நான்கு பேருக்கே தெரிந்த ரகசியம் லீக் ஆனது எப்படி? ஜனநாயகனுக்காக களத்தில் வந்த நடிகர் விஷால், ஜீவா!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்' திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ஒரு திரைப்படம் முழுமையாக தயாராகி, தணிக்கை செய்யப்பட்டு இறுதி வடிவம் பெற்ற பின்னரே திரையரங்குகளுக்கு அனுப்பப்படும். ஆனால் இந்த படம் தற்போது இந்த படம் லீக்கான பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இணையத்தில் வெளியான அந்த வீடியோவில் 'Edit Marks' எனப்படும் எடிட்டிங் அடையாளங்கள் தென்பட்டுள்ளன. இது அந்த வீடியோ இறுதி பதிப்பு அல்ல என்பதையும், அது எடிட்டிங் செய்யும் போது பயன்படுத்தப்படும் 'Raw Cut' அல்லது 'Edit Reference' வகை பிரண்டாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியாக இத்தகைய பிரிண்ட் கள் மிகவும் பாதுகாப்புடன் வைக்கப்படுபவை. பொதுவாக இப்படிப்பட்ட பதிப்புகள் இயக்குநர், கதாநாயகன், தயாரிப்பாளர் மற்றும் எடிட்டர் ஆகியோரின் பயன்பாட்டிற்காக மட்டுமே இருக்கும்.

இந்த நிலையில், கசிந்துள்ள வீடியோ இந்த நான்கு தரப்பில் ஏதேனும் ஒன்றிலிருந்து வெளியேறியிருக்கலாம் என்ற சந்தேகம் திரையுலகினரிடையே அதிகரித்துள்ளது. வெளியே இருந்து நடந்த ஹேக்கிங் சம்பவமாக இல்லாமல், உள் வட்டாரத்தில் இருந்து லீக் செய்யப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இதனால், இந்த விவகாரம் சாதாரண லீக் சம்பவமாக இல்லாமல், பாதுகாப்பு குறைபாடாக பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து நடிகர் ஜீவா வெளியிட்ட பதிவில், ஒரு திரைப்படம் உருவாக எவ்வளவு உழைப்பு செலவாகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும், இப்படிப்பட்ட கசிவுகள் அந்த உழைப்பை பாதிக்கக்கூடியவை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரசிகர்கள் சட்டவிரோதமான வழிகளில் இந்த படத்தை பார்க்காமல் திரையரங்குகளில் படம் பார்த்து ஆதரிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், நடிகர் விஷால் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது. அவர் தனது பதிவில், 'ஜனநாயகன்' பட காட்சிகள் கசிந்ததை பார்த்து மிகவும் வருத்தமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஒரு திரைப்படம் உருவாகும் போது அதற்குப் பின்னால் இருக்கும் உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் நேரம் அனைத்தும் இப்படிப்பட்ட லீக்கால் வீணாகிவிடுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த இருபது ஆண்டுகளாக விஜய் படங்களை திரையரங்குகளில் பார்த்து ரசித்து வந்த ரசிகராக, அதே அனுபவத்தை மீண்டும் பெற வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். படம் தியேட்டரில் வெளியாகாமல், ஓடிடி அல்லது தொலைக்காட்சி வழியாக மட்டுமே வெளியானால், ரசிகர்கள் வீட்டிலேயே பார்க்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்ற நம்பிக்கையையும், ரசிகர்கள் சட்டப்படி படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். தணிக்கை வாரியத்தின் முடிவுகளால் படம் வெளியாவதற்கு தள்ளிப் போகலாம் என்றாலும், படம் விரைவில் சட்டப்படி வெளியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில், ஒரு ரசிகர் வெளியிட்ட பதிவும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக விஜய் படங்களை திரையரங்குகளில் பார்த்து ரசித்து வந்ததாகவும், அந்த அனுபவத்தை இழக்க வேண்டிய நிலை வரக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். படம் விரைவில் சட்டப்படி வெளியிடப்பட்டு ரசிகர்கள் முன்னிலையில் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் அவர் பதிவு செய்துள்ளார்.
'ஜனநாயகன்' படம் லீக் ஆனது தொடர்பாக திரையுலகில் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்த கசிவு எப்படி நடந்தது, இதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக, மிகவும் குறைந்த நபர்களுக்கே அணுகல் உள்ள ஒரு பிரதியிலிருந்து தகவல் வெளியேறியிருக்கலாம் என்ற சந்தேகம் இந்த விவகாரத்தை மேலும் கவலைக்குரியதாக மாற்றியுள்ளது.
மொத்தத்தில், 'ஜனநாயகன்' லீக் சம்பவம் ஒரு திரைப்படம் கசிந்தது என்ற அளவில் மட்டுமல்லாமல், திரையுலகின் உள் பாதுகாப்பு முறைகள் குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ள முக்கிய விவகாரமாக மாறியுள்ளது.
-
அரசுப் பேருந்து 1 km ஓடினால் ரூ.53 நட்டம்.. தனியார்மயமாகிறதா போக்குவரத்து துறை? மரிய வில்சன் சிக்னல் -
தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. எந்தெந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்? -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை.. பட்ஜெட் வரை அடக்கமா இருங்க.. இல்லைன்னா காலி! -
பொள்ளாச்சிக்கு நிகரான கொடூரம்.. ஒரு பென்ட்ரைவ்.. 50+ பெண் வீடியோக்கள்.. தவெக நிர்வாகி அட்டூழியம்! -
தமிழ்நாட்டுல இவ்வளவு பாலியல் வன்கொடுமை நடக்குது.. எங்கயா அந்த சிங்கப்பெண் படை.. தெறிக்கும் மீம்ஸ்! -
விஜய்க்கு விஷால் கொடுத்த வித்தியாசமான பரிசு.. கையில் கவனிச்சீங்களா? இது பலருக்கு பாடம் -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
டாஸ்மாக் ஊழியர்கள் 200 பேர் சஸ்பெண்ட்.. பாட்டிலுக்கு 10 ரூபா ஒழிக்காம விடமாட்டேன்.. விஜயின் சபதம்! -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
விஜய்க்கு பெரிய நன்றி சொல்லியே ஆகணும்.. ஏனென்றால்? அவர் இல்லனா ... உருக்கமாக பேசிய பாரதிராஜா தம்பி












Click it and Unblock the Notifications