இசை செய்தால் அது சர்வாதிகாரம்...நிரூப் செய்தால் டாஸ்கா?? கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: போன வாரம் அப்படி குதித்த போட்டியாளர்கள் இந்த வாரம் பெட்டிப்பாம்பாக அடங்கி விட்டார்களே.
போனவாரம் நெருப்பின் ஆற்றலோடு இருந்த இசையிடம் ஒத்துழைக்க மறுத்த போட்டியாளர்களை இந்த வாரம் ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.
இசை செய்வது தவறு என்று குறை கூறிய நிரூப் இந்தவாரம் ஆட்டத்தை தொடங்கியிருக்கிறார்.

பிரச்சனையை கிளப்பும் புது டாஸ்க்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இந்த சீசனில் அதிகமாக பிரச்சனைகளை தொடங்க மாட்டார்கள் என்று நினைத்துவிட்டார் போல. அதனால்தான் விதவிதமாக டாஸ்க் என்கிற பெயரில் போட்டியாளர்களுக்கு பிரச்சனையை கிளப்பி வருகின்றனர். இதுவரைக்கும் இல்லாத போட்டியாளர்களின் திறமைகளும், குறைகளும் தற்போது வெளிப்பட தொடங்கியிருக்கிறது. அதுவும் சில போட்டியாளர்கள் நடந்துகொள்வதை பார்த்ததும் ரசிகர்கள் இவரா?? இப்படி என்று புலம்பி வருகின்றனர்.

ஏன் இந்த பாகுபாடு
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் மன நிலையை பார்த்து ரசிகர்கள் நாளுக்குநாள் கமெண்ட் கூறி வருவது வழக்கம்தான். அதுவும் இந்த சீசனில் தற்போது ரசிகர்கள் ஒரு சிலரை பார்த்து மிரண்டு போய் இருக்கின்றனர். ஆரம்பத்தில் இவர்கள் நடந்து கொண்டதற்கும் நாட்கள் செல்ல செல்ல இவர்கள் நடந்து வருவதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு சீசனிலும் ஒருசில போட்டியாளர்களை சக போட்டியாளர்கள் வித்தியாசமான முறையில் நடத்தி வருகின்றனர். இது சீசன் ஒன்றிலிருந்து தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ரசிகர்களின் கருத்து
தற்போது ஒளிபரப்பாகி வரும் ஐந்தாவது சீசனிலும் போட்டியாளர்கள் ஒரு சிலர் இசைவாணியிடம் நடந்து கொள்வது ரசிகர்களுக்கு எரிச்சலூட்டுவதாக இருந்துவருகிறது. அதுமட்டுமல்லாமல் ஆள் பார்த்து இப்படி எல்லாம் செய்கிறார்களா என்று எண்ணத் தோன்றுகிறது என கூறி வருகின்றனர். போன வாரம் பிக் பாஸ் வீட்டை தலைமையேற்று நடத்தி வந்த இசையை இமான் அண்ணாச்சி முதல் பல போட்டியாளர்கள் குறை கூறி கொண்டிருந்தனர். ஆனால் இந்த வாரம் அவர் செய்ததை விடவும் பல மடங்கு நிரூப் செய்து கொண்டிருக்கிறார். அதற்கு அனைவரும் எதிர்ப்பு காட்டாமல் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். இதுதான் தற்போது பேசும் கருத்தாக இருந்து வருகிறது.

காண்டாகும் நெட்டிசன்கள்
நேற்றைய முதல் நாளில் அக்ஷரா விடம் பழி வாங்குவதை தொடங்கிய நிரூப் தற்போது சக போட்டியாளர்கள் அனைவரிடத்திலும் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார். தான் செல்லும் நேரத்தில் தான் பெட்ரூம் அறையில் இருக்க வேண்டும் என்று இவர் போட்ட ரூல்ஸ் பின்பற்றாதவர்களுக்கு பச்சை மிளகாயும், பாகற்காயும் கொடுத்து சாப்பிட சொல்லி தண்டனை கொடுத்திருக்கிறார். இதைப் பார்த்ததும் ரசிகர்கள் கலாய்த்து கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர். போட்டியாளர்கள் எப்போதுதான் இந்த பாகுபாடு பார்ப்பதை விடுவார்கள் என்று சிலர் அலுத்து வருகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications