பிக் பாஸில் அசீம் வெற்றியில் முறைகேடு..கேட்டால் கொலை மிரட்டல்..பிரபல யூடியூபர் புகாரால் பரபரப்பு
சென்னை: விஜய் டிவியில் சமீபத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்தது.
அதில் வெற்றியாளராக சின்னத்திரை நடிகர் அசீம் அறிவிக்கப்பட்டார்.
அதில் முறைகேடு இருப்பதாக பிரபல youtube ஜோ மைக்கேல் ஆர் டி ஐ யில் தகவல் கேட்டு மனு அளித்தார்.
இதனால் அசீம் மற்றும் அவருடைய நண்பர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து இருப்பதாக புகார் கொடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இதுவரைக்கும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் பெரும் பரபரப்பும் சர்ச்சைகளும் சிக்கி இருக்கிறது.இந்த சீசனில் வெற்றி பெற்றவராக சின்னத்திரை நடிகர் அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது குறித்து ஆரம்பத்தில் இருந்து அடிக்கடி சர்ச்சைகள் வந்த வண்ணமாக இருக்கிறது.
அசீம் வெற்றி பெற்றது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. ஒவ்வொரு வாரமும் அசீம் நாமினேஷன் ஆகி வந்தாலும் அவர் இறுதியில் காப்பாற்றப்பட்டு வந்தார். அது அவருடைய ரசிகர்களால் தான் என ஒரு தரப்பினர் கூறி வந்த நிலையில், இல்லை இது பிஆர் உதவியால் தான் அசீம் ஜெயித்திருக்கிறார் என்று இன்னொரு தரப்பினர் குற்றம் சுமத்தி வந்தனர்.
இந்த சீசனில் அரசியல் பிரமுகராகவும் நடிகராகவும் இருக்கும் விக்ரமன்தான் வெற்றி பெறுவார் என்று பலரும் கூறி வந்த நிலையில் கடைசி நேரத்தில் அசீம் வெற்றி பெற்றது பிரபலங்கள் பலருக்கும் அதிர்ச்சியாக இருப்பதாக தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். அந்த வகையில் அசீம் வெற்றி பெற்றது முறைகேடு இருப்பதாக பிரபல யூட்யூபர் ஜோ மைக்கேல் ஆர்டிஐயில் தகவல் கேட்டு மனு அளித்திருந்தார்.
இந்த நிலையில் மைக்கேல் அளித்த மனுவை திரும்பி பெற கூறி அசீம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தன்னை மிரட்டுவதாக ஜோ மைக்கேல் சென்னை காவல் ஆணையர் ஆணையத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த youtuber ஜோ மைக்கேல் தனியார் நிகழ்ச்சியில் வெற்றி குறித்து பெற்றது சர்ச்சை இருக்கும் நிலையில் அசீமின் வெற்றி குறித்து டெல்லியில் உள்ள இந்தியன் அறக்கட்டளையில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியதாக தெரிவித்திருக்கிறார்.

இதனால் அசீம் மற்றும் அவருடைய நண்பர்கள் தேவராஜ், சிங்காரவேலன் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தான் அளித்த மனுவை திரும்ப பெற கூறி தொடர்ந்து தன்னை மிரட்டி வருவதாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் பேட்டியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசீம் வின் பண்ணுனாருன்னு எல்லாருக்கும் தெரியும். அந்த விஷயத்தில் ஏதோ முறைகேடு நடந்திருக்கிறது என்று ஆர்பிஐயில் நான் பதிவு செய்திருக்கிறேன். அதை நான் பிரஸ்ஸில் எங்கும் போடவில்லை. என்னோட twitter பக்கத்தில் பகிர்ந்து இருந்தேன். அதை டெலிட் செய்ய சொல்லி அசீம் அவருடைய ஆதரவாளர்களான தேசிங்க சோழன், சிங்காரவேலன், இமான் அவர்கள் நான்கு பேரும் தினமும் மூன்று மணி நேரம் என்னைப் பற்றி யூடியூபில் அவதூறாக கருத்து தெரிவிக்கிறார்கள். பிறகு போன் பண்ணியும் என்னை மிரட்டுகிறார்கள்.அதில் அசீம் தான் மாஸ், அசீம் தான் கெத்து என்று கூறுகிறார்கள் என கூறி இருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications