எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகிகளின் சம்பளம்!! கசிந்த தகவல்கள்.. அதிக சம்பளம் இவருக்குத்தான்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மருமகள்களாக நடிக்கும் நடிகைகளின் சம்பளம் விவரங்கள் இணையதளத்தில் கசிந்துள்ளது.
ஆண் ஆதிக்கத்தால் பெண்கள் படும் கஷ்டங்களை விவரிக்கும் சீரியல் ஆகவும், பெண்களுக்கு முன்மாதிரியான சீரியலாகவும் தற்போது ரசிகர்களின் மத்தியில் எதிர்நீச்சல் சீரியல் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது.
எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் ஜனனி தான் அந்த சீரியலில் அதிகமான சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருகிறாராம்.

எதிர்நீச்சல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் பல நேரங்களில் நெடுந்தொடர்களாக ஒளிபரப்பாகி வரும், அந்த வரிசையில் தற்போது திருச்செல்வன் இயக்கும் சீரியல் இடம் பிடித்திருக்கிறது .திருச்செல்வன் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் அவர் புதியதாக இயக்கி வரும் எதிர்நீச்சல் சீரியலும், ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது. இதற்கு காரணம் இந்த சீரியலில் நடிக்கும் நடிகைகளின் எதார்த்தமான நடிப்பும் ஒன்று என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் .இந்த நிலையில் இந்த சீரியலில் நடிகைகளின் சம்பள விவரங்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

ஜனனியின் சம்பளம்
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடிக்கும் மதுமிதா தான் இந்த சீரியலில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருகிறார். இவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு ஒரு நாளைக்கு 15,000 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறாராம். கன்னட நடிகை ஆக கன்னடத்தில் பல சீரியல்களில் நடித்து தற்போது தமிழுக்கு வந்திருக்கும் ஜனனிக்கு இந்த சீரியல் மூலமாக தமிழ் ரசிகர்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அவரை தொடர்ந்து ஈஸ்வரி கேரக்டரில் எதிர்நீச்சல் சீரியலில் மூத்த மருமகளாக நடிக்கும் கனிஹா 12000 சம்பளம் வாங்கிக் கொண்டு வருகிறாராம்.

ரேணுகாவின் சம்பளம்
கனிஹா பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும் பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பாடகியாகவும் இருந்து வந்துள்ளார். தற்போது இவர் முதல் முறையாக சீரியலில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அஜித், விக்ரம் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த கனிஹா தற்போது ஈஸ்வரியாக சின்னத்திரையின் மூலமாக ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்து விட்டார். அதுபோல நந்தினி கேரக்டரில் நடிக்கும் ஹரிப்ரியா சின்னத்திரை நடிகைகளாக ஏற்கனவே பலருக்கும் பரீட்சையமானவர் தான் .ஆனால் இந்த சீரியலில் இவருக்காகவே பலரும் இந்த சீரியலை பார்த்து வருவதாக கூறி வருகின்றனர். இந்த சீரியலுக்கு நகைச்சுவை கேரக்டரில் பலரையும் சிரிக்க வைக்கும் எதார்த்தமான நடிப்பை காட்டி வரும் நந்தினியை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது என்று சொல்லலாம்.

நந்தினி மற்றும் ரேணுகாவின் சம்பளம்
அந்த வகையில் நந்தினி 13000 முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். அவரைத் தொடர்ந்து ரேணுகா கேரக்டரில் நடிக்கும் பிரியதர்ஷினி பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறாராம். பிரியதர்ஷினி சின்னத்திரை தொகுப்பாளரான டிடி யின் அக்கா என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும், பிரியதர்ஷினி பல திரைப்படங்களிலும் சீரியல்களிலும் ஏற்கனவே நடித்து திறமையானவர். ஆனால் இந்த எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா கேரக்டரில் தத்ரூபமாக நடித்து வருகிறார். ரேணுகா கேரக்டரில் இவருடைய நடிப்பை பார்த்த ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளத்தில் இவருடைய பெயரில் பேன்ஸ் பேஜ் தொடங்கி வருகின்றனர்.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications