ஒரு வழியாக படத்தை முடித்துக் கொடுக்க படம் அவருக்கே சுத்தமாக பிடிக்கவில்லை.
'தூள் பறக்குது' 5 வருட தயாரிப்புக்குப்பிறகு வெளியாகி ஊத்திக் கொண்டது. ரகுவரனின் உழைப்பும் வீணானது. ரயிலின் இரண்டு தண்டவாளங்கள் போல் ஒரு பக்கம் நல்ல நாயகன், ஒரு புறம் கொடூர வில்லன் என அந்த ரயில் நன்றாக பயணித்துக் கொண்டு தான் இருந்தது.
தேவையற்ற பழக்கங்களால் அதற்கு அடுத்த வருடம் 'காதலன்' மூலம் மீண்டும் டெர்ரர் வில்லனாக மாற வேண்டி இருந்தது ரகுவரனுக்கு. இதற்கிடையில் மலையாளத்தில் 'தெய்வத்தின்ட விக்ருதிகள்' படத்துக்காக தேசிய விருது ஒரு ஓட்டில் மிஸ்ஸானது துரதிர்ஷ்டம்.
பி.கு: ஹரிஹரனை அடியாட்களை வைத்து மிரட்டிய அதே தயாரிப்பாளர் சிவசுப்ரமணியன் தான் ரஜினியை சான்ஸ் இல்லை, வண்டி இல்லை...நடந்தே போ என நடக்க வைத்தவர். ராஜ்கண்ணுவின் சகோதரர். இவ்வாறு செல்வன் அன்பு தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications