கணீர் குரலால் அம்பேத்கர் பாடலை அனல் பறக்க செய்த இசைவாணி.. அரண்டு போன ரசிகர்கள்
சென்னை: நீலம் படையின் கலக்கலான இசையோடு இசைவாணி பாடிய பாடல் வைரலாக பரவி வருகிறது.
Recommended Video
அம்பேத்கார் பாடலை மார்கழி மக்கள் இசையில் அனல் பறக்க செய்துள்ளார்.

கானா பாடலில் கலக்கல்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் தன்னுடைய கானா பாடலில் கலக்க தொடங்கியிருக்கும் இசைவாணி தற்போது செய்த செயல் வேற லெவல் வைரலாகி வருகிறது. பலருக்கும் பரிச்சயமான இவருடைய காந்தக் குரல் மூலமாக தற்போது அம்பேத்கர் புகழைப் பாடியிருக்கிறார். பா ரஞ்சித் தொடங்கி வைத்திருக்கும் மார்கழி மக்கள் இசையில் தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கும் இசைவாணி அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். ஒரு பக்கம் ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கும் போது மற்றொரு பக்கம் நெட்டிசன்கள் வழக்கம்போல கலாய்த்து வருகிறார்கள்.

வெற்றிக்கு கிடைத்த வரவேற்பு
தன்னுடைய திறமையை தனக்கான இடத்தில் சிறப்பாக காட்டவேண்டும் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் ஒரு சில போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ஒரு சில நபர்களும் வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் தான். அந்த மாதிரிதான் இசையும் தன்னுடைய காந்தக் குரலால் காணாபாடல் மூலம் கலக்கி வருகிறார். இவருடைய பாட்டுக்கு பலபேர் ரசிகர்களாக இருக்கின்றனர். ஆனால் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய விளையாட்டை சரியாக விளையாடவில்லை, தன்னுடைய கருத்துக்களை சரியாக எடுத்து உரைக்க வில்லை என்று ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தாலும் 50 நாட்கள் வரைக்கும் இவர் இந்த வீட்டிற்குள் இருந்தது இவருடைய வெற்றிக்கு கிடைத்த வரவேற்பு தான் என்று பலர் கூறி வருகின்றனர்.

இசை வாணியின் கருத்து
தன்னைப் பற்றி நெகட்டிவ் ஆக பேசுபவர்களுக்கு தான் எப்போதும் செவிசாய்த்த விட கூடாது பேசுபவர்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருக்க தான் செய்வார்கள். அவர்களின் கேள்விகளுக்கு நாம் பதில் கூற வேண்டிய அவசியமும் இல்லை என்று ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது இசைவாணி கூறியிருந்தார். அதே தான் தற்போதும் செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு தன்னுடைய பாடல் துறையில் மீண்டும் கவனத்தை செலுத்தி வருகிறார். இதனால் இவருடைய ரசிகர்கள் இவருக்கு ஆதரவு அதிகமாக கொடுத்து வருகின்றனர்.

அதிரும் அம்பேத்கர் பாடல்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு பாதையிலே இசைவாணி வெளியேறும்போது பலர் பீல் பண்ணி வந்தனர். ஆனால் தற்போது இவர் தன்னுடைய திறமையை வெளிக்காட்டும் நேரம் வந்துவிட்டது என்று நிரூபித்து வருவதை பார்த்ததும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் மார்கழி மக்கள் இசையில் இவர் கலந்து கொண்டு ஒவ்வொரு நாளும் பாடல் பாடி வருகிறார். அதில் ஜெய் பீம்
நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அம்பேத்கர் புகழைச் சொல்லும் விதமாக அவரைப் பற்றிய பாடல்கள் ஒலிக்க செய்திருந்தார். அதை கேட்டதும் ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ஆனால் ஒருசில நெட்டிசன்கள் இவர்கள் அம்பேத்கர் பெயரை சொல்லி ஏமாற்றி வருகிறார்கள் என்று குற்றம் சாட்டி வருகிறார்கள்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications