ராஜலட்சுமி ஜீன்ஸ் போட கூடாதா? செந்தில் உயரத்துக்கு போக கூடாதா? நாட்டுப்புற தம்பதி மீது ஏன் வதந்திகள்
சென்னை: கிராமத்தில் பிறந்து வளர்ந்து, படிப்படியாக முன்னேறி இன்று வெளிநாடுகளுக்கு தம்பதி இருவரும் செல்கிறார்கள்.. இப்போதுகூட ஆஸ்திரேலியாவின் பப்புவா நியூ கினியா என்ற தீவுக்கு சென்றிருக்கிறார்கள்.. அங்கு நிறைய தமிழர்கள் இருப்பதால் கலை நிகழ்ச்சிக்கு சென்றிருக்கிறார்கள்.. அங்கு ஒரு தமிழர்தான் பிரதமராக உள்ளார்.. இந்த தம்பதியை அவரே வரவேற்றுள்ளார்.. இதெல்லாம் சிலரால் பொறுத்து கொள்ள முடியவில்லை" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு.
Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் பத்திரிகையாளர் செய்யாறு பாலு, "நாட்டுப்புறப் பாடகர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தனர்..

அதில், "நாங்க இன்னும் உயிரோட இருக்கிறோம்... குத்துக்கல் போல இதோ பேசிட்டு இருக்கோம்.. நாங்க செத்து போகல. உங்ககிட்ட முன்னாடிதான் பேசிட்டு இருக்கோம். இது போலி வீடியோ கிடையாது. எங்களைப் பாருங்க. ஏன் இப்படி வதந்தியை பரப்புறீங்க? உங்களுக்கு என்னாச்சு? நாங்க மேல வருவது உங்களுக்கு பிடிக்கலையா? நாங்க என்ன பாவம் பண்ணோம்?" என்று உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தனர்..
போலி வீடியோக்கள்
இந்த தம்பதி இப்படி பேசியதை பார்க்கவே பாவமாக இருந்தது. இதற்கு காரணம், சில கேடுகெட்ட யூடியூப் சேனல்கள், பிரபலமானவர்கள் திடீரென இறந்துவிட்டதாக கூறி, அது சம்பந்தமான போலி Thumbnail உருவாக்கி வீடியோக்களை வெளியிடுகிறார்கள்.. இதுபோன்ற யூடியூப் சேனல்களுக்கு மனசாட்சியே இல்லையா? இப்படிதான் வியூவ்ஸ் எடுத்து, சம்பாதிக்கணுமா? தெரியவில்லை..
கடவுள் இருக்கும் இடத்தில் சாத்தான்கள் இருக்கும் என்பார்கள், ஆனால் இந்த யூடியூப் சேனல்கள் மிகப்பெரிய சாத்தான்களாக இருக்கிறார்கள். அப்படித்தான் செந்தில் - ராஜலட்சுமி பற்றியும் வீடியோ போட்டிருக்கிறார்கள்..
நான்கைந்து சேனல்களில் செந்தில், ராஜலட்சுமி படத்தை போட்டு, கண்ணீர் அஞ்சலி செலுத்துவது போலவும், பிரபலங்கள் மலர் கொத்து, பூமாலைகளுடன் வருவது போலவும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்கள்.. இதைப்பார்த்து பல கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து விட்டனர்.
வதந்திகள்
ராஜலட்சுமியின் சொந்த ஊர் திண்டுக்கல் பக்கத்திலும், செந்திலின் சொந்த ஊர் புதுக்கோட்டை பக்கத்திலும் உள்ளது. இருவருமே கீழ்நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்தவர்கள்.. இப்படி இவர்களை தாக்குவது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.
இதை பற்றி செந்திலிடமே நான் போனில் பேசி விசாரித்தேன்.. "சார், ஊரில் இருந்தெல்லாம் போன் வந்துவிட்டது.. எங்களுக்கு என்ன ஆச்சோ என்று ஊரில் ஒன்று கூடி பேசியிருக்கிறார்கள். உடம்பு முடியாம இருக்கறீங்களா? சீரியஸா இருக்கறீங்களா?" என்றெல்லாம் எங்களுக்கு போன் செய்து கேட்டார்கள்.. வதந்தி பரப்பியவர்களை சும்மா விடாதீங்க, எங்களுக்கு இரங்கல் வீடியோ போடும் அளவுக்கு நாங்கள் என்ன பாவம் செய்தோம்" என்று வெகுளித்தனமாக கேட்டார்..
உலக மேடையில் நாட்டுப்புற தம்பதி
ஒருவர் கயிறைப் பிடித்து மேலே ஏறும்போது, அதைப் பொறுக்க முடியாமல் கயிறைப் பிடித்து இழுக்கும் உணர்வுதான் இதுபோன்ற வீடியோக்கள்..
கிராமத்தில் பிறந்து வளர்ந்து, படிப்படியாக முன்னேறி இன்று வெளிநாடுகளுக்கு தம்பதி இருவரும் செல்கிறார்கள்.. இப்போதுகூட ஆஸ்திரேலியாவின் பப்புவா நியூ கினியா என்ற தீவுக்கு சென்றிருக்கிறார்கள்.. அங்கு நிறைய தமிழர்கள் இருப்பதால் கலை நிகழ்ச்சிக்குச் சென்றிருக்கிறார்கள்.. அங்கு ஒரு தமிழர்தான் பிரதமராக உள்ளார்.. இந்த தம்பதியை அவரே வரவேற்றுள்ளார்.. இதெல்லாம் சிலரால் பொறுத்து கொள்ள முடியவில்லை.
ஜீன்ஸ் - ராஜலட்சுமி
"இதுங்களுக்கு வந்த வாழ்வு பாரு" என்று தொடங்கி, சொல்ல முடியாத வார்த்தைகளால் கமெண்ட்களை போட்டு வன்மத்தை சிலர் கொட்டி வருகிறார்கள்..
ஒருமுறை நான் ராஜலட்சுமியை பேட்டி எடுத்தபோது, "நான் ஜீன்ஸ் அணிந்ததற்கு, என்னை பலரும் மோசமாக பேசினார்கள்.. பெண்கள் இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்று ஏதாவது உள்ளதா?
ஏன், நாங்க கார் வாங்க கூடாதா? நாங்க நல்ல நிலைக்கு வரக்கூடாதா? நான் ஜீன்ஸ் போடக்கூடாதா?" என்று ராஜலட்சுமி கேட்டிருந்தது மிக மிக நியாயமான கேள்வி..
உயரத்தில் தம்பதி
எழுத்தாளர் பாலகுமாரன் ஒரு பேட்டியில், "இறப்பு பற்றியான கதைகளையோ இறப்பு பற்றியான எழுத்தையோ கொண்டு வரக்கூடாது... மனிதன் அதில்தான் ரொம்ப பலவீனமானவன்.. இறப்பு என்றாலே மனிதன் உடைந்துவிடுவான்.. எப்போதுமே பாசிட்டிவான விஷயங்களையே சொல்ல வேண்டும்.. அதனால்தான் என்னுடைய கதைகளிலும் இறப்பு பற்றின விஷயத்தையே சொல்ல மாட்டேன்" என்று கூறியிருந்தார்.
எனவே நம்முடைய பாரம்பரியமான நாட்டுப்புற கலையை உலகம் முழுக்க பாடிக் கொண்டிருக்கிற செந்தில் கணேஷ், ராஜலட்சுமி, எவ்வளவு மோசமாக விமர்சித்தாலும், அவர்களின் புகழ் குறைய போவதில்லை.. அவர்கள் இன்னும் மேன்மேலும் வளர்வார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications