Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராம்குமாருக்கு வந்தது சிக்கல்.. சொத்து விற்கணுமா? பிரபுவுக்கு ஜாக்பாட்! சிவக்குமாரின் அழுகை: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் பிரபு ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், "அன்னை இல்லம்" வீட்டின் முழு உரிமையாளர் பிரபு என்பதால், ஜப்தி செய்த உத்தரவை ரத்து செய்கிறேன். இந்த ஜப்தி ரத்து குறித்து, வில்லங்க பதிவில் திருத்தம் செய்ய வேண்டும்" என்று பதிவுத் துறைக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து திண்டுக்கல் வெங்கடேசன் பேட்டி ஒன்று தந்துள்ளார்.

AramNaadu சேனலுக்கு பேட்டி தந்துள்ள திண்டுக்கல் வெங்கடேசன், "கடன் தொகையை செலுத்தாததால், அன்னை இல்லம் ஜப்தி செய்யப்படுவதாக கடந்த மாதம் கோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது.. அப்போதுதான், ராம்குமார் ஒரு கேம் விளையாடினார்.. அதை கேம் என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது, அன்னை இல்லம் வீடு பிரபுவின் பெயரில் உள்ளது என்று கோர்ட்டில் சொன்னார்.

Television Prabhu Ramkumar

ஆனால், இப்படி சொன்னால் மட்டும் கோர்ட் ராம்குமாரை விட்டுவிடுமா? பிரபுவின் பெயரில் வீடு இருப்பதனால், உங்களுக்கும், வீட்டுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யுங்கள் என்று கோர்ட் உத்தரவிட்டது.. கோர்ட் இப்படி சொன்னதுமே, ராம்குமார் தரப்புக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், பிரபுக்கு நிம்மதி வந்தது.

பிரபுவுக்கு ஜாக்பாட்

வேறு வழியின்றி, ராம்குமார் அபிடபிட் தாக்கல் செய்தார்.. இதையடுத்து, பிரபுவுக்கு வீடு முழு சொந்தமாகிவிட்டது என்றும் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய அவசியம் இலலை என்றும் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. இது பிரபுவுக்கு கிடைத்த மிகப்பெரிய ஜாக்பாட்டாகும்..

யானை தன்மீதே மண்ணை அள்ளி போட்டுக் கொண்டதுபோல, அன்னை இல்லம் வீட்டுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று ராம்குமார் சொல்லப்போய், இன்று இந்த உத்தரவு தரப்பட்டுள்ளது.. இதையடுத்து, அன்னை இல்லம் வீட்டை, ராம்குமார் சொந்தம் கொண்டாடவே முடியாது.. இப்பதான் ராம்குமாருக்கு சிக்கல் ஆரம்பித்துள்ளது.. கடன் தந்தவர்கள், பணத்தை வசூலிக்க வேறு ஆப்ஷனை தேர்ந்தெடுப்பார்கள்.. அப்படியானால் பணம் அவர்களுக்கு தந்தே ஆக வேண்டும்..

சிவக்குமார் அப்படி அழுதாரே

இதேபோல ராம்குமாருக்கு இன்னொரு சிக்கல், அவரது மற்றொரு மகன் சிவக்குமார்.. அன்னை இல்லம் வீட்டில் என்னை சேர்க்கக்கூடாது என்று அடித்து துரத்தினார்கள் என்று பிக்பாஸ் வீட்டில் அழாத குறையாக வெளிப்படையாகவே சொல்லியிருந்தார் சிவக்குமார்.

அன்று சொந்த மகனையே அன்னை இல்லம் வீட்டில் இருக்கக்கூடாது என்று சொன்ன ராம்குமாரால், அவரே அன்னை இல்லம் வீட்டில் இருக்க முடியாத நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது. சிவாஜியின் ஆத்மாதான் இந்த வேலையை செய்வதாக நான் நினைக்கிறேன். பெற்ற மகனே என்றாலும் கஷ்டப்படுத்தக்கூடாது .

சொத்து விற்கப்படுமா

ராம்குமாரின் பேரிலும் நிறைய சொத்துக்கள் இருக்கின்றன.. ராம்குமாரும், துஷ்யந்தும் சேர்ந்தே அப்போதே இதனை சரிசெய்திருந்தால், வெளியே தெரிந்திருக்காது. சிவாஜி என்ற பெயரையே அசிங்கப்படுத்திவிட்டார்கள் ராம்குமார் தரப்பினில்.

யார் கடன் வாங்கினார்களோ அவ்ரகள்தான் கடனை அடைத்தாக வேண்டும்.. சினிமா மூலம் வருமானம் இல்லாவிட்டாலும், ராம்குமாருக்கு சொத்துக்கள் நிறைய உள்ளது.. அதில் ஒரு சொத்தை விற்றாலே 10 கோடி போகும். அதை வைத்து கடனை அடைத்துவிடலாம்.. இந்த கடன் விவாகரமும் முடிவுக்கு வரும்... இன்னும் அசிங்கப்படுத்தாமல், சிவாஜி சாரின் பேரும் காப்பாற்றப்படும்..

இல்லாவிட்டால் கடன் கொடுத்தவர்கள் மீண்டும் கோர்ட்டுக்கு போவார்கள்.. இன்னொரு தீர்ப்பு வந்தால், அது இன்னும் சிவாஜி குடும்பதை அசிங்கப்படுத்துவது போலாகிவிடும்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+