விஜய்யை தனியாக அனுப்பி வைத்தது நான்தான்! அதற்கு காரணம் இது! மொத்த சர்ச்சைகளுக்கும் SAC விளக்கம்
சென்னை: நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் கடந்த சில மாதங்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா குறித்து விஜய்யின் அப்பா எஸ்சே சந்திரசேகர் பேசியது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது விஜய் அவருடைய குடும்பத்தை கவனிக்காமல் விட்டுவிட்டார், சொந்த பெற்றோரையும் கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் அதற்கு பதில் சொல்வது போல இது அமைந்திருக்கிறது.

விஜய் மனைவி கொடுத்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், நீதிபதி வழக்கை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் அன்றைய தினம் இருவரும் வீடியோ கால் மூலமாக ஆஜராக அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அந்த தேதியிலேயே இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சங்கீதா விவாகரத்து மனு
இந்த விவாகரத்து விவகாரம் முதலில் வெளிவந்தபோது, சங்கீதா தாக்கல் செய்த மனுவில் விஜய்க்கு நடிகை ஒருவருடன் பழக்கம் இருக்கிறது என்ற கடுமையான குற்றச்சாட்டுகள் இடம்பெற்றதாக கூறப்பட்டது. அந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியவுடன், ரசிகர்களிடையே பெரிய குழப்பம் ஏற்பட்டது. உண்மையில் என்ன நடக்கிறது என்ற கேள்வி பலரிடமும் எழுந்தது.
இதற்கிடையில், நடிகை திரிஷா உடன் ஒரே மாதிரி உடை அணிந்து ஒரு திருமண விழாவில் விஜய் கலந்து கொண்டது கூட இந்த விவகாரத்தை மேலும் பேச வைத்தது. இந்த சம்பவங்கள் இணைந்து, விஜய்யின் இமேஜ் மீது தாக்கம் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் விஜய் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது தன்னுடைய மனைவி கொடுக்கும் குடும்ப பிரச்சனை எல்லாம் வொர்த்தே இல்லை என்று சொல்லி இருந்தார். அதுவும் பெரிதாக பேசப்பட்டது.
விஜயின் குடும்ப பிரச்சனை
இதே நேரத்தில், விஜய் அரசியலில் தனது பயணத்தை தொடங்கியதும் குடும்ப பிரச்சனை அரசியல் விவாதமாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், விஜயும் அவருடைய மனைவியும் சமரசம் நடந்து விட்டதாகவும், ஜீவனாம்சம் கொடுத்து இருவரும் பிரிவதற்கு ஒப்புக்கொண்டதாகவும் சில தகவல்கள் பரவி வந்தன. ஆனால் அவை எந்த அளவுக்கு உண்மை என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த உறுதிப்பாடும் வெளியாகவில்லை.
விஜய் குடும்ப பிரச்சனை கையெழுத்து போட்டு முடிஞ்சாச்சு.. பெற்றோர் நிலை! தப்பா காட்டுறாங்க.. SAC ஆதங்கம்
இப்படியான வதந்திகள் பரவிக்கொண்டிருக்கும் சூழலில் தான், நேற்று நீதிமன்ற விசாரணை நடந்தது என்பதால் இந்த வழக்கு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நேரத்தில், விஜய் நேரடியாக பதில் அளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதற்கு பதிலாக, அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் அளித்த பேட்டி தான் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

விஜய் அப்பா விளக்கம்
அந்த பேட்டியில் அவர், "விஜய்க்கு திருமணம் ஆன உடனேயே, அவர்களுக்கு தனி வாழ்க்கை வேண்டும் என்பதற்காக நான் தான் அவர்களை தனியாக வைத்தேன். அவருக்கு சுதந்திரம் வேண்டும், தனித்துவமாக வளர வேண்டும் என்ற எண்ணமே அதற்குக் காரணம்" என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசும்போது, "எனக்கு ஒரே ஒரு மகள் மற்றும் மகன்தான். மகளை கடவுள் விருப்பப்பட்டு கேட்டாதால் நாங்கள் கொடுத்துவிட்டோம். இப்போது ஒரே மகன் தான். இருந்தாலும் அவரை எங்களுடன் வைத்திருக்கலாம் என்று நினைக்கவில்லை. ஒரு மனிதன் தனியாக நின்றால்தான் முன்னேற முடியும். அதனால் தான் அந்த முடிவை எடுத்தேன்" என்று கூறியுள்ளார். இதன் மூலம், "விஜய் பெற்றோரைக் கவனிக்கவில்லை" என்ற குற்றச்சாட்டுக்கு மறைமுகமாக பதில் அளித்ததாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, ஒரு பக்கம் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு, மற்றொரு பக்கம் சமூக வலைதளங்களில் எழும் சர்ச்சைகள் என இரண்டின் நடுவில் இந்த விவகாரம் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜூன் 15ஆம் தேதி நடைபெறவுள்ள அடுத்த விசாரணை இந்த விவகாரத்திற்கு எந்த மாதிரியான முடிவை கொண்டு வருகிறது என்பதே தற்போது அனைவரின் கவனமாக உள்ளது.
-
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன்












Click it and Unblock the Notifications