காசு இல்லாமல் வறுமையிலா இருக்கிறார்.. போட்ட மியூசிக்கிற்கு உரிமை கேட்ட இளையராஜா மீது பிரபலம் தாக்கு
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து கூலி திரைப்படத்தில் இணைந்திருக்கிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. அனிருத் இசையில் இந்த படம் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது.
கடந்த மாதமே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட இருக்கிறது.
இந்த நிலையில் கூலி படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த டீசரில் இளையராஜா இசையில் ரஜினிகாந்த் நடித்த "தங்க மகன்" படத்தில் இடம்பெற்ற "வா வா பக்கம் வா" என்ற பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் தன்னுடைய இசையை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது அதிகமாக இணையத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஒரு தரப்பினர் இளையராஜா செய்தது சரி என்று கூறுகின்றனர். இன்னொரு தரப்பினர் இளையராஜா இப்படி செய்யக்கூடாது என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகர் "ராஜா கம்பீரன்" தன்னுடைய கருத்தை ஃபிலிமிபீட் தமிழில் தெரிவித்து இருக்கிறார். அதில் அவர் பேசுகையில், சில வருடங்களுக்கு முன்பு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 96 என்று ஒரு படம் வெளியானது.
அந்த படத்தில் இளையராஜாவின் பாடல்கள் அதில் பாடப்படுவது போன்று காட்சிகள் இருக்கிறது. இளம் வயதில் கதாநாயகி பாடுவது போன்று காட்சிகள் இருக்கிறது. ஒரு பருவத்தை நினைவு கூறுவது போல் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்துவது இளையராஜாவுக்கு கௌரவமா? அசிங்கமா? பாரதியார் கவிதைகளை எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். அதற்கு பாரதியாரின் பேரன் கேஸ் கொடுக்கிறாரா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதற்கு செய்தியாளர் அவரிடம் அது சரிதான் ஆனால் இப்போது இளையராஜா இருக்கிறாரே அப்போ அவரிடம் கேட்டுவிட்டு பயன்படுத்திருக்கலாமே என்பதுதான் அவருடைய ஆதங்கம் என்று சொல்ல அதற்கு பதில் அளித்த ராஜ கம்பீரன், நாட்டுப்புற பாடல்களை வைத்து இசை அமைக்கிறார்கள். அதற்கு நடவு செய்கிறவர்களிடம் சென்று அனுமதி கேட்கிறார்களா? இளையராஜா திரைப்படங்களில் இசையமைப்பதற்கு சம்பளம் வாங்குகிறார்.

ஏற்கனவே அவருக்கு எப்எம்மில் பணம் கொடுக்கிறார்கள். ராயலிட்டி பணம் கொடுக்கிறார்கள். முறைப்படுத்தப்பட்ட வணிக ரீதியான எல்லா நிறுவனங்களிலும் அவருடைய பாடல்களை பயன்படுத்துவதற்கு அவருக்கு பணம் கொடுக்கிறார்கள். ஆனால் யாராவது ஒருத்தர் கோவிலில் கச்சேரியில் பாடுகிறார் என்றால் அதற்கு பணம் கொடுக்க முடியுமா? அப்படி எல்லாம் பாடும்போது இவர் பெருந்தன்மையாக நம்முடைய பாடல்களை வைத்து எல்லாரும் வாழ்கிறார்கள் என்று மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய மனநிலை கூட அவருக்கு இல்லை.
இளையராஜாவிடம் பணம் இல்லாமல் இருக்கிறதா? எதற்காக இவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. அவருடைய பாடல் வரிகளை பயன்படுத்தியதற்காக வழக்கு தொடர்ந்தால் அவர் காலம் முழுக்க தொடர்ந்து கொண்டே தான் இருக்க வேண்டும். அவர் என்ன அவ்வளவு வறுமையில் இருக்கிறாரா? என்று ராஜ கம்பீரன் கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications