சமையல் கட்டுக்குள்ள போனே! முதல் டெட்பாடி நீதான்! ரோபோ சங்கர் மகளை மிரட்டிய மாமா! ஏன் பாண்டியம்மா?
சென்னை: ரோபோ சங்கரின் மகள் வாழைப்பழம் ஐஸ்கிரீம் தயாரித்து அவருடைய வருங்கால கணவரின் வாயை ஒட்ட வைத்துவிட்டாராம்.
இந்த பொறப்புத்தான் நல்லா ருசித்து சாப்பிட கிடைத்தது... இந்த பாடல் எத்தனை பொருத்தமானது. இந்த ஒரு ஜான் வயிற்றுக்காகத்தான் கம்பி மேல் நடக்கிறவர்கள் முதல் கம்ப்யூட்டரில் வேலை பார்ப்போர் வரை கஷ்டப்படுகிறார்கள்.

அந்த வகையில் பழைய சோறாக இருந்தாலும் ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும். நாடு முழுவதும் 77ஆவது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சமைக்க தெரியாத பிரபலங்கள் வெர்சஸ் சமைத்து ருசித்து சாப்பிட தெரிந்தவர்கள் என்ற தலைப்பில் தமிழா தமிழாவில் நிகழ்ச்சி நடந்தது.
இதில் முதலில் நடிகை தீபா பேசுகையில் பழைய சோறும் கருவாட்டுக் குழம்பும் இருந்தால் போதும் நான் உயிரையே கொடுப்பேன் என்றார். பின்னர் நடிகை ஷாம்லி தான் இறால் தொக்கு நன்றாக செய்வேன் என்றார். எதிர்திசையில் அவருடைய கணவர் சுகுமார் இருந்தார். அவரிடம் ஷாம்லிக்கு தெரியாத சமையல் எது என கேட்ட போது, சுகுமார் ரசம் வைப்பார் பாருங்க.. அவரே சாப்பிட்டு பார்த்து பாராட்டி கொட்டிவிடுவார் என்றார்.
அப்போது ஷாம்லி சார் எனக்கு எல்லா சமையலும் வரும் ஆனால் இந்த ரசம் மட்டும் வரமாட்டேங்கிது என்றார். அதற்கு நெறியாளர் ரசம் எப்படி செய்வீர்கள் என கேட்டதற்கு, புளி தண்ணீர் , தக்காளி, வெங்காயம், பூண்டு,, கொத்தமல்லி, கருவேப்பிலை, புதினா என சொல்ல ரசத்திற்கு வெங்காயமா என நெறியாளர் கேட்டார்.
அது போல் மெரினா கடற்கரையில் கடை வைத்திருக்கும் சுந்தரி அக்கா வந்திருந்தார், அவருடைய மீன் குழம்பு எப்படி ருசியாக இருக்கிறது என்பதை தெரிவித்தார். மேலும் அவர் வைக்கும் மீன் குழம்பு ரஜினிகாந்த் வீட்டிற்கும் பார்சல் சென்றதாம். அவருடைய கடையில் சிம்பு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் சாப்பிட்டுள்ளார்கள்.

அது போல் பெசன்ட் நகர் ரவி பேசுகையில் சுவையாக மீன் குழம்பு வைப்பது எப்படி என்றும் அதற்கான மசாலா தயாரிப்பது குறித்தும் என் அம்மா சொல்லிக் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். இன்று நான் வைக்கும் மீன் குழம்பு அவர் வைப்பது போல் இருக்கும் என்றார். அதன் பின்னர் பிரபலம் ஒருவரிடம் சமையல் செய்து சொதப்பியது எது என கேட்டார் நெறியாளர்.
அதற்கு அந்த பிரபலமோ நான் தீபாவளிக்கு குலாப் ஜாமுன் செய்தேன். எல்லாருக்கும் கொடுத்தேன். சாப்பிட்டு விட்டு கல் போன்று இருப்பதாக கூறினார்கள். உடனே உள்ளே போய் பார்த்தேன். அப்போதுதான் பஜ்ஜி போண்டா மாவில் குலாப் ஜாமுன் செய்திருக்கிறேன் என்பது தெரியவந்தது என்றார். அது போல் பாண்டியம்மா, ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா பேசுகையில் ஒரு முறை பனானா ஐஸ்கிரீம் செய்தேன்.
அதை முதலில் அம்மாவிடம் கொடுத்தேன் நன்றாக இருப்பதாக தெரிவித்தார். பிறகு மாமாவிடம் கொடுத்தேன். அவர் வாயில் போட்டதுமே வாய் ஒட்டிகிட்டது, பிறகு அந்த வழவழப்புத்தன்மை போக 2 அல்லது 3 நாட்கள் ஆனது. அது முதல் இனி சமையல் கட்டுக்குள் போன முதல் டெட்பாடி நீதான் என கூறினாராம். இந்திரஜா, தனது முறைமாமனான டாக்டர் தொடர்வோம் கார்த்திக் என்பவரைத்தான் திருமணம் செய்து கொள்ள போகிறார். இன்னும் தேதி குறிக்கப்படவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications