கவின் ஆட்டிடியூட் காட்டும்போது, இளையராஜாவுக்கு திமிர் இருக்கக்கூடாதா? அதிசயபிறவியின் சக்ஸஸ்: பிரபலம்
சென்னை: உலகத்தில் எந்த ஒரு இசையமைப்பாளரும் செய்யாததை நான் செய்திருக்கிறேன்.. அதனால் எனக்கு தான் கர்வம் அதிகமாக இருக்க வேண்டும் என இளையராஜா கூறியிருந்த நிலையில், இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கருத்து கூறியிருக்கிறார்.
கவின் பற்றி தொடர்ந்து விமர்சனங்கள் வந்துட்டே இருக்கு.. விஜய்யின் கேரவன்தான் தனக்கு வேண்டும் என்று கேட்கிறாராம்.. நிறைய ஆட்டிடியூட் காட்டுவதாக சொல்கிறார்கள்.. ஒரு கட்டிடத்தின் 2வது மாடியில் ஷூட்டிங் நடந்தபோது, அங்கிருந்த லிப்ட் ரிப்பேர் ஆகிவிட்டது.. லிப்ட் ரெடியாகவில்லை என்பதால், கேரவனில் போய் உட்கார்ந்து கொண்டாராம்.

திமிர் இளையராஜா: 17, 18வது மாடியில் ஷூட்டிங் என்றால் பரவாயில்லை.. 2வது மாடிக்கே லிப்ட் வேண்டும், அது ரெடியானதும் சொல்லுங்க என்று கூறிவிட்டு கேரவனில் போய் உட்கார்ந்து கொண்டாராம். இதுபோன்ற நபர்களை ஒப்பிடும்போது, இளையராஜா திமிராக இருப்பதில் தப்பே இல்லை..
திருவாசகம், சிம்பொனி என பலவகையான இசையை தந்தவர் இளையராஜா.. 82 வயதுக்கு மேற்பட்ட இசையமைப்பாளர்.. மிகப்பெரிய மேதையாக இன்றுவரை விடுதலை 2 வரை இளையராஜா முன்னணியில் இருந்து வருகிறார்.. நம்முடைய வாழ்வில் கலந்துள்ள பலவித உணர்வுகளுக்கு இளையராஜாவின் இசை மருந்தாகி வருகிறது. எத்தனையோ உயரத்துக்கு சென்றுள்ளவர், திமிராக இருப்பதில் தப்பில்லை.
கங்கை அமரன்: 1980, 90-களில் அவரிடம் ஆட்டிடியூட் இருந்ததாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.. இதை கங்கை அமரனே பல பேட்டிகளில் சொல்லி உள்ளார்.. தனக்கு வாய்ப்பு வருவதை அண்ணன் விரும்பவில்லை என்று வெளிப்படையாகவே சொன்னாராம்.. இசையமைப்பாளராக தனக்கு வாய்ப்பு வந்ததை பற்றி இளையராஜாவிடம் சொன்னதற்கு, "உனக்கெல்லாம் என்ன தெரியும் இசையை பற்றி? நீயெல்லாம் இசையமைப்பாளரா?" என்று தன்னை திட்டியதாக சொல்லி உள்ளார்.
அந்த காலகட்டத்தில் அவரிடமிருந்த ஆட்டிடியூட் கண்டிக்கத்தக்கது.. தன்னை சாமியாக பார்க்க வேண்டும், கடவுளாக போற்ற வேண்டும், எல்லாருடனும் சேர்ந்து உட்கார்ந்து பேசக்கூடாது, ஒன்றாக இணைந்து சாப்பிடக்கூடாது என்றெல்லாம் சொல்வாராம்..
தெய்வப்பிறவி: ஆனால், இன்று இளையராஜா நிறைய பக்குவப்பட்டுள்ளார்.. இளையராஜா போலவே, மற்ற இசையமைப்பாளர்களின் ஆயிரக்கணக்கான பாடல்களும், மக்களை மயக்கியிருக்கிறதா? உண்மையிலேயே அவரை தெய்வப்பிறவி என்று சொல்வேன். அதற்காக தெய்வமாக அவரை கருதவில்லை.. அதிசயப்பிறவி என்று சொல்லலாம். AI தொழில்நுட்பத்துடன் போட்டி போடுவேன் என்று சொல்கிறார் என்றால், தன்னுடைய இசை மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கையை பாருங்கள்.
உயரத்தை அடைந்துவிட்டால் திமிராக பேசலாமா? என்று கேட்கக்கூடாது. "எனக்கு ஏன் அந்த திமிர் இருக்கக்கூடாது? எப்பேர்ப்பட்ட இசையை தந்திருக்கிறேன்?" என்று சொல்வதில் தவறில்லையே.
பக்குவம்: இளையராஜா சர்ச்சையாக பேசிவிட்டார், திமிராக பேசிவிட்டார் என்றெல்லாம் சொல்ல தேவையில்லை.. அவர் அப்படி பேசுவதற்கான உரிமையை நாம்தான் அவருக்கு தரவேண்டும்.. வயது ஒரு மனிதனுக்கு அனைத்துவிதமான பக்குவத்தையும் கற்றுத்தரும்.. அதுபோல, பல கஷ்டங்கள், சிக்கல்கள், குடும்பத்தின் இன்னல்கள், மனைவி, மகள் இழப்பு இப்படி அனைத்தையும் தாண்டி, பக்குவப்பட்ட மனிதராக இருக்கிறார் என்பதே உண்மை" என்று பேசியிருக்கிறார் பாலாஜி பிரபு.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications